வாழ்நாள் கல்வி

பருத்திக்கு உர நிர்வாகம்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


பருத்தி சாகுபடியில் அடியுரம்

பருத்தி சாகுபடியில் அடியுரம் 


பருத்தி சாகுபடி செய்ய உள்ள வயலை 4 முதல் 5 உழவு ஒட்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 டன் அளவு மக்கிய தொழுவுரம் போட்டு உழுதுவிட வேண்டும். மண் ஆய்வுப்படி உரமிடல் மிகவும் நல்லது. மண் ஆய்வு செய்யாவிட்டால் அடியுரமாக 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 35 கிலோ பொட்டாஸ், 50 கிலோ அம்மோனியம் சல்பேட் ஆகிய உரங்களை இடவும். மானாவாரி பருத்திக்கு ஊட்டமேற்றிய தொழுஉரமாகக் கொடுத்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.



பருத்திக்கு முதல் உரம்

பருத்திக்கு முதல் உரம் 


பருத்திக்கு முதல் உரமாக கலப்பு உரம் வைத்தால் மிகவும் நல்லது. சூப்பர்பாஸ்பேட் 150 கிலோ, அமோனியம் சல்பேட் 40 கிலோ, பொட்டாஷ் 35 கிலோ ஆகிய மூன்றையும் கலந்து செடிக்கருகில் போட்டு மண்ணை மூடிவிட வேண்டும் அல்லது 20-20 உரம் 150 கிலோ, பொட்டாஸ் 30 கிலோ கலந்து செடிக்கு அருகில் போட்டு மண்ணை மூடி விட வேண்டும். 



பருத்திக்கு நுண்ணூட்ட உரம்

பருத்திக்கு நுண்ணூட்ட உரம்


பருத்தி விதைத்த உடன் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ பருத்தி நுண்ணுரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து, தூவி விட வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை 25 கிலோ மணலுடன் கலந்து தூவி விட வேண்டும். இவ்வாறு உரநிர்வாகம் செய்து வந்தால் பருத்தி மற்றும் மக்காச்சோளத்தில் உண்டாகும் நுண்ணூட்ட பற்றாக்குறையை தவிர்;க்கலாம். 



தழைச்சத்து உரமிடல்

தழைச்சத்து உரமிடல் 


தழைச்சத்து குறைபாடு உள்ள பயிரில் இலையின் அளவு சிறுத்து, நுனியில் இருந்து அடிப்பகுதி வரை மஞ்சள் நிறமாக இருக்கும். குறைபாடுள்ள பகுதியில் 1மூ யூரியா கரைசலை பாதிப்பு அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.



பருத்தியில் மணிச்சத்து குறைபாட்டின் பாதிப்புகள்

பருத்தியில் மணிச்சத்து குறைபாட்டின் பாதிப்புகள் 


இந்தக் குறைபாட்டினால் இலைகள் கரும்பச்சை நிறமாகக் காணப்படும். இலைகளில் செம்பழுப்பு நிற புள்ளிகளைக் காணலாம். நிவர்த்தி செய்ய  10 கிராம் டி.ஏ.பி. உரத்தினை ஒரு லிட்டர் நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி தெளிக்க வேண்டும்.



பருத்தியில் சாம்பல்ச்சத்து குறைபாட்டின் பாதிப்பு

பருத்தியில் சாம்பல்ச்சத்து குறைபாட்டின் பாதிப்பு

 
இலைகளின் ஓரங்கள் கிழிந்து, சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும். காய்கள் முதிராமல் நீண்ட நாட்கள் இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பினை 1 லிட்டர் நீரில் கரைத்து செடியில் பூ பூக்கும் போதும், காய் வெடிக்க ஆரம்பிக்கும் போதும் தெளிக்க வேண்டும்.



மழைக் காலத்தில் செய்யவேண்டிய உர நிர்வாகம்

மழைக் காலத்தில் செய்யவேண்டிய உர நிர்வாகம்  


மழைக்காலத்தில் பருத்தி செடிகளின்; வேர்கள் ஓடாது. செடி வளர்ச்சிக் குன்றி காணப்படும். அல்லது செடியின் வளர்ச்சிக் குறைவாக இருந்தால் செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும்;, பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்கள் கிடைக்கவும் 19:19:19 கரையும் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5-7 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும். இதன்மூலம் பயிர் வளர்ச்சி அடைந்து மண்ணில் உள்ள மற்ற சத்துக்களையும் எடுக்கும்.