வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

சப்பை நோய்

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

கால்நடைகளை குறிப்பாக பசு மற்றும் எருமை மாடுகளை தாக்கும் நோய்களில் மிகவும் கொடூரமானது இந்த சப்பை நோயாகும். இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால்  அதில் இருந்து கால்நடைகளை முழுமையாக குணப்படுத்த இயலாது, வந்த பின் வைத்தியம் செய்வதைவிட வரும்  முன்னர் காப்பதே சாலச் சிறப்பானதாகும்

 

சப்பை நோய் எப்போது வரும்

சப்பை நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாக உள்ள காலங்களில் மாடுகள் பெரும்பாலும் பாதிக்ப்படுகிறது. இது ஓர் மழைக்கால நோயாகும்.  இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது. சப்பை நோய் பாதித்த மாடுகளுக்கு  திடிரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும்.   

 

சப்பை நோய்க்கான அறிகுறிகள்

சப்பை நோயினால் பாதித்த மாடுகளுக்கு திடிரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும். தொடை அல்லது முன்கால் சப்பை, கழுத்து போன்ற சதைப்பிடிப்புள்ள பகுதிகளில் வெப்பம் மிகுதியாகவும் வலியும் இருக்கும். இதனால் மாடுகள் நடக்க முடியாமல் நொண்டும். அப்பகுதியில் விரல் கொண்டு அழுத்தும் போது நற நற வென்ற சத்தம் வரும். 

 

தடுப்பூசி போடுவதன் அவசியம்

ஓவ்வொறு வருடமும் மழை காலத்திலும் மழை காலம் முடிந்தவுடனும் கால்நடைகளுக்கு நோய் மற்றும் நோய்த் தொற்றும் ஏற்ப்படுகிறது. நோய் தொற்றினால்  கால்நடைகள் இறக்க கூட நேரிடும். இதனால விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இவ்வகை நோய் தொற்றுகளை தடுக்க மழை காலத்திற்க்கு முன்பாக போட வேண்டிய தடுப்பூசிகள் சரியான நேரத்தில் போடுவதன் மூலம் அடைப்பான் நோய்  சப்பை நோய் கோமாரி நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும்.

 

சப்பை நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது

சப்பை நோயினால் பாதித்த மாடுகளுக்கு நோய்க் கண்ட உடன் மருத்துவம் செய்தல் வேண்டும் 48 மணி நேரத்தில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால்  உடனடியாக மருத்துவம் செய்யாமல் போனால், மாடுகள் இறக்க கூட நேரிடும். சப்பை நோயை தடுக்க மழைக்காலத்திற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே ஓவ்வொரு ஆண்டும் மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும். சப்பை நோய் கண்ட கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சத்தியுடைய மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன்  கொடுக்க வேண்டும்.

 

தொகுப்புரை

முறையான தடுப்பூசி  மற்றும் தொடர் தடுப்பூசிகள் இட்டு கால்நடைகளை சப்பை நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும்.