மலர் பயிர்கள்
முன்னுரை
கோழிக்கொண்டை பூ வாசமில்லா விட்டாலும் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக இருப்பதால் மாலைகளில் மகுடம் சூட்டப் பயன்படுகிறது கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களிலும் பூக்கின்றன. சிவப்பு ரோஜா மாலைகளில் இடையிடையே இப்பூக்களும் தொடுக்கப்பட்டு, ரோஜா பூவின் தோற்றத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகின்றன.
ரகம்
ரோஸ், டார்க் சிவப்பு
பட்டம்
வருடம் முழுவதும் நடவு செய்யலாம்
நாற்று எண்ணிக்கை
10 ஆயிரம் நாற்றுக்கள்/ ஏக்கர்.
நிலம் தயாரித்தல்
நன்கு புழுதிபட 5 உழவுகள் போடவேண்டும் களைகள் அதிகம் முளைக்காமல் இருக்க நிலத்தை உழுது நன்கு ஆறப்போட வேண்டும்.
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 2 அடி
செடிக்கு செடி ஒரு அடி
களை நிர்வாகம்
சிறிய செடியாக இருக்கும்போது 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மொத்தம் 5 களைகள் எடுக்க வேண்டியிருக்கும்.
நீர் நிர்வாகம்
கரிசல்மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண்ணாக இருந்தால் வாரம் 2 தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உர நிர்வாகம்
டி.ஏ.பி. 50 கிலோ மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.
அசுவிணி தாக்குதல்
இவை தாக்குவதால் இலைகளில் மேல் பசை போன்ற திரவம் காணப்படும். எறும்புகள் இலைகளில் மேல் ஊறும். இத்தாக்குதலால் மகசூல் குறைய வாய்ப்புண்டு.
கட்டுப்படுத்தும் முறை
மோனோகுரோட்டோபாஸ் 3 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்
அறுவடை தொழில் நுட்பம்
நாற்று செய்த 90ஆம் நாள் பூ பூக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை பூக்களை அறுவடை செய்ய வேண்டும்.
முடிவுரை
கோழி கொண்டை மலர்கள் சாகுபடிசெய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும். விதைத்த 40வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விவசாயிக்கு போதிய வருமானம் தரும் பயிராக இந்த பயிர் விளங்குகிறது. சுமார் இரண்டு மாதம் வரை கோழி கொண்டை பூக்கள் பலன் தரக்கூடியது. ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 20 கிலோவும், அதிகபட்சம் 60 கிலோ வரையும் பூக்கள் கிடைக்கும். இதனால், குறைந்தபட்சமாக 600 முதல் அதிகட்சமாக 2 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு வருமானம் கிடைக்கும் இதற்கு நல்ல விலை கிடைக்கும் கூடியதாக இருப்பதால் அனைத்து விவசாயிகளும் தவறாது சாகுபடி செய்ய முன் வருவோம்