கால்நடை வளர்ப்பு
முன்னுரை
நல்ல ஆரோக்கியமான பால் மாட்டில் இருந்து பெறப்படும் பால் சுத்தமானதாகவும், ஆரோக்கியம் மிக்கதாகவும், நல்ல மண முள்ளதாகவும் இருக்கும். அத்துடன் தீங்கற்ற நுண்ணுயிர்களை தன்னகத்தே கொண்டு இருக்கும். எனவே சுத்தமான பாலை உற்பத்தி செய்வதற்கான வழி முறைகளை பற்றி காண்போம்.
தூய்மையன பாலை உற்பத்தி செய்வதற்கான காரணிகள்
ஆரோக்கியமான கறவை மாட்டிற்கான அறிகுறிகள்
கறவைமாடு அதிகமாக மெலிந்தும் இருக்கக் கூடாது அதே நேரத்தில் பெருத்திருக்கவும் கூடாது. தோல் பளபளப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும் இருத்தல் வேண்டும். மடி மென்மையாகவும்,காம்புகள் ஓரே சீராகவும் இருத்தல் வேண்டும். மடிநோய் தாக்குதல் இருத்தல் கூடாது. பால் கொடி, இரத்தக் குழாய் தடித்து பெரிதாக இருக்க வேண்டும்.
தூய்மையான இருப்பிடம் (கொட்டகை)
கறவை மாடுகள் கட்டப்பட்டிருக்கும் (கொட்டகை) இடம் மிகத் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். சாணம் மற்றும் சிறுநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான வகையில் தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மழைகாலங்களில் தண்ணீர் தேங்காமல் மேடான பகுதியில் கொட்டகை அமைத்தால் நலம். மேலும் கொட்டகையை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
கறவைக்கு முன் தயாரிப்பு பணிகள்
பால் கறவை செய்வதற்கு முன் பால்மாட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக பால் மாட்டின் மடியை நன்கு சுத்தம் செய்து உலர்ந்த சுத்தமான துணியால் துடைத்தல் வேண்டும். இயந்திரக் கறவை எனில் கறவை இயந்திரங்கள் நன்கு சுத்தமாக இருத்தல் வேண்டும்.
கறவைக்கு முன் கறவைப் பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்;கள் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். கறவைக்குப் பயன்படுத்தப்படும் சல்லடை மற்றும் கறவை பாத்திரங்கள் நன்கு கழுவப்பட்டு வெய்யிலில் காய வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தூய்மையான பால் உற்பத்திக்கு கறவையாளரின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே கறவையாளர் மிக்க சிரத்தையுடன் கறவையில் ஈடுபட்டால் தூய்மையான பால் உற்பத்தி செய்ய இயலும். கறவையாளர் பின்பற்ற வேண்டிய முக்கியமான அம்சங்கள்.
கறவையாளர்
கறவைக்கு பின்