வாழ்நாள் கல்வி

ஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் பூச்சி மேலாண்மை

ஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் பூச்சி மேலாண்மை

ஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் பூச்சி மேலாண்மை

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பொதுவாக மக்காசோள பயிரை பூச்சிகள் அதிகம் தாக்காது, என்ற நிலை மாறி பூச்சிகளின் தாக்கம் தற்போது அதிகம் ஏற்படுகிறது, இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூடுவதுடன், மருந்து அடிப்பதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்காசோள பயிரை குருத்து ஈ, அசுவினி, குருத்து புழு மற்றும் படை புழு ஆகிய பூச்சிகள் அதிகமாக தாக்கி பயிர்களில் சேதரத்தை உண்டு பண்ணுகின்றன.

 

குருத்து ஈ

மக்காச்சோளம் நடவு செய்த 20 முதல் 30 நாட்களான இளம் பயிரினை குருத்து ஈயின் இளம் புழுக்கள் தாக்குகின்றன. இளம் புழுக்கள் இலை உறைக்கும், தண்டிற்கும் இடையே துளைத்து குருத்தினை துண்டித்து விடுகின்றன. இதனால்  குருத்து அழுகி செடி மடிந்து விடுகிறது. பொதுவாக பட்டம் கடந்து பயிர் செய்வதால் இதன் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. குருத்து ஈயின்  தக்குதல் தென்பட்டால் மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

அசுவினி

மக்காச்சோளத்தின் இளம் செடிகளை அசுவிணிகள் தாக்கும். இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைகளில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி தடைபடுகிறது. இதன் பாதிப்பு அதிக அளவு தழைச்சத்து பயன்படுத்திய வயல்களில் இருக்கும். இதனை இயற்;கை முறையில் கட்டுப்படுத்த ஊதா நிற ஒட்டும்பொறியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

 

தண்டு துளைப்பன்

மக்காசோளத்தில் தண்டு பகுதியில் தண்டு துளைப்பான் துளையிட்டு சேதப்படுத்தும். இது வளர்ந்த பயிர்களையே அதிகம் தாக்கும். தாக்கப்பட்ட பயிர்களின் தண்டுப்பகுதியில் துளைகள் காணப்படும். தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்து என்ற விகிதத்தில் கலந்து  தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

அமெரிக்கன் படைபுழு

தற்போது மக்காசோளப் பயிரை அமெரிக்கன் படை புழுக்கள் (ஆர்மி வார்ம்) தாக்குகிறது. இப்புழுக்கள் மக்காசோள பயிரின் எல்லா நிலையிலும் தாக்கும். குறிப்பாக ஒருமாதம் ஆன செடிகளின் குருத்து பகுதியை உண்டு சேதப்படுத்தும். இந்த புழுக்களின் தாக்குதலை கவனிக்காமல் விட்டால் இரண்டு மூன்று நாட்களில் பயிர் முழுவதையும் சேதப்படுத்திவிடும். அமெரிக்கன் படை புழுவை உடனடியாக கட்டுப்படுத்த 10 கிராம் பிவேரியா, 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும் அல்லது கற்பூர கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். இராசயண முறையில் கட்டுப்படுத்த இமாமெக்ட்டின் பென்சோயெட் 2 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

உயிரியல் முறையில் புழுக்களை கட்டுப்படுத்தும் முறை

உயிரியல் முறையில் கட்டுப்படுத்த 10 கிராம் வெர்ட்டிசிலியம், 10 கிராம் பிவேரியா, 10 கிராம் மெட்டாரைசியம், 10 கிராம் பேசில்லஸ் துரிஞ்சியசிஸ் ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து இதனுடன் 10 கிராம் நாட்டுச்சக்கரை அல்லது 10 கிராம் குளுக்கோஸ் கலந்து ஒருமணிநேரம் வைத்திருந்து தெளித்தால் புழுக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.