வாழ்நாள் கல்வி

மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கான காரணங்கள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கான முக்கிய காரணங்கள்

மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கான முக்கிய காரணங்கள்


மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக மணிச்சத்து மற்றும் ஜிங்க் சத்து பற்றாக்குறை, விதைகளை மிக நெருக்கமாக நடவு செய்வதாலும் மற்றும் அதிக மழையினாலும் மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமல் போகும்.



நுண்ணூட்ட பற்றாக்குறையும் மணிபிடிக்காமைக்கான காரணமும்

மக்காச்சோளத்தில் நுண்ணூட்ட பற்றாக்குறையும் மணிபிடிக்காமைக்கான காரணமும்.
மக்காச்சோளத்தில்  நுண்ணூட்ட பற்றாக்குறையால் பயிர் வெளிரி, மஞ்சள் நிறமாக காணப்படும். இவ்வாறு இருந்தால் ஆண் பூவிலிருந்து மகரந்தம் குறைவாக வெளிப்படும். இதன் காரணமாக கதிர்கள் சொட்டையாகவும், முழுவதும் மணிகள் இல்லாமலும் இருக்கும். 



மக்காச்சோள கதிரில் நுனி வரை மணிபிடிக்க நுண்ணூட்ட உர நிர்வாகம்

மக்காச்சோள கதிரில் நுனி வரை மணிபிடிக்க நுண்ணூட்ட உர நிர்வாகம்


மக்காச்சோள கதிரில் நுனி வரை மணிபிடிக்கவும், நுண்ணூட்ட பற்றாக்குறையை போக்கவும் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 1 வாரத்திற்குள் சீராக தூவ வேண்டும். அல்லது ஜிங்க்சல்பேட் 10 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். இவ்வாறு செய்வதால் கதிர் நல்ல முறையில் பால் பிடித்து மணிகள் திரட்;சியாகவும் நுனிவரை இருக்கும். மேலும் மகசூலும் அதிகம் கிடைக்கும்.



மக்காச்சோள கதிரில் முழுவதும் மணிபிடிக்க செய்ய வேண்டியவை

மக்காச்சோள கதிரில் முழுவதும் மணிபிடிக்க செய்ய வேண்டியவை


மக்காச்சோள விதைகளை போதிய இடைவேளி இல்லாமல் அடர்த்தியாக நடவு செய்து இருந்தால், ஆண் பூவில் உள்ள மகரந்தம் கீழ் உள்ள பெண் பூவில் விழாமல் போகும். அதனால் கதிர்கள் நுனிவரை மணி பிடிக்காமல் போகும். இதனை தவிர்க்க இரகத்தை பொறுத்து தேவையான இடைவெளி விட்டு விதைகளை நடவு செய்ய வேண்டும். மேலும் அதிகமான காற்று, மழை பெய்தாலும் மக்காசோளத்தில் மகரந்த சேர்க்கை ஏற்;படாமல் போகும.; அதனால் பட்டத்தில் சாகுபடி செய்யவேண்டும். மேலும் மக்காசோள விதைகள் நடவு செய்து ஒரு வாரத்திற்குள் ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.