உழவர் குரல்

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்

பஞ்சகவ்யா தயாரித்தல்

May 11, 2019


முருங்கையில் பஞ்சகவ்யா பயயன்படுத்திய விவசாயின் அனுபவம்

திண்டுக்கல் மாவட்டம் போத்திநாயக்கன்பட்டியை சேர்ந்த திரு. ரமேஸ் என்ற விவசாயி நான். 5 ஏக்கர் முருங்கை சாகுபடி செய்துள்ளேன்.

நாட்டுமுருங்கை கன்று ஏக்கருக்கு 100 கன்றுகள் வீதம் 500 கன்றுகள் நடவு செய்து ஒரு வருடம் ஆகிறது. இதுவரை இரசாயன உரம்இ மருந்துகள் பயன்படுத்தியதால் செடி மலட்டுதன்மை ஏற்பட்டு காய்க்காமல் இருந்தது.

மரம் துளிர்காமல் இலைகள் சிறுத்து இருந்தது கிட்டம்பட்டி விவசாய அலுவலகம் சென்று என்ன செய்வது மரம் காய்க்க எனக்கு ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் பஞ்சகவ்யா தயாரித்து அடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

அதன்பேரில் நான் பஞ்சகவ்யா தயாரித்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை அடித்துள்ளேன். தற்பொழுது என்னுடைய முருங்கை மரம் நன்றாக துளிர்விட்டு பூஇ பிஞ்சுகள் வர ஆரம்பித்துள்ளது

இப்பொழுது முருங்கை மரம் யாரிடமும் இல்லாத காரணத்தால் என்னுடைய முருங்கை காய்க்கும் இந்த சமையத்தில் நல்ல விலை கிடைக்கும் என்று நம்புகிறேன். மனதிற்கும் முருங்கை மரத்தை பார்க்க சந்தோசமாக இருக்கிறது என்னுடைய கிணற்றில் தண்ணீர் இல்லாத இந்த சமையத்தில் 5 ஏக்கருக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து சிறிதுதான் தண்ணீர் விட்டு வருகிறேன்.

காய்ந்துபோன மரமாக இருந்தது பஞ்சகவ்யா பயன்படுத்தியதால் மரம் நன்றாக துளிர்விட்டு பூ வர ஆரம்பித்துள்ளது என்னை பொருத்தவரை பஞ்சகவ்யா பயிருக்கு பயன்படுத்துவதால் மிக சிறந்த பயனளிக்கிறது

தொடர்புக்கு
9360113000