எங்களை பற்றி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்


கன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு தொழில்நுட்பம், இடுபொருள், நிதி, சந்தை மற்றும் காப்பீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தேவையின் அடிப்படையில் இப்பகுதி ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்து விவசாயிகளுக்கான ஒரு ஆலோசனை மையமாக செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு எளிமையான கையேடுகளை தயாரித்து COL (Commonwealth Of Learning) நிறுவனத்தின் உதவியுடன் திறந்த மற்றும் தொலைதூர கல்வியினை அளித்து வருகிறது. இப்பகுதியில் இயங்கிவரும் கிராம அறிவு மையங்களின், தலைமை மையமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம் சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொருந்துவதற்கான ஒரு இடைநிலை வானிலை முன்னறிவிப்பு மையதினையும் ( ' B ' Type Observatory ) நிர்வகித்து வருகிறது. இம்மையதினை, இந்திய வானிலைத் துறையானது, விவசாய வானிலை கல மையமாக அங்கீகரித்துள்ளது, மேலும் இந்த நிறுமம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை குறித்த நேரத்தில் வழங்கி அரசு திட்டங்களை உரிய நபர்களுக்கு கிடைக்க ஆவண செய்து வருகிறது.