வாழ்நாள் கல்வி

தக்காளியில் இலை துளைப்பான் தாக்குதல் மேலாண்மை

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


இலை துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்

இலை துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள் 


காய்கறி பயிர்களை (துளைப்பான்) கோலப்பூச்சிகள் தாக்கி சேதப்படுத்தும். அதாவது இலையின் மீது வெள்ளை நிறத்தில் கோடு கோடாக மினுமினுப்புடன் இருக்கும். இவ்வாறு இலைகளில் இருந்தால் அது கோலப்பூச்சியின் (துளைப்பான்) தாக்குதல். இதன் தாக்குதல் அதிகரிக்கும் போது இலைகள் வாடி உதிர்ந்து விடும்.



இலை துளைப்பான் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

தக்காளியில் இலை துளைப்பான் (கோலப்பூச்சியை) தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள்  


தக்காளி பயிரில் இலைதுளைப்பான் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முதலில் இலை துளைப்பானால் துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும் அதன் பிறகு வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளித்து இப்பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் அல்லது ஊதா நிற ஒட்டு பொறியை 1 ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம்.



இலை துளைப்பான் தாக்குதலை இராசயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

இலை துளைப்பான் தாக்குதலை இராசயன முறையில் கட்டுப்படுத்தும் முறை


தக்காளியில் இலை துளைப்பான் (கோலப்பூச்சியை) தாக்குதலை இராசயன முறையில் கட்டுப்படுத்த 2 மில்லி மோனோகுரோட்டோபாஸ் அல்லது குளோரிபைரிபாஸ் மருந்து 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் தெளித்து இப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.