வாழ்நாள் கல்வி

மக்கசோளத்தில் தண்டு இளைத்தல்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


மக்காசோளத்தில் தண்டு இளைத்தலுக்கான காரணங்கள்

மக்காசோளத்தில் தண்டு இளைத்தலுக்கான காரணங்கள் 


மக்காசோளத்தில் தண்டு இலைத்தல் அனைத்து இரகத்திலும், எல்லாவகை மண்ணிலும்  வரக்கூடும். இதற்;கு முக்கிய காரணம் அடிச்சாம்பல் நோய் மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடு ஆகும். மண்ணில் நுண்ணூட்ட சத்தின் அளவு குறையும் போது, பயிர்களில் நோயின் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயின் தாக்கம் வரக்கூடும்;. இதனால் பயிர்களின் வளர்ச்சி தடைபட்டு தண்டு இளைத்தல் நோய் ஏற்படுகிறது.



மக்காசோளத்தில் தண்டு இளைத்தலின் அறிகுறிகள்

மக்காசோளத்தில் தண்டு இளைத்தலின் அறிகுறிகள் 


மக்காசோளத்தில் தண்டு இளைத்தல் நோய் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்;படுத்துகிறது. இற்நோயின் அறிகுறியாக மக்காசோளம் விதைத்த 15 நாட்களிலேயே தண்டுபகுதி இளைத்து, மஞ்சள் நிறமாக இருக்கும். மேலும் வளர்ச்சி குன்றி காணப்படும். செடிகளை பிடுங்கி பார்த்தால் வேர்களின்; ஒட்டம் இல்லாது இருக்கும். காற்று அடித்தால் சாய்ந்து விடும் அளவிற்;கு இளைத்து இருக்கும். பயிர்கள் வளர்ந்திருந்தாலும்; கதிர் வாங்காது அதனால் அவற்றை தீவனத்திற்க்கு மட்டும் பயன்படுத்த முடியும்;.



தண்டு இளைத்தலை வராமல் தவிர்க்க

தண்டு இளைத்தலை வராமல் தவிர்க்க  


மக்காசோளத்தில் தண்டு இளைத்தல் வராமல் இருக்க 1 ஏக்கருக்கு 2 கிலோ சூடோமோனாஸ், 2 கிலோ பேசிலஸ் சப்டிலிஸ் ஆகியவற்றை 100 கிலோ தொழு உரத்தில் கலந்து கடைசி உழவில் மண்ணில் இட்டு உழவு செய்ய வேண்டும். மேலும் விதைகளை நடுவதற்க்கு முன்  1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்து, பின் நன்றாக நிழலில் உலர செய்து விதைக்க வேண்டும். 



தண்டு இளைத்தலை கட்டுப்படுத்த

தண்டு இளைத்தலை கட்டுப்படுத்த  


வயலில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் 1 லிட்டர் தண்ணீர்க்கு 2.5 கிராம் டைத்தேன் அல்லது 1 கிராம் ரிடோமில் இதில் ஏதாவது ஒன்றை மக்காசோளம் விதைத்த முதல் வாரத்திலும்;, இரண்டாவது வாரத்திலும் தரை நன்கு நனையும் படி தெளிக்கவும். அதேபோல் மக்காசோள விதைகள் நடவு செய்து ஒரு வாரத்திற்குள் ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். தொடர்ந்து வயலில் மக்காசோளத்தை பயிர் செய்வதையும் தவிர்க்கவும்.