வாழ்நாள் கல்வி

காய்கறி பயிர்கள்

கத்தரி சாகுபடி தொழில் நுட்பங்கள்

காய்கறி பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

கத்தரிக்காய் நமது நாட்டிலுள்ள அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்ய உகந்த பயிராகும் இதன் தாயகம் இந்தியா இதில் இரண்டு வகைகள் உண்டு அவை முள்ளு கத்தரி முள்ளு இல்லாத கத்தரி எனப்படும். கத்தரி பல வண்ணங்களில் உள்ளது. இவை வெப்ப மண்டல பயிராக இருப்பதால் அதிக வெப்ப நிலையிலும் குறைந்த நீரிலும் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது கத்தரிகாயை அனைவரும் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வதால் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. இவற்றில் வைட்டமின் பி, சி மற்றும் இரும்பு, கால்சியம் சத்துக்களும்  உள்ளது.  ஆகவே விவசாயிகள்  கத்தரியை சாகுபடி  செய்து அதிக லாபம் பெற முன் வருவோம்.  

 

ரகம்

நாட்டு ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள்

 

பட்டம்

ஆடி, மாசி

 

விதை அளவு

சாதாரகம் 150 கிராம். / ஏக்கர்.

ஒட்டு விதை 80 கிராம் / ஏக்கர். 

 

விதை நேர்த்தி

ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளுக்கு சுமார் அரை சென்ட்  (230 சதுரஅடி) இடம் நாற்றாங்காளுக்கு தேவை. மேட்டுப்பாங்கான நிலத்தில் ஒரு அடி உயரம், மூன்று அடி அகலம், தேவைக்கு ஏற்றவாறு நீளமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும்.  மண்ணை நன்றாக கிளறி கட்டிகள் இல்லாமலும், களைகள் இல்லாமலும் இருக்க வேண்டும். பாத்திகளில் 200 கிலோ தொழுவுரம் போட வேண்டும். 

பாத்திகளில் விதைகளை வரிசைக்கு வரிசை 10 செ.மீ. இடைவெளியில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.  விதைக்கு மேல் சிறிதளவு மணல் தூவி அதன் மேல் வைக்கோல் இட்டு மூடி நீர் தெளிக்க வேண்டும்.  நாற்றங்காளில் பூஞ்சாண நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டிசம் 1 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்திகளின் மேல்தெளிக்க வேண்டும். 


ஒட்டு விதைகள் விலை அதிகமாக இருப்பதால் குழித்தட்டு நாற்றாங்கால் முறையை கையாளலாம். தேவையான குழித்தட்டுகளை வாங்கி மண்புழு உரம் அல்லது  மக்க வைத்த தென்னை நார்கழிவு போட்டு விதையை  முளைக்க வைத்து நடவு செய்யலாம். 40 நாள் வயதுடைய நாற்றுக்களை எடுத்து  நடவு செய்ய வேண்டும் 

 

நிலம் தயாரித்தல்

நடவிற்கு முன் அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்;போபாக்டீரியா 200 கிராம் வேம் 200 கிராம் சூடோமோனஸ் 100 கிராம், டிரைக்கொடெர்மாவிரிடி 100 கிராம் அனைத்தையும்  5 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான கத்தரி  விதைகளில் ஊற்றி  பிரட்டி பின்னர் அவற்றை உலர வைத்து நடவு  செய்ய வேண்டும்

 

நாற்றங்கால் அமைப்பு

மணல் கலந்த செம்மண், கரிசல்மண்; நிலம் ஏற்றது. நிலத்தை நான்கு அல்லது ஐந்து முறை புழுதிபட  நன்கு உழவு செய்ய வேண்டும்.  கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் 5 டன் (அ) தென்னை நார்க்கழிவு 3 டன் (அ) மண்புழு உரம் ஒரு டன்  இதில் ஏதாவது ஒன்றை ஊற்றமேற்றி  போட வேண்டும்..   

 

பயிர் இடைவெளி

சாதாரகம்
  
வரிசைக்கு வரிசை 3   அடி  
செடிக்கு செடி   2 ½ அடி.
 
ஒட்டுரகம் 
வரிசைக்கு வரிசை   2 ½  அடி 
செடிக்கு செடி 2 அடி.

 

 

நீர் நிர்வாகம்

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கரிசல்மண்ணாக இருந்தால் வாரம் ஒருமுறையும் செண்மண்ணாக இருந்தால்  5 நாட்களுக்கு ஒரு முறையும் பிறகு தேவைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். 

 

களை நிர்வாகம்

நடவில் இருந்து 20வது நாள் முதல் களையும், 40வது நாள் இரண்டாம்
களையும் எடுக்க வேண்டும்.  பிறகு மகசூல் வரும் வரை வயலில் 
களையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

 

வேர் அழுகல்

வேர் அழுகல் தாக்குதலின்  அறிகுறி 
இது மழைகாலத்தில் அதிகம் காணப்படும்.செடி வாடி காய்ந்து விடும் 
கட்டுப்படுத்தும் முறை 
இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல் 
நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை ஆறிய  மக்கிய தொழுவுரம் 50 கிலோவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது பயிர் நடவு செய்த 10 நாட்களுக்குள் தூவி விட வேண்டும். அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 

இரசாயன முறையில்  கட்டுப்படுத்தும் முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பன்டீசம் கரைத்து வேர்  நன்கு நனையுமாறு  ஊற்ற வேண்டும். ஊற்றும் போது நிலம் ஈரமாகவோ அல்லது காய்ந்தோ இல்லாமல் அளவான ஈரத்தோடு இருக்க வேண்டும்.

 

வைரஸ் நோய்

இலை பச்சையம் இழந்து சிறுத்து காணப்படும்.  
கட்டுப்படுத்தும முறை 
தாக்கப்பட்ட செடியை  முற்றிலும் அகற்றி  எரித்து விட வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த  வேண்டும்
.
அசுவிணி

தாக்குதலின்  அறிகுறி 

இலையின் அடிப்பகுதியில் தாக்கி பச்சையத்தை உறிஞ்சி விடும்.  தாக்கப்பட்ட இலையை தொட்டால் பிசின் மாதிரி ஒட்டும்.  பாதிக்கப்பட்ட இலை வெளிறிய நிறத்தில் காணப்படும் செடியில்  எறும்பு இருக்கும்.
 
கட்டுப்படுத்தும் முறை 
அசிபேட்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2½ கிராம்இ  நிம்புசிடின் 3 மில்லி சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அல்லது இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.  

 

 

தண்டு;துளைப்பான்

கத்தரி நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.

தாக்குதலின் அறிகுறி

குருத்துப்பகுதி வாடிகாணப்படும் ஒடித்து பார்த்தால் உட்புறம் புழு தென்படும் கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில் தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது. புழு செடியின் நுனிக்குருத்து உள்ளே சென்று செடியின் மற்ற பாகங்களுக்கு செல்லும் தண்ணீர் கடத்தும் திசுக்களையும், காயையும் சேதப்படுத்தியும் விடுகிறது. அதனால், விவசாயிகள் மகசூல் இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறை  இயற்கையில்
 

  • இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட  செடிகளின் நுனித் தண்டினைக் அகற்றி எறிந்தி விட வேண்டும். 
  • டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்  முட்டை ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 4 CC  வைத்து முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்

 

  • இனக்கவர்ச்சிபொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்  பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் 
     
  • விளக்குபொறி  ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

 

  • பிவேரியா பேசியானா  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து செடிநன்கு நனையுமாறு தெளிக்கவும்.

 

  • வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தொழுவுரத்துடன் கலந்து அடியுரமாக போடவேண்டும். 

 

  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்சியில் போட்டு தனித்தனியாக  அரைத்து அவற்றை 7 லிட்டர் தண்ணீரில் நன்றாக கரைத்து பின்பு வடிகட்டி ஒரு டேங்க் 200முதல் 300 மில்லி வரை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.  


இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

  • கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.  அல்லது
  • காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரி பைரிபாஸ் மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில்  கலந்து தெளிக்க வேண்டும். அல்லது
  • குயினால்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு  5 மில்லி,  2 மில்லி வேப்பெண்ணெய் சேர்த்து கலந்து தெளிக்க வேண்டும்.
 

காய்ப்புழு

பூ, பிஞ்சு, காய்களில் புழு துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும்.
 
கட்டுப்படுத்தும் முறை  இயற்கை முறை

டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 4 சிசி கட்டலாம்.    
நாட்டுச் சர்க்கரை  500 கிராம், பிவேரியா பேசியானம்  500 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்  

இரசாயனமுறை கட்டுப்படுத்தும் முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ்  4 மில்லி என்ற அளவில் கலந்து மாலைவேளையில்  தெளித்து கட்டுப்படுத்தலாம். 

 

 

வெள்ளை ஈ

வயலுக்குள் நுழைந்தால் சிறிய வெள்ளை நிற பூச்சி பறக்கும்.  இவை இலையின் சாற்றை உறிஞ்சிஇ செடியை வளர்ச்சி குன்றச் செய்யும். 

கட்டுப்படுத்தும்முறை

இயற்கை முறை மஞ்சள் தகட்டில் கிரீஸ் தடவி ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில்  செடிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும்
  
இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை
 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1மில்லி  நிம்புசிடின 4 மில்லி; பிரைடு 1 கிராம்  என்ற அளவில்  கலந்து காலை அல்லது மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 

 

 

மாவுப்பூச்சி

செடியின் வேர், தண்டு, இலையில் பஞ்சு போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். 
கட்டுப்படுத்தும் முறை 
தாக்கப்பட்ட இலையை அகற்றி விடவேண்டும்
இது எளிதில் கட்டுப்படுத்த இயலாது காரணம் 
பஞ்சு போன்ற பகுதியில் மருந்து துகள்கள் உட்புகாது 
ஒரு லிட்டர் தண்ணீரிருக்கு மீன் எண்ணெய் 5 மில்லி, அசிபேட் 2 ½  கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

செஞ்செல்

இலையின் பின்பகுதியில் செந்நிற சிறிய பூச்சிகள்  காணப்படும்.  
இலை வளர்ச்சி குன்றி காணப்படும் 

கட்டுப்படுத்தும்முறை
  
ஒரு லிட்டர் தண்ணீருக்கு புரப்பனாபாஸ் 2 மில்லி, அசிபேட்  2 கிராம், 
நிம்புசிடின் 3 மில்லி  கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

 

 

அறுவடை தொழில் நுட்பம்

5 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து  பூச்சி தாக்கிய காய்களை 
பொறுக்கி எடுத்துவிட்டு தரமான காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லலாம்

 

 

முக்கிய குறிப்புகள்

கத்தரி பத்துவரிசைக்கு மக்காச்சோளம் ஒரு வரிசை என  நடவு செய்யலாம்
வரப்பு பயிராக ஆமணக்கு சாகுபடி செய்யலாம். இதனால் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

 

 

முடிவுரை

காய்கறிகள் சாகுபடி செய்வதில் கத்தரி முதலிடத்தில் இருப்பதால்   விவசாயிகள் தொடர்ந்து அவற்றை நடவு   செய்து வருகின்றனர். அதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருந்து வருகிறது. அவற்றை குறைக்க குறைந்த செலவில் இயற்கை இடுபொடுட்களை பயன்படுத்தி  கத்தரி பயிரை பராமரித்து தரமாக காய்கறிகளாக  உற்பத்தி செய்தால் கத்தரி விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.