வாழ்நாள் கல்வி

பருத்தியில் வேர் அழுகல் நோய்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


பருத்தியில் வேர் அழுகல் நோயின் அறிகுறி

பருத்தியில் வேர் அழுகல் நோயின் அறிகுறி 

பருத்தி செடியில்வே ர் அழுகல் நோயானது விதை நடவு செய்து 60 நாட்களுக்கு மேல் நமக்கு தெரியும். இந்த வேரழுகல் நோய் மண்வாழ் பூஞ்சைகளால் ஏற்;படுகிறது. களர் நிலத்தில் தான் வேர் அழுகல் நோய்; அதிகம் உண்டாகும். பாதிக்கப்பட்ட செடிகள் காய்ந்து விடும், அந்த செடியை பிடுங்கினால் மண்ணை விட்டு எளிதாக வெளியே வந்துவிடும், வேர் பட்டையும் அழுகி இருக்கும்;. இதுவே வேர் அழுகல் நோயின் அறிகுறிகள் ஆகும். 

 



வேரழுகல் நோய் வராமல் தவிர்க்கும் முறைகள்

வேரழுகல் நோய் வராமல் தவிர்க்கும் முறைகள் 

வேர் அழுகல் நோய் வராமல் இருக்க பருத்தி விதையை விதைக்கும் போது டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற உயிர் பூஞ்சாணக் கொல்லியை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்து விதைத்தல் வேண்டும்.  விதைகளை ஆழமாகவும்இ அதிக ஈரப்பதம் உள்ள மண்ணில் விதைப்பதையும் தவிர்;க்க வேண்டும். பருத்தி வயலில் தண்ணீர் தேங்காமல் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். 



பருத்தியை தாக்கும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

பருத்தியை தாக்கும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் 

 
பருத்தியை தாக்கும் வேர் அழுகல் நோய் வராமல் இருக்க 1 ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை மற்றும் 1 கிலோ சூடோமோனஸ் உயிரியல் மருந்துகளை 50 கிலோ எருவுடன் கலந்து செடிகளை சுற்றி மண்ணில் இடவேண்டும். அல்லது இரசாயன முறையில் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பன்டாசிம் என்ற வீதத்தில் கரைத்து செடிகளை சுற்றிலும் காட்டில் ஈரம் இருக்கும்போது தண்டின் கீழ்பகுதி நனையும் படி ஊற்ற வேண்டும்.