வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

வெண்டை பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தற்பொழுது வெயில் காலத்தில் மாவுப்பூச்சியின் தாக்;குதல் அதிகமாக இருக்கும் மாவுப்பூச்சி 10 ஆண்டு காலமாக நம்முடைய விவசாயத்தில்  பெரும் பங்கு வகிக்கிறது. முதன் முதலில் பப்பாளி பயிரை தான் தாக்கியது அதனால் அவற்றிற்கு பப்பாளி மாவுப் பூச்சி என்ற தான் பெயர் வந்தது பிறகு அவை அனைத்து பயிர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது.வெண்டையிலும் தாக்கி மிகுந்த சேதத்தை உண்டு பண்ணுகிறது மாவுப்பூச்சியின் உடம்பு மெருகு பூச்சால் மேல்பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது அதனால் மருந்துகள் அடித்தாலும் கட்டுப்படுத்த இயலாது. மாவுப்பூச்சி சாவாமல்  பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றை பெருக விடாமல் கட்டுப்படுத்த மாவுப் பூச்சியை பிடித்து உண்ணக்கூடிய எதிர் பூச்சியை உருவாக்குவோம்

 

வெண்டை பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்;

வெண்டை பயிரில் இலையின் அடிப்பகுதியில் நகராமல் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி இலையில்  பிசுபிசுப்பு கூடிய இனிப்பு திரவத்தை வெளியிடும் இவற்றை சாப்பிட எறும்புகள் கூட்டம் கூட்டமாக வரும் அவை  மாவுப் பூச்சியை காலில் ஒட்டிக் கொண்டு மற்ற செடிகளுக்கும் பரப்பி வெண்டை செடிகளில் மாவுப் பூச்சி பரவி தன் இனத்தை பெருக்கிக் கொள்ளும்.  இது ஆண் பூச்சி இல்லாமல், பெண் பூச்சிகள் முட்டையிடும் தன்மை பெற்றுள்ளன ஒரு முறை 300 முட்டை வரை இடக்கூடியவை. அழிக்க முடியாத பார்த்தீனியா உள்ளிட்ட களை செடிகளையும் தாக்குகின்றன. பெரும்பாலும் பப்பாளி, மல்பெரி, கொய்யா, மரவள்ளி, பருத்தி, தேக்கு, ஆமணக்கு, செம்பருத்தி போன்ற  அனைத்து  பயிர்களை தாக்குகிறது. எந்த பயிரையும் விடவில்லை.

இவை இலை, தண்டு, கணுக்கள் மற்றும் உரிந்த பட்டைகளுக்கு இடையில் பரவலாகக் காணப்பட்டாலும் இலை மற்றும் தண்டுப்பகுதிகள் சிறுத்தும் உருக்குலைந்தும் காணப்படும்.  காய்களை மிகுந்த சேதத்தை ஏற்படுத்துக்கிறன. தாய்மாவுப்பூச்சி இளசிவப்பு நிறத்தில் வெள்ளையான மெழுகால் சூழப்பட்டிருக்கும். ஒரு தாய்ப்பூச்சி ஒருவார காலத்தில் 500 முதல் 850 முட்டைகளை மெல்லிய பஞ்சு போன்ற அமைப்பினுள் இடும். முட்டைகளிலிருந்து 5 முதல் 10 நாட்களுக்குள் வெளிவரும் இளம் பூச்சிகள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இவை ஒரு மாத காலத்தில் முழு வளர்ச்சி அடைக்கின்றன.

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தக் கூடிய  பொறி வண்டுகளைப் பற்றி பார்க்கலாம்

 

 

பொறிவண்டின் வாழ்க்கை பருவம்

மாவுப் பூச்சிகளை அழிக்கப் பொறி வண்டினை விடுவதே நலம் பயக்கும்.  ஸ்கிம்னஸ் ( இந்தியா பொறிவண்டு) மற்றும் ஆஸ்திரேலிய ( கிரிப்டோலமஸ்) பொறி வண்டுகள் இயற்கையிலேயே மாவுப்பூச்சி மற்றும் செதிள் பூச்சிகளைத் தாக்கி இரையாக உண்டு அழிக்கின்றன. பொறிவண்டின் மொத்த வாழ்க்கை சுழற்சிக் காலம் சுமார் ஒரு மாதம் ஆகும். தாய் வண்டுகள் இனச்சேர்க்கை முடிவடைந்த 10 நாட்களுக்குப் பின் முட்டையிடுகின்றன. ஒவ்வொரு தாய் வண்டும் 40 முதல் 50 நாட்களில் 200 முதல் 220 முட்டைகள் இடுகின்றன.

இதிலிருந்து 6 நாட்களில் புழுக்கள் வெளியே வந்து 20 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து பின்னர் கூட்டுப்புழுவாக மாறுகின்றன. கூட்டுப்புழு பருவம் 7 முதல் 9 நாட்களாகும். வளர்ந்த பொறி வண்டும். புழுப் பருவமும் மாவுப்பூச்சியின் எல்லா வளர்ச்சிப் பருவங்களையும் உண்டு அழிக்கின்றன.

ஒரு புழு முழு வளர்ச்சி அடைவதற்குள் 900 முதல் 1500 தீங்கு செய்யும் மாவுப்பூச்சிகள் அல்லது 300 குஞ்சுகள் அல்லது 30 வளர்ச்சியடைந்த மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள் பூச்சிகளை உண்ணுகிறது. மாவுப் பூச்சிகள் அதிகம் நகராமல் ஒரே இடத்தில் இருந்து சாறை உறிஞ்சிச் சேதத்தை விளைவிப்பதால் பொறிவண்டுகள் அவற்றை எளிதாக தேடிப் பிடித்து உண்டு விடுகின்றன.

 

 

பொறிவண்டுகளை வளர்க்கும் முறை

வெண்டைச் செடியிலிருந்து எடுத்த மாவுப்பூச்சிகளை  இளம் பூசணிக்காய் மீது பரவ விட வேண்டும். மாவுப்பூச்சிகள் பூசணிக்காய் மீது ஓரிரு மாதங்களில் எளிதில் பரவிவிடும். பின் அதனை ஒரு காற்று புகும் கூண்டில் வைத்து 10 முதல் 15 பொறிவண்டுகளைக் கூண்டினுள் விட வேண்டும். பொறிவண்டுகள் மாவுப்பூச்சிகளை உண்டு ஒரு பூசணிக்காயிலிருந்து 30 முதல் 40 நாட்களில் சுமார் 200 முதல் 250 வண்டுகளாகப் பெருகி விடும்

 

பொறிவண்டை தோட்டங்களில் விடும்முறை

ஒரு ஏக்கருக்கு 500 பொறிவண்டுகள் தேவைப்படும். இவற்றை மாவுப்பூச்சியின் சேத நிலையைப் பொறுத்து 2 அல்லது 3 முறை  வயலில் விடுவது சாலச் சிறந்தது. மாலையில் விடுவதால் பொறிவண்டுகள் மாவுப்பூச்சிகள் மற்றும் செதிள் பூச்சிகளை விரைவாக சென்றடைந்து அடுத்த நாள் காலை முதல் முட்டையிடுவதற்கு ஏதுவாகின்றது.

பொறிவண்டுகளைச் சிறிய திறந்த அட்டைப் பெட்டிகள் அல்லது காலிப்புட்டிகளில் வைத்துத் தோட்டங்களில் எடுத்துச் செல்லும் போது அவை விரைவில் சீராகவும் வெளி வருகின்றன. தோட்டத்தில் எறும்பு அதிகமாகக் காணப்பட்டால் பொறிவண்டுகள் விடுவதற்கு முன்னால் எறும்புப் புற்றுகளில் மாலத்தியான்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு  10 கிராம் மருந்து தெளித்து எறும்புகளை அழிக்க வேண்டும். பொறிவண்டுகள் விடப்பட்ட தோட்டங்களில் 20 நாட்கள் வரை பூச்சி கொல்லிகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது

பொறிவண்டினால் ஏற்படும் நன்மைகள்.

ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் பொறிவண்டினை வளர்த்து விடுவதற்கு ஆகும் செலவு சுமார் 1000 ரூபாய் மட்டுமே ஒரு தோட்டத்தில் விடப்படும் பொறிவண்டுகள் அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவிச் சென்று அங்குள்ள மாவுப் பூச்சிகளையும் அழிக்கின்றன.

நன்மை செய்யும் இதர இரை விழுங்கிகளோ, ஒட்டுண்ணிப் பூச்சிகளோ இதனால் பாதிக்கப்படுவதில்லை பொறிவண்டுகள் ஓர் இடத்தில் நிலைபெற்று பின் தானாகப் பரவி நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும். தன்மை உடையன.

பொறிவண்டை விடுவதனால் மா, கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளும் கோடிக்கணக்கான பூச்சி மருந்தின் எஞ்சிய நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்றப்படுகின்றார்கள். இம்முறை எளிதானது. பாதுகாப்பானது சிக்கனமானது. விரைந்து செயல்படும் திறனுடையது.

எனவே உயிரியல் பயிர்பாதுகாப்பின் முக்கிய காரணிகளுள் ஒன்டறான பொறிவண்டுகளைப் பயன்படுத்தி  காய்கறிப் பயிர்கள் மற்றும் பழப்பயிர்களைப் பாதுகாத்தல் அவசியம்.

 

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம், பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர்  மாட்டுக் கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலில் 300 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக் கேற்ப தெளித்து கட்டுப்படுத்தலாம்

 

அனாக்கரஸ் வண்டின் மூலம் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அனாக்கரஸ் என்ற ஒட்டுண்ணி விற்கப்படுகிறது. இவ்வொட்டுண்ணி மாவுப்பூச்சியின் விஷத்தை  செலுத்தி அழிக்கின்றது. இதனை பொறிவண்டு வளர்ப்பு முறையிலேயே தோட்டத்தில் வளர்க்கலாம் இப்பூச்சி பறக்கும் தன்மை கொண்டதால் வேகமாக பரவி மாவுப்பூச்சிகளை அழிக்கின்றது.

 

தாவர இலைக்கரைசல் மூலம் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை

அரைக்கிலோ அரிவாள் மனைத்தழை 2 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஒரு லிட்டராக சுண்டியவுடன் இறக்கி ஆறவைத்து 20 கிராம் பெருங்காயத்தூள் சேர்த்து 10 லிட்டருக்கு ஊற்றி தெளித்தாள் மாவுப்பூச்சி கட்டுப்படுகிறது

குறிப்பு - இவை 10 லிட்டர் தண்ணீருக்கு அதாவது ஒரு டேங்கிற்கு மட்டும் மேலும் கூடுதலாக வேண்டும் என்றால் நாம் எவ்வளவு அடிக்கின்றோமோ அந்த விகிதத்திற்கு அரிவாள் மனைத்தழை – தண்ணீர், பெருங்காயம் கூடுதலாக தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்ப எண்ணெய் - 2 மில்லி கரைசல், வேப்பங்கொட்டை பருப்புச்சாறு - 5 மில்லி கரைசல், மீன் எண்ணெய் சோப்பு - ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் சேர்த்து கலந்து மாலை வேளையில் தெளிக்கவும்

 

 

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமான  நிலையில் ஒரு முறை வயலில் தண்ணீரை கெண்டு ஸ்பிரே பண்ணி விடனும் அதன் பிறகு மருந்து அடிக்கலாம் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் கலந்து அடிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 10 மில்லி இமியோகுளோ பிரிட் கலந்து அடிக்கலாம்.

 

தொகுப்புரை

வெண்டை பயிரை  மாவுப்பூச்சி தாக்கி அதிக சேதத்தை உண்டுபண்ணுகிறது. எனவே மாவுப்பூச்சியை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுபடுத்தி  அதிகம் பரவுவதை தடுத்து விளைச்சலை பெருக்குவோம்.