வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


முன்னுரை

முன்னுரை - Introduction

பால் மாடுகளின் காம்புகளில் இருந்து தானாக  பால் வடிதல் என்பது ஒருவித குறைபாடு இது ஒரு நோய் அல்ல இந்த குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்



பால் வடிவதற்கான காரணங்கள்

பெரும்பாலும் அதிக பால் கறவை செய்யும் பால் மாடுகளுக்கு பால் ஒழுகுதல் குறைபாடு எற்படும்.  அத்துடன்  காம்புகளின் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும்  காம்புகளின் வடிவம், காம்புத் துவாரங்கள் திறப்பதில் ஏற்படும் மாற்றம், பால் கறவை இடைவெளி போன்ற காரணங்களலால் பால் ஒழுகுதல் உண்டாகிறது.



பால் வடிதலால் ஏற்படும் பாதிப்புகள்

பால் ஒழுகுதலால் காம்புத் துவாரங்கள் திறந்தே இருப்பதால் மடி நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்துடன் பால் ஒழுகுவதால் பொருளாதார இழப்பும். சுகதாரமற்ற சூழ்நிலையும் உருவாகும்.



பால் வடிதலை சரி செய்யும் முறை

அதிக பால் உற்பத்தி செய்யும் பால் மாட்டின் கறவை முறையை மாற்றலாம். அதாவது நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கறவை செய்வதல் என்ற வழக்த்தை மாற்றி தேவையின் அடிப்படையில் மூன்று அல்லது நான்கு முறை கறவை செய்யலாம்.  குறவை இயந்திரங்கள் கொண்டு கறவை செய்தல்.  பால் கறவை செய்யும் நேரத்தை ஒரே சீராக வைத்திருப்பதன் மூலம் பால் ஒழுகுதலை தவிர்கலாம். ஒரு சில பால் மாடுகள் பால் கறவை செய்யும் இடத்திற்கு வந்த உடன் பால் சுரந்து பால் ஒழுக ஆரம்பித்துவிடும் எனவே கறவைக்கான முன் தயாரிப்புப் பணிகைளை செய்து அதன் பின் பால் மாடுகளை கறவை பகுதிக்கு கொண்டு வந்த உடன் கறவையை துவக்குவதன் மூலம் பால் ஒழுகுவதை தவிர்க்கலாம். ஆத்துடன் வயதாக பால் மாடுகளுக்கு பால் ஒழுகுதல் ஏற்படுவதால். வயதான  மாடுகள் வளர்ப்பதை தவிர்த்து இளம் மாடுகளை பராமரிக்கலாம். 



கட்டுப்டுத்தும் முறை

முறையான சிகிச்சை செய்து இதை சரி செய்யலாம்.



முடிவுரை

பால் வடிதல் குறைபாட்டால் பால் மாடு வளர்ப்பவர்களுக்கு மட்டும் பொருளாதார இழப்பு ஏற்படுவதில்லை. ஒட்டு மொத்த தேசத்தின் பால் உற்பத்தி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஆகியவற்றை தவிர்க்க  கால்நடை மருத்துவரின் உதவியுடன் பால் ஒழுகுதல் குறைபாட்டை கட்டுப்படுத்தவும்.