வாழ்நாள் கல்வி

உளுந்து மற்றும் பாசிப்பயிரில் பூச்சி நிர்வாகம்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் அசுவினியை கட்டுப்படுத்தும் முறை

உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் அசுவினியை கட்டுப்படுத்தும் முறை

 
பாசிப்பயிர் மற்றும் உளுந்தில் அசுவினி தாக்குதலின் அறிகுறியாக இளம் தளிர்கள், பூக்கள் மற்றும் மொட்டுகளில் அசுவினி அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும். இப்ச்பூச்சி தாக்குதலால் பூக்களும் பிஞ்சுகளும் உதிரும். செடிகளை சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். அசுவினியை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 2 கிராம் அசிபேட் இதில் ஏதாவது ஒன்றை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.



உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் பச்சைக் காய்ப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த

உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் பச்சைக் காய்ப்புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த


உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் பச்சைக் காய்ப்புழு பச்சைக் காய்ப்புழுவின் தாய் அந்துபூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இது சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம் தளிர்கள், பூக்கள், காய்கள் அகியவற்றில் தனித்தனியாக இடுகிறது. இவற்றில் இருந்து வரும் புழுக்கள் தலைப்பாகத்தை மட்டும் காய்களுக்குள் செலுத்தி காய்களை உண்ணும் இதனால் வட்ட வடிவிலான துவாரங்கள் காய்களில் இருக்கும். இப்புழுக்களை கட்டுப்படுத்த விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துபூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். மேலும் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டையை ஏக்கருக்கு 4 சிசி கட்டி வைத்து கட்டுப்படுத்தலாம்.



உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறை

உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறை 


உளுந்து மற்றும் பாசிப்பயிரை தாக்கும் காய்ப்புழுக்கள் காய்களுக்குள் உள்ள பருப்புகளை உண்ணும், இதனால் காய்களில் துவாரங்கள் பார்க்க முடியும்;. காயப்புழு தாக்குதலின் அறிகுறி தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குவினால்பாஸ் அல்லது குளோரிபைரிபாஸ என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.



உளுந்து மற்றும் பாசிப்பயிரில் நாவாய்ப்பூச்சி தாக்கம்

உளுந்து மற்றும் பாசிப்பயிரில் நாவாய்ப்பூச்சி தாக்கம் 

 
நாவாய்ப்பூச்சிகள் ஒருவித துர்நாற்றத்தை உண்டாக்கும். இப்பூச்சிகள் காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் காய்கள் வாடி உதிர்ந்து விடும். இந்த நாவாய்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்து என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.