வாழ்நாள் கல்வி

வெண்டை சாகுபடி

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


மண் மற்றும் நடும் காலம்

மண் மற்றும் நடும் காலம் (Bhendi seed sowing Season and Soil)


வெண்டை எல்லா மண்ணிலும் நன்கு வளரும். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண், சாகுபடி செய்வதற்கு உகந்தது. இதனை எல்லா காலத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால் பிப்ரவரி - மார்ச் மற்றும் மே - ஜூன் ஆகிய மாதங்களிலும் நடவு செய்வதை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால்  இந்த மாதங்களில் அதிக வெப்பம் இருக்கும். மேலும் வெள்ளை ஈக்களின் தாக்கமும் வரக்கூடும். அதனால் இந்த மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் வெண்டையை சாகுபடி செய்யலாம். 



நிலம் தயாரிப்பு

நிலம் தயாரிப்பு (Land Preparation)


வெண்டை விதைகள் நடுவதற்கு முன் மூன்று முதல் நான்கு முறை நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது 1 டன் மண்புழு உரம் இடவேண்டும். அதோடு 250 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது. அதன் பின்னர் பாத்தி கட்டி விதைகளை நடவும். விதைகளை நடுவதற்கு முன் விதைகளை விதை நேர்த்தி செய்து நடவேண்டும். 



உர நிர்வாகம்

உர நிர்வாகம் (Fertilizer Management) 


வெண்டை நடவு செய்து 20 நாட்களுக்கு மேல் முதல் களை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ டி.ஏ.பி, மற்றும் 25 கிலோ பொட்டாஷ் ஆகிய உரத்தை கலந்து  செடியின் அருகில் போட்டு மண் அணைக்க வேண்டும். மீண்டும் 15 நாட்களுக்கு ஓருமுறை 20 கிலோ அம்மோனியம் சல்பேட், 15 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை இடவேண்டும். செடி வளர்ச்சி குறைவாக இருந்தால் ஓரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் 19:19:19 கரையும் உரத்தை தெளித்து செடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மல்டிகே உரம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து செடியின்  வளர்ச்சியை கட்டுப்படுத்தி வெண்டை மகசூலை அதிகப்படுத்தலாம்.



இலைவழி ஊட்டம்

இலைவழி ஊட்டம்  ( Nutrients through Leaf)


ஒரு சத யூரியா கரைசலை (1 கிராம் 1 லிட்டர் தண்ணீர்) விதைத்து 30 நாட்கள் கழித்து, 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம் அல்லது 19:19:19 கரையும் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் தெளிக்கவும்

வெண்டைக்கான வளர்ச்சி ஊக்கி

வெண்டைக்கான வளர்ச்சி ஊக்கி (Growth promoter for Bhendi)


வெண்டை செடிகள் பூ பூக்கும் பருவத்திலும், பின்பு 15 நாட்கள் கழித்தும் அதாவது பூ, பிஞ்சு பருவத்திலும் பிளனோபிக்ஸ் 40 பி.பி.எம் பயிர் வளர்ச்சி ஊக்கியை வயலில் ஈரம் இருக்கும் பொழுது மாலை வேளையில் தெளிக்கவும். இதன் மூலம் கூடுதல் மகசூலை பெறலாம்.



வெண்டையில் போரான் பற்றாகுறை

வெண்டையில் போரான் பற்றாக்குறை (Boron deficiency)


வெண்டை நீண்டு கரும் பச்சை நிறத்தில் இருந்தால் சந்தையில் நல்ல விலைக்கு போகும். சில சமயம் நுண்ணூட்ட பற்றாக்குறையினால் காய்களின் தரம் குறைந்து கானப்படும். இதனால் சந்தையில் நல்ல விலைக்கு விற்க முடியாது. வெண்டையில் போரான் பற்றாக்குறையே அதிகம் ஏற்படும். அதாவது காய்கள் வளைந்து இருப்பதற்கான காரணங்கள் பல இருந்தாலும்  போரான் சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த போரான் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி போரிக் அமிலத்தை கலந்து வெண்டை வயலில் தெளித்து போரான் சத்து குறைபாடு வராமல் சரி செய்ய முடியும்.