வாழ்நாள் கல்வி

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்)

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்)

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்)

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் முறை. அதாவது குறைந்த தண்ணீரினை மட்டுமே வைத்து தாவரங்களுக்கு தேவையான சத்துகளை கொடுத்து தாவரங்களை வளர்ப்பது தான் ஹைட்ரோபோனிக்ஸ். தெளிவாக செல்ல வேண்டும் என்றால், நம்ம முளைப்பாரி போடும் தொழில்நுட்பம் போன்றது தான் இந்த ஹைட்ரோபோனிக் முறை.

 

ஹைட்ரோபோனிக் முறையில் பசுந்தீவன உற்பத்தி

ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தேவையான அதிக புரதசத்து உடைய பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு கொடுக்க முடியும். இந்த முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் மண், குச்சி போன்றவை இல்லாது இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும். இதைத்தான் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி என்பர். இந்த மண்ணில்லா (ஹைட்ரோபோனிக்) பசுந்தீவன உற்பத்தியை விவசாயிகளே வீட்டில் அல்லது கால்நடை கொட்டகையில் உற்பத்தி செய்ய முடியும்

 

மண்ணில்லா பசுந்தீவனத்தின் நன்மைகள்

• ஒரு பங்கு விதையை பயன்படுத்தினால் 8 பங்கு தீவனம் கிடைக்கும்.
• இது புரதச் சத்து நிறைந்த பசுந்தீவனம் அதனால் பாலின் தரம் அதிகரிக்கும். மாடும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். 
• மழையில்லாத, பசுந்தீவனங்கள் இல்லாத சமயத்தில் இம்முறையை கடைபிடிக்கலாம்.
• மண்ணில்லா பசுந்தீவனம் உற்;பத்தி செய்ய குறைந்த செலவே ஆகும்.
 

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி கூடம் அமைக்கும் முறை

மண்ணில்லா பசுந்தீவன உற்;பத்தி கூடம் அமைக்க மாட்டு கொட்டகை அல்லது சிறிய அறை போதுமானது. அதாவது மேற்கூரை இருக்கும் மாட்டு கொட்டகையின் ஒரு மூலையில் மூங்கில், சவுக்கு, தென்னை ஓலை ஆகியவற்றை பயன்படுத்தி அறைபோல் கட்டி பயன்படுத்தலாம். இதில் இரண்டு பக்கம் அல்லது ஒரு பக்கமாவது சுவர் இருந்தால் நல்லது. இந்த அறையின் உட்புரத்தில் பழைய சணல் சாக்கினை நன்கு நனைத்து கட்டி விட வேண்டும். சிறிய அறையாக இருந்தால் சுவற்றில் சணல் சாக்கினை கட்டி விடவும். அதன்பின்பு தரையில் ஆற்று மணலை சலிக்காமல் பரப்பி விட வேண்டும். தினமும் சாக்கிலும், மணலிலும் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். இப்படி தயார் செய்யப்பட்ட அறைக்குள் பழைய அலமாரி அல்லது மூங்கில் அல்லது சவுக்கு கொண்டு அலமாரி அமைத்து கொள்ள வேண்டும்.

 

பசுந்தீவன உற்பத்திக்கு தேவையான பொருட்கள்

ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள்:-
• ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி பசுந்தீவனம் உற்பத்திக்கு வெளிச்சம் குறைவான சிறிய அறை வேண்டும். 
• 10 சிறிய பிளாஸ்டிக் டிரேக்கள் (டிரேக்களின் அடியில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும்.)
• தேவையான அளவு மக்கசோள விதைகள் 
• தேவையான அளவு தண்ணீர்
• பிளாஸ்டிக் டிரேக்கள் வைப்பதற்கு ஏற்ற அலமாரிகள்
• தண்ணீர் தூவும் தெளிப்பான்கள்
குறிப்பு: தற்போது கடைகளில் ‘ஹைட்ரோபோனிக் கிட்’ விற்பனைக்கு கிடைக்கிறது அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
 

மண்ணில்லா பசுந்தீவனம் வளர்க்கும் முறை

மண்ணில்லா பசுந்தீவனம் (ஹைட்ரோபோனிக்) உற்;பத்தி செய்ய, முதலில் தேவையான அளவு மக்கசோள விதைகளை வாங்கி, அவற்றை 2 முறை நன்கு கழுவி, அதன்பின்னர் 1 நாள் முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அந்த முளைவிட்ட மக்காசோள விதைகளை டிரே (பிளாஸ்டிக் தட்டு) ஒன்றுக்கு 300 கிராம் வீதம் கொட்டி, பரப்பிவிட வேண்டும். அதன் பின்னர் அதிக வெளிச்சம் படாதவாறு உள்ள அறையின்; அலமாரிகளில் வைக்க வேண்டும். இந்த மக்க சோளத்திற்கு தினமும் 4 முதல் 6 முறை தண்ணீர் தெளித்து வரவேண்டும். அவ்வாறு தண்ணீர் தெளிக்கப்படுவதால் மக்காசோள விதைகள் 7-8 நாட்களில்; நாத்து போன்று முளைத்து வரும். வேகமாக வளர்வதற்கு, 1 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி பஞ்சகவ்வியம் சேர்த்து மூன்றாம் நாள் ஒரு முறையும், ஐந்தாம் நாள்  இரண்டவது முறையும்  தெளித்தால் நாத்து வேகமாக வளரும். இந்த வளர்ந்த நாற்றுகள் தான் அந்த மண்ணில்லா பசுந்தீவனம் ஆகும். இந்த தீவனத்தை அப்படியே எடுத்து மண் படாமல் மாடுகளுக்கு கொடுக்கலாம். மாடுகள் இந்த பசுந்தீவனத்தை வீனாக்காமல் அப்படியே சாப்பிடும்.

 

சுழற்சி முறையில் பசுந்தீவன உற்பத்தி

பசுந்தீவனம் அறுவடை முடிந்த டிரேவில் மீண்டும் மக்காச்சோளம் போட்டு; பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு சுழற்சி முறையில் தீவனம் உற்பத்தி செய்வதால் தினமும் பசுந்தீவனம் கிடைக்கும். இது உரம், பூச்சிக்கொல்லி எதுவும் இல்லாத நல்ல புரதசத்து மிகுந்த தீவனமாகும். இந்த தீவனத்தை மாட்டுக்கு தீவனமாக கொடுப்பதால் அதிக பால் நமக்கு கிடைக்கும்.

 

மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திக்கான முக்கிய குறிப்புகள்

 • மண்ணில்லா பசுந்தீவனம் வளர்க்கப்படும் அறை 25° வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். 
• உடைந்த மற்றும் பூஞ்சான பாதித்த விதைகளை நீக்கிவிடவேண்டும். 
• மக்காசோள விதைகளை கெமிக்கல் முறையில் விதை நேர்த்தி செய்து இருந்தால் அவ்விதைகளை நன்றாக கழுவி விடவேண்டும்.
• மக்காச்சோளம் தவிர்த்து மற்ற சோளம், கம்பு போன்ற தானியங்களை இதுபோன்று வளர்த்து கால்நடைகளுக்கு கொடுக்க கூடாது.