வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


முன்னுரை

முன்னுரை 

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்  துறையின் மூலம் தமிழகத்தில் அனைத்து  கிராமத்திலும்  கிராமங்கள் தோறும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை ஆராய்ச்சி மையங்கள் ஆகியன செயல்படுகின்றன. அவற்றில் உள்ள வசதிகள் பற்றி பார்ப்போம்.



வசதிகள்

வசதிகள் - Facilities
கால்நடைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் அதாவது காய்ச்சல், கழிச்சல்,மடி நோய், பால் காய்ச்சல், காணை நோய் தடுப்பு நடவடிக்கைகள்  சத்துப் பற்றாக்குறைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு ஏற்படும் புண் மற்றும் காயங்கள் ஆகியவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன்.

 



செயற்கை கருவூட்டல்

செயற்கை கருவூட்டல்  - Artificial Insemination

அதிகபடியான  பால் உற்பத்திக்கு  மிக  முக்கியமான செயற்கை கருவூட்டல் செய்தல்,சினை பரிசோதனை செய்தல், கன்று ஈனுவதில் பிரச்சனை ஏற்படும்பட்சத்தல் உதவி செய்தல்  தேவையெனில் அறுவை சிகிச்சை செய்து கன்றை வெளியே எடுத்தல்  ஆகிய வசதிகள் உள்ளன.

 

பிற வசதிகள்

பிற வசதிகள் -  Other Facilities

காணை நோய்க்கு தடுப்பூசி போடுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளது. மேலும்  பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூடம், ஆகிய வசதிகளுடன் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில்  கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை உதவியாளர்களைக் கொண்டு செவ்வனே செயல்படுகிறது. மேலும் கால்நடைகளை காப்பீடு செய்தல் மற்றும் காப்பீடு செய்த கால்நடைகள் இறந்துவிட்டால் பிரேதப் பரிசோதனை செய்து காப்பீடு இழப்பீடு பெற உதவுதல் ஆகிய  வசதிகளையும் கொண்டு செயல்படுகிறது.

 



தொகுப்புரை

தொகுப்புரை - Conclusion

மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி  பால்மாடு வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.