வாழ்நாள் கல்வி

சோளத்தில் கரிப்பூட்டை நோய்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


சோளத்தில் கரிப்பூட்டை நோய்

சோளத்தில் கரிப்பூட்டை நோய்  (Smut Disease in Sorghum)

இருங்கு சோளம், வெள்ளைச்சோளம் மற்றும் செஞ்சோளம் ஆகிய சோள ரகங்களை மானாவரி நிலங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிர் மழை குறைவாக இருக்கும் காலங்களில் வறட்சியைத் தாங்கி விளைச்சல் கொடுக்கும். இவை உணவிற்;கும் தீவனத்திற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சோளப் பயிரில் பூச்சி மற்றும் நோயின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது, இருப்பினும் சோளத்தில் வரக்கூடிய நோய்களில் கரிப்பூட்டை நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. 



சோளத்தில் கரிப்பூட்டை நோயின் வகைகள்

சோளத்தில் கரிப்பூட்டை நோயின் வகைகள் (Type of Smut Disease)


சோளத்தில் வரக்கூடிய கரிப்பூட்டை நோய் கதிரில் ஒருவகை பூசண பாதிப்பால்  ஏற்ப்படுகிறது. இந்த கரிப்பூட்டை நோயை நான்கு வகையாக பிரிக்கலாம் அவை தலைக்கரிப்பூட்டை நோய், தானியக்கரிப்பூட்டை நோய், நீளக்கரிப்பூட்டை நோய், மற்றும் உதிரிக்கரிப்பூட்டை நோய் ஆகும். இவை அனைத்தும் சோள கதிர்களை தாக்குகியது. 



சோளத்தில் கரிப்பூட்டை நோயின் அறிகுறிகள்

சோளத்தில் கரிப்பூட்டை நோயின் அறிகுறிகள் (Symptoms of Smut Disease)


சோளக் கதிரில் பூக்கும் போதும், சோள மணிகள் தோன்றும் போதும் நோயின் அறிகுறிகளைக் காணலாம். அதாவது நோய் பாதித்த பயிரின் மேற்பகுதியில் கதிருக்கு பதில் சம்பல் கலந்த வெண்மை நிறம் கொண்ட கரிப்பூட்டை வெளிப்படும். முழுவதும் கதிர் வெளி வந்த பின்னர் கதிரில் இருந்து கரித்தூள்கள் போன்று நோயின் வித்துக்கள் வெளிப்படும். மணிக் கரிப்பூட்டை நோயின் அறிகுறியானது தாக்கப்பட்ட கதிரில் மணிகளுக்கு பதில் கரிப்பூட்டை வித்துகள் மணிகளை விட பெரிதாகக் கருமை நிறத்துடன் காணப்படும். இந்நோய் கதிர் முழுவதுமாகவோ அல்லது சில மணிகள் மட்டுமோ தாக்கப்பட்டும் இருக்கும்.



கரிப்பூட்டை நோயை வராமல் தடுக்கும் முறை

கரிப்பூட்டை நோயை வராமல் தடுக்கும் முறை (Smut Disease Controlling Methods)


சோளத்தில் கரிப்பூட்டை நோய் வராமல் தடுக்க நல்ல தரமான நோய் மற்றும் பூச்சி தாக்காத வயல்களிலிருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும்;. விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் (அ) கேப்டான் (அ) திரம் கொண்டு விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் தாக்கப்பட்ட வயலில் கதிர்களை கரிப்பூட்டை வித்துக்கள் வெளியே வரும் முன்னர் பார்த்து  வயலில் இருந்து அகற்றி விட வேண்டும். அவ்வாறு அகற்றும் போது நோய் பரவாமல் இருக்க காகித உறை கொண்டு மூடி கதிர்களை சேகரிக்க வேண்டும். மேலும் மறுதாம்புப் பயிர் செய்வதையும் தவிர்க்கவும். இதன் மூலம் சோளத்தில் வரக்கூடிய கரிப்பூட்டை நோயை கட்டுப்படுத்தலாம்.