வாழ்நாள் கல்வி

தக்காளி பயிரை தாக்கும் வாடல் நோய்கள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


ஃபுசேரியம் வாடல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை

தக்காளியில் ஃபுசேரியம் வாடல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை


தக்காளியில் ஃபுசேரியம் வாடல் நோயின் அறிகுறியாக முற்றின இலைகள் கருகி சில நாட்களில் விழுந்து விடும். பின்பு இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும். இது மற்ற கிளைகளுக்கும் பரவி செடி முழுவதும் பரவிவிடும். இதனால் செடிகள் வளர்ச்சி குன்றி முழுவதுமாக இறந்துவிடும். இந்நோயை கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். அதன் பிறகு கார்பென்டிசிம் 0.1 சத கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும். தக்காளியை தொடர்ந்து பயிர் செய்யாமல் பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்



பாக்டீரியா வாடல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை

தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை


தக்காளிப்பயிரில் ஏற்படும் கடுமையான நோய்களில் பாக்டீரியா வாடல் நோயும் ஒன்றாகும். இந்நோய் வளரும் செடிகளை விரைவாகவும் மற்றும் முழுமையாகவும் வாடச் செய்யும். கீழ் இலைகள் வாடுவதற்கு முன்பே விழுந்துவிடும். நோய்க்கிருமி தண்டு நாளங்களில் படையெடுத்து திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக நிறமாற்றமடையச் செய்யும். பாதிக்கப்பட்ட செடி பகுதியை வெட்டி சுத்தமான நீரில் மூழ்கச் செய்யும் பொழுது பாக்டீரியா வெள்ளைக் கீற்றை போல் வெளியே வரும். பாக்டீரியா வாடல் நோயினை கட்டுப்படுத்த பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், வெண்டை போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம்.



புள்ளி வாடல் நோயின் அறிகுறி மற்றும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறை

தக்காளியில் புள்ளி வாடல் நோயின் அறிகுறி மற்றும் புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறை 


இலையில் கருப்புநிறப் புள்ளிகள் தோன்றி பின் கருகி விடும். செடியின் வளர்ச்சி குன்றி விடும். பழங்களின் மேல் கருகிய வளையங்கள் ஏற்படும். செடியின் வளர்ச்சியினைப் பாதிக்கும். இந்நோய் இலைப் பேன் மூலம் பரவுகின்றது. விதைக்கும் முன்பு நாற்றங்காலில் ஒரு எக்கருக்கு ஒரு கிலோ அளவில் கார்போபியூரான் பயன்படுத்த வேண்டும். மேலும் இமிடா குளோரைடு 0.05 சதம் அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை ஏதாவது ஒன்றை தெளித்து  கட்டுப்படுத்தலாம்.