தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டு
விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு
காண்டாமிருக வண்டை இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை
காண்டாமிருக வண்டை இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை
தென்னை மரத்தின் குருத்துப் பகுதியில் மாலத்தியான் பவுடர் 1 பங்கு, மணல் இரண்டு பங்கு கலந்த கலவையை தூவி காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தலாம். அல்லது கார்போஃபுயரான் 50 கிராமுடன் சம அளவு மணல் கலந்து குருத்துக்கிடையில் இட வேண்டும். மேலும் லின்டேன் 0.1 சதம் ( 1.0 கிராம் லிட்டர் தண்ணிர்;) என்ற விகிதத்தில் கலந்து மூன்று மாதத்திற்கு ஓரு முறை எருக்குழியில் இட்டு வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்தவும்.
காண்டாமிருக வண்டை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
காண்டாமிருக வண்டை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த மரம் பழுது நீக்கும்போது வண்டு துளைத்த துவாரத்தில் சிலுக்கு ஊசி (கம்பி) கொண்டு வண்டை குத்தி இழுத்து அழிக்கலாம். அல்லது 250 கிராம் ஆமணக்கை இடித்து அதில் 5 லிட்டர் தண்ணீர் கலந்து மண்பானையில் ஊறவைக்க வேண்டும.; இந்த ஆமணக்கு கரைசலை தென்னம் தோப்பில் 2 - 3 இடங்களில் வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம், அல்லது இனக்கவர்ச்சிப்பொறியை ஒரு ஏக்கருக்கு 1 இடத்தில் வைத்து தாய் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம், அல்லது மரம் ஒன்றுக்கு 100 கிராம் வேப்பம் புண்ணாக்கை குருத்து பகுதியில் இடுவதன் மூலம் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தலாம்.
காண்டாமிருக வண்டு தாக்கம் வராமல் தடுக்கும் முறை
காண்டாமிருக வண்டு தாக்கம் வராமல் தடுக்கும் முறை
காண்டாமிருக வண்டு தாக்கத்தால் சேதமடைந்த மரங்கள் மற்றும் காய்ந்த மரங்களை தோப்பிலிருந்து நீக்கிவிட வேண்டும். தொழு உரத்தை தென்னை மரங்களுக்கு இடுவதற்கு முன் அதிலுள்ள முட்டைக் குவியல்கள், புழுக்கள் மற்றும் சிறிய பெரிய வண்டுகளை எடுத்து அழித்து விட வேண்டும். வண்டுகளைக் கொல்லக் கூடிய மெட்டாரைசியம் பூஞ்சாணத்தை எருக்குழியில் இட்டு கலந்து விட வேண்டும்.
காண்டாமிருக வண்டு தாக்கத்தின் அறிகுறிகள்
காண்டாமிருக வண்டு தாக்கத்தின் அறிகுறிகள்
காண்டாமிருக வண்டு, தென்னை மரத்தின் குருத்து மற்றும் ஓலைகளைக் குடைந்து தின்னும்;, காண்டாமிருக வண்டு இளம் குருத்து ஓலைகளைக் குடைந்து தின்பதால், ஓலை விரித்து பின், வரிசையான சிறு துளைகளைக் காணலாம். மேலும் மையகட்டையின் இருபுறமும் ஓலை ஒரே மாதிரி “வி” வடிவில் வெட்டப்பட்டிருக்கும். சிறிய கன்றுகள் தாக்கப்படும் போது மரம் காய்ந்துவிடும். பெரிய மரங்கள் தாக்கப்படும் போது காய்களின் எண்ணிக்கை குறைந்து மரம் வளர்ச்சியின்றி இருக்கும்.
காண்டாமிருக வண்டு
காண்டாமிருக வண்டு
காண்டாமிருக வண்டு கருமை நிறத்துடன், மேற்புறம் வழுவழுப்பாகவும் தலையின் மேல் ஓரு கொம்பும் இருக்கும். இந்த கொம்பு காண்டாமிருகத்தின் கொம்பு போல் இருப்பதால்; இந்த வண்டுக்கு இப்பெயர் வந்தது. இவ்வண்டுகள் வெண்மையான நீண்ட வட்ட வடிவ முட்டைகளை எருக்குழிகளிலும், அழுகிய குப்பைகளிலும்; விடும்;. இவ்வண்டு புழுபருவத்தில் தலைப்பகுதி பழுப்பு நிறமாகவும், உடல் அழுக்கடைந்த வெள்ளை நிறமாகவும், உடற்கட்டுகளுடன் சுமார் 90 - 100 மி.மீ நீளத்தில் எருக்குழிகளிலும் குப்பைகளிலும் உற்பத்தியாகிறது.