வாழ்நாள் கல்வி

பாகற்காயில் அசுவுணி தாக்கம்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


அசுவுணி தாக்குதலின் அறிகுறி

அசுவுணி பூச்சி தாக்குதலின் அறிகுறி

அசுவுணி என்று சொல்லக்கூடிய சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளின் நுனி பகுதியில் கூட்டமாக இருந்து சாற்றை உறிஞ்சும். இவை இலைகளின் மேல் பகுதி அடிப்பகுதி மற்றும் தண்டுப்பகுதியையும் தாக்கும. இப்பூச்சிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். அசுவுணி செடிகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் வெளிறிக் காணப்படும். இதனால் செடியின் வளர்ச்சி பாதிப்படைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.அசுவுணியை கட்டுப்படுத்தும் முறை

அசுவுணியை கட்டுப்படுத்தும் முறை


விதை நடவில் இருந்து 25 நாட்களுக்கு மேல் உள்ள செடிகளின் இலைகளில் எறும்புகளின்  நடமாட்டம் இருந்தால் அச்செடியில் அசுவுணி இருக்கும. இலைகள் பின்நோக்கி மடங்கி இருந்தாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இருக்கும். இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது டைமெத்தோயேட் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தவும்.அசுவுணியை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

அசுவுணியை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை


அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த மீன் எண்ணெய் களிம்பு அல்லது வேப்ப எண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 3 மில்லி என்ற அளவில் கலந்து அதனுடன் ஒட்டு திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இலை சுருள் நோய்க்கான காரணம்

இலை சுருள் நோய்க்கான காரணம் 


பாகற்காயில் வரக்கூடிய இலை சுருள் நோய், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படுகிறது. அதாவது சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தினால், புதியதாக வளர்ந்த இலைகள் கீழ் நோக்கி கிண்ணம் போல் வளைந்து காணப்படும். தீவிர தாக்குதலின் போது இலைகள் காய்ந்து விடும். இந்த நோயை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இலை சுருள் நோயை கட்டுப்படுத்தலாம். அதாவது 1 மில்லி இமிடாகுளோபிரிட் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.