வாழ்நாள் கல்வி

தானியப்யிர்கள்

நாட்டுச்சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள்

தானியப்யிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

நாட்டுச்சோளம் வறட்சி தாங்கி வளரும் தன்மை உடையதால் வறட்சியான இடங்களிலும் விதைக்கப்படுகின்றன. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும்  பயிரிடலாம்.  தானியங்களுக்காகவும்  வேறு சில  கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை ஆகும். இது சிறிய தானியப் பயிராகும். இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு  அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. இது நான்கு மீட்டர் உயரம் வரை வளரும்.    

 

ரகம்

நாட்டுச் சோளம்

 

பட்டம்

சித்திரை, மாசி, கார்த்திகை,

 

விதையளவு

ஒரு ஏக்கருக்கு 7 கிலோ தேவை

 

விதைநேர்த்தி

200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆறிய அரிசி வழகஞ்சி 200 மில்லியில் கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

நான்கு உழவு போட வேண்டும். மண்ணில் கட்டிகள், கல், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் மண் பொதுபொதுப்புடன் இருக்கவேண்டும். கடேசி உழவின்போது 5 டன் மக்கிய தொழுவுரம் நிலத்தில் பரப்பி விட்டு உழவு செய்ய வேண்டும்.

 

விதைப்பு முறை

கடேசி உழவிற்கு முன் விதைத்து விட்டு பிறகு உழவு செய்ய வேண்டும்
சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம்.

 

 

உர நிர்வாகம்

உயிர்உரம்        
அசோஸ்பைரில்லம் 2 கிலோ பாஸ்போபாக்டீயா 2 கிலோ இந்த உயிர் உரங்களை ஆறிய மக்கிய தொழு எரு 100 கிலோவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது தூவி விட வேண்டும்.

அடியுரம்    
ஒரு ஏக்கருக்கு  50 கிலோ காம்ப்ளக்ஸ்  வயலில் ஈரம் இருக்கும்பொழுது சீராக தூவி விடவும்.

நுண்ணுரம்    
ஒரு ஏக்கருக்கு சிறுதானிய நுண்ணுரம் 5 கிலோ , 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம்  இருக்கும்பொழுது  தூவி விட வேண்டும்.     

 

 

நீர் நிர்வாகம்

10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம்

 

களை நிர்வாகம்

ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்தலாம் அல்லது களைக்கொல்லி தெளிக்கலாம்

 

மைக் கருது

சோளக்கதிரில் பவுடர் போல் கருப்பாக இருக்கும்.    
கட்டுப்படுத்தும் முறை    
மழை காலங்களில் கதிர் வராதது போல் பயிர் நடவினை மாற்றி அமைக்க வேண்டும். 

 

 

செவ்வட்டை நோய்

அறிகுறி    
சோளப்பயிரின்  இலையில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி பாதிக்கப்பட்ட பயிர் முழுவதும் இந்நோய் பரவி சிவப்பு கலருக்கு மாறிவிடும். இந்நோயினால் மகசூல் பாதிக்கும்.
    
கட்டுப்படுத்தும் முறை    
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்  டைத்தேன் எம். 45. கலந்து  தெளித்து கட்டுப்படுத்தலாம்.  

முக்கிய குறிப்பு

சித்திரை பட்டமே நல்லது  காரணம் நமது பகுதியிலே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்று அடிக்கும்போது அயல்மகரந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் அதிகரிக்கும்

 

 

 

 

அறுவடைத் தொழில் நுட்பம்

அறிகுறிகள்
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தத் தரும். தானியங்கள் கடினமாகும்.
அறிகுறி தெரிந்த பிறகு ஆட்கள் மூலம் அறுவடை செய்து பேருந்து போகும் ரோட்டில் போட்டு அடிக்கலாம் அல்லது  கதிர் அடிக்கும் இயந்திரத்தின் மூலம் அடித்து சோளத்தை பிரித்தெடுக்கலாம் அல்லது ஆட்களைவிட்டு குச்சியில் தட்டி பிரித்தெடுக்கலாம்.

 

முக்கிய குறிப்புகள்

சோளதில் அதிக அளவு மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து உள்ளதால் சத்தான உணவாக இது கருதப்படுகின்றது சோளத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.மானாவாரி நிலங்களில் சித்திரை மாதம் ஒரு உழவு செய்து மண்ணை ஆறப்போட வேண்டும்.ஆடி மாதத்தில், ஒரு மழை கிடைத்தவுடன், சோளத்தை விதைத்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும்.ஆவணி மாதத்தில் களை எடுக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.சோள விளைச்சலைப் பொறுத்து, மார்கழி மாதக் கடைசிக்குள் அறுவடை செய்து விட வேண்டும்.நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம். நிலத்தில் இருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்தெடுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.