வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

மூலிகை பூச்சி விரட்டி தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தாவர இலைச்சாறு தயாரிக்க தேவைப்படும் பொறுட்கள் நம்முடைய வயலக்கு அருகாமையில் கிடைப்பதாலும்  எளிய தயாரிக்கப்படும் ஒரு பூச்சி விரட்டியாகுதம்  இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்வளத்தை பாதுகாக்கவும்  பூச்சிகளை விரட்டவும் பெரிதும்; உதவுகிறது. ஆகவே நாம்; மண்ணை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

 

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

வேம்பு, நொச்சி, எருக்கு         - 5 கிலோ
ஆடாதொடை,ஆடுதின்னாப்பாலை - 5 கிலோ
பசு மாட்டுக்கோமியம்            - 1 லிட்டர்
தண்ணீர்                         - தேவையான அளவு
பிளாஸ்டிக் டிரம்                 - 20 லிட்டர் கொள்ளளவு

 

 

தயாரிக்கும் முறை

முதல்படி 
 
     வேம்பு, நொச்சி, ஆடாதொடை, ஆடுதின்னாப்பாலை எருக்கு, ஆவாரை, மஞ்சணத்தி போன்ற இலைகளை வெட்டி நொறுக்கி பிளாஸ்டிக் டிரம்மில் போட்டுக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் படி
 
  மாட்டுக்கோமியம் 1 லிட்டரை ஊற்ற வேண்டும்.பின்பு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

மூன்றாம் படி


       இந்தக் கலவையை காலையிலும்,மாலையிலும் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும்.3 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.இப்போது கரைசல் தயாராகிவிடும்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

 

பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு  200 மில்லி என்ற விகித்தில் கலந்து பயிர்களுக்கு மாலை வேளையில் தெளிக்கலாம். நடவு செய்யும் அனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கு 1 முறை தொடர்ந்து தெளிக்கலாம்.

 

 

பயன்கள்

 • இலைப்புழுக்களும் அசுவிணியும் கட்டுப்படும்
 • பூச்சிகள் உணவு உட்கொள்வதை நிறுத்துகின்றன
 • பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டி விடுகின்றது
 • பூச்சிகளின் உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது
 • அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
 • சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
 • பச்சைக்காய்ப்புழுவை கட்டுப்படுத்தும்
 • நூற்புழு தாக்குதல் வராது
 • சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகின்றது
 • 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும்
 • 25 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகின்றத
 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை( RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி) 
திண்டுக்கல் மாவட்டம் -624 705. 
போன் நம்பர் 8870392422
மின்னஞ்சல்- Rsgaseed@gmail.com  
வலைதளம் WWW.L3FTN,COM, rsga.co.in
Facebook/ rsgaseed kannivadi.
Youtube. – rsga seed

 

 

முடிவுரை

இயற்கைமுறையில்  தாவர இலைக்சாறு தயாரித்து பயிருக்கு பயன்படுத்துவதால் இவை ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும் இவற்றை குறைந்த நாளிலேயே தயாரிக்க முடியும்  விவசாயிகள் தொடர்ந்து தாவர இலைசாறை பயன்படுத்தி வந்தால் பயிர்களை; பூச்சி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.