வாழ்நாள் கல்வி

வெங்காயத்தில் வேர் அழுகல் நோய்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறி

வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறி (Symptoms of Root Rot)


வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறியாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, மெதுவாக காய ஆரம்பிக்கும். செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும். பின்பு செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும். வெங்காயம் அழுகி அதன் மீது வெள்ளை நிற பூஞ்சாணம் வளர்ந்திருக்கும். இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

 



இயற்கை முறையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறை

இயற்கை முறையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறை (Root Rot disease control through Organic methods ) 


வெங்காயத்தில் வேரழுகல் நோய் வராமல் தடுக்க நோய் பாதிப்பு இல்லாத தரமான விதை வெங்காயத்தைத் தேர்வு செய்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தியாக 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை, ஒரு கிலோ விதை வெங்காயத்துடன் கலந்து நடவு செய்தல் வேரழுகல் நோய் வராமல் தவிர்கலாம்;. மேலும் வயலைச் சுற்றி தடுப்புப் பயிராக இரண்டு வரிசைக்கு ஒரு வரிசை மக்காச்சோள பயிரை பயிரிட வேண்டும். அதன் பிறகு வெங்காயம் நட்ட 10 நாட்களுக்குள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பேசிலஸ் சப்டிலிஸ் 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.



வேரழுகல் நோயை இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

வேரழுகல் நோயை இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை  ( Root Rot disease control through Chemical  methods)


பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும் அறுவடை செய்த வெங்காயக் குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும். மண்ணில் தாமிர அளவுகள் குறையும் போது வெங்காயம் நோய்க்கு ஆளாகும். அதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும். காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் மண்ணில் இட வேண்டும். வயலில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பன்டாசிம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.