வாழ்நாள் கல்வி

பாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


நோயின் அறிகுறி

நோயின் அறிகுறி


பாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலை சுருண்டு, பழுத்து, மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மஞ்சள் இலை வைரஸ் நோயை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது. இந்நோயினால் இலைகள் மஞ்சள் நிறத்தில் சுருண்டு மேல் நோக்கி காணப்படும். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் உண்டாகும்.மஞ்சள் இலை வைரஸ் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

மஞ்சள் இலை வைரஸ் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை


மஞ்சள் இலை வைரஸ் நோய் வராமல் தடுக்க சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண அட்டை ஒட்டு பொறியை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் கட்டிவைத்து கட்டுப்படுத்தலாம். மஞ்சள் இலையில் வைரஸ் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் மூன்று நாள் புளித்த தயிரை சூடோமோனாஸ்சை கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். மஞ்சள் இலை வைரஸ் நோயினை இரசாயன முறையில் கட்டுப்படுத்த

மஞ்சள் இலை வைரஸ் நோயினை இரசாயன முறையில் கட்டுப்படுத்த


மஞ்சள் இலை வைரஸ் நோயினை கட்டுப்படுத்த ஓரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி பெர்பெக்ட் கலந்து பாகற்காய் கொடிகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது ஸ்டெப்டோசைக்கிளின் 12 கிராம் அல்லது பிளாண்டோ மைசின் 50 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.