வாழ்நாள் கல்வி

தக்காளியில் வேர் அழுகல் நோய்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


தக்காளி நாற்றங்கால் வேர் அழுகல் நோய் வராமல் தவிர்க்கும் முறை

தக்காளி நாற்றங்கால் வேர் அழுகல் நோய் வராமல் தவிர்க்கும் முறை

 
தக்காளியில் நாற்றங்கால் அமைக்கும் போது மேட்டுப்பாத்தியாக அமைத்து  வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 3 அடி அகலம், 10 அடி நீளம் வைத்து பாத்தி அமைத்து 150 கிராம் விதையை எடுத்து வரிசைக்கு வரிசை 10 செ.மீ இடைவெளியில் நாற்றங்காலில் விதைகளை தூவ வேண்டும். வேர் அழுகல் நோய் வராமல் தடுக்க நாற்றங்காலில் விதைத்த 15 நாட்களுக்குள் காப்பர் ஆக்சிகுளோரைடை தெளிக்க வேண்டும்.



தக்காளியில் வேர் அழுகல் நோய் வராமல் தவிர்க்க நாற்று நேர்த்தி செய்யும் முறைகள்

தக்காளியில் வேர் அழுகல் நோய் வராமல் தவிர்க்க நாற்று நேர்த்தி செய்யும் முறைகள்


தக்காளி நடவு செய்வதற்கு முன் நாற்று நேர்த்தி செய்ய வேண்டும். அதாவது 30 நாள் ஆன நாற்றை தேர்வு செய்து 200 கிராம் அசோஸ்பைலில்லம் 200 கிராம் பாஸ்போபாக்டிரியா இரண்டும் கலந்த கலவையில்   ½ மணிநேரம் வேர் பகுதி நன்கு நனையும்படி வைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். இந்த கரைசலுடன் சிறிதளவு சாணிப்பால் சேர்த்துக் கொள்வது நல்லது.



நாற்று அழுகல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை

தக்காளியில் நாற்று அழுகல் நோயின் அறிகுறி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை 


தக்காளியில் நாற்று அழுகல் நோயின் அறிகுறியாக வயலில் வாடிய நாற்றுகள் தென்படும். இது நாற்று அழுகல் நோயின் அறிகுறி. இதை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்;. நாற்று அழுகல் நோயினை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம், 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது நடவு வயலில் 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 100 லிட்டர்  தண்ணீரில் கலந்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் அல்லது மண்ணில் ஈரம் இருக்கும் போது 2 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ்சை 50 கிலோ மக்கிய தொழு உரத்;துடன் கலந்து வயலில் இட்டு நாற்று அழுகல் மற்றும் வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தலாம்.