தட்டைப்பயிரில் பூச்சி தாக்கம்
விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு
தட்டைப்பயிரை தாக்கும் பூச்சிகள்
தட்டைப்பயிரை தாக்கும் பூச்சிகள்
தட்டப்பயிர் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் பொரியல் தட்டைப்பயிரை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். தட்டப்பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை மிகவும் முக்கியம். இப்பயிரை அசுவினி, தத்துப்பூச்சி, நாவாய்பூச்சி மற்றும் காய்புழு ஆகியவை அதிகம் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்;படுத்துகிறது அதனால் இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
தட்டைப்பயரில் அசுவினி மற்றும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை
தட்டைப்பயரில் அசுவினி மற்றும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை
அசுவிணி இலைகள் மற்றும் இளம் காய்களில் கூட்டமாக இருக்கும். செடிகளில் எறும்புகள் ஊறுவதை வைத்து அசுவினி தாக்கத்தை உறுதிபடுத்தலாம். தத்துப்பூச்சிகள் இலை மற்றும் காய்களில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். அசுவினி தாக்கப்பட்ட தட்டைப்பயிர் செடிகளை களைத்து அழிக்க வேண்டும். பின்னர் மோனோக்குரோட்டோ பாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் அல்லது மீத்தைல் டெமிட்டான் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தட்டைப்பயிரில் நாவாய்ப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை
தட்டைப்பயிரில் நாவாய்ப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை
தட்டைப்பயிரில் நாவாய்ப்பூச்சியின் தாக்குதல் மழை காலததிற்கு பின் அதிகம் இருக்கும். இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். இப்பூச்சியின் தாக்கத்தால் காய்களில் கருப்புநிறப் புள்ளிகள் காணப்படும், இளம் பச்சைக் காய் உதிரும், காய்கள் சிறிதாகயிருக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் காயில் பருப்பு வைக்காது. மேலும் காய்கள் வாடி உதிர்ந்து விடும். சாறு உறிஞ்சும் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி குளோரிபைரிபாஸ்; மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
காய்ப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
காய்ப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
தட்டைப்பயிரில் காய்ப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றலாம். ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் பேசில்லஸ் துரின்ஜியன்ஸிஸ் 2 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறை
காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறை
காய்ப்புழு தாக்கத்தால் மொட்டுகள், பூக்கள், மற்றும் காய்களில் துளை காணப்படும். இப்புழு பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும். காய்ப்புழுவை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 2 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது குயினலபாஸ் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.