வாழ்நாள் கல்வி

கொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


கொத்தவரை சாகுபடி பட்டம்

கொத்தவரை சாகுபடி பட்டம் (Cultivation Season)


கொத்தவரை சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி உள்ள மணற்பாங்கான மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. இதனை ஜூன், ஜூலை மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 4 கிலோ விதை தேவைப்படும். அதிக பூச்சி மற்றும் நோய் தாக்கம் இல்லாத காய்கறி பயிர் கொத்தவரை. கொத்தவரை நிலத்தில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பயிர்களில் ஒன்று. அதனால் கொத்தவரை சாகுபடி செய்யப்பட்ட வயலில் அடுத்து சாகுபடி செய்ய உள்ள பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கும். 



இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் (Leaf Spot)

கொத்தவரையில் இலைப்புள்ளி நோயின் தாக்கத்தால் முதலில் இலைகளில் அடர் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு இந்த புள்ளிகள் மற்ற பகுதிகளிலும் பரவி இலைகள் கருகத் தொடங்கும். இந்த நோய் தண்டு, இலைக் காம்பு மற்றும் மலர்களை பாதிக்கிறது. இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மேங்கோசெப் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். 



கொத்தவரையில் சாம்பல் நோய்

கொத்தவரையில் சாம்பல் நோய் (Powdery mildew) 


கொத்தவரை சாகுபடி ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் விதைத்தால் சாம்பல் நோய் தாக்கம் மிக்வும் குறைவு. மேலும் எம்.டி.யு 1 இரக கொத்தவரையில் சாம்பல் நோயின் தாக்கம் மிகக்குறைவு அதனால் இந்த ரகத்தை சாகுபடி செய்யலாம்.



கொத்தவரையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தம் முறை

கொத்தவரையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தம் முறை (Powdery mildew Control)


கொத்தவரையில் சாம்பல் நோய் பாதிப்பால் இலைகளில் வெள்ளை நிற பொடி தூவியது போல் இருக்கும். இலைகளின் அடிபுறத்திலும் நோயின் பாதிப்பு தென்படும். சாம்பல் நோயை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு ஒருமுறை நனையும் கந்தகத்தூள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்த தெளிக்க வேண்டும் அல்லது டைனோகேப் (காரத்தேன்) 0.05 சதம் தெளிக்க வேண்டும்.  எம்.டி.யு 1 கொத்தவரையில் சாம்பல் நோய் தாக்கமும் குறைவு.