வாழ்நாள் கல்வி

மிளகாயில் நோய் மேலாண்மை

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


கருகல் மற்றும் பழ அழுகல் நோயின் அறிகுறிகள்

கருகல் மற்றும் பழ அழுகல் நோயின் அறிகுறிகள் (Symptoms of Blight Diseases)


மிளகாய் செடியில் கருகல் நோயின் அறிகுறியாக கிளைகளின் நுனியில் இருந்து பின்னோக்கி கருக ஆரம்பித்து பினனர் செடியின் மேற்பகுதி முழுவதும் கருகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகளின் இலைகள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாகவோ அல்லது கருப்பு நிறமாகவோ மாறிவிடும். இதுபோல் நோய் தாக்கிய மிளகாய் பழத்தில்  சாம்பல் நிற புள்ளிகள் இருக்கும். இந்த புள்ளிகள் நாளடைவில் பழம் முழுவதும் பரவி பழங்கள் உதிர்ந்துவிடும். மேலும் பழத்தின் உட்புறத்தோளிலும் பழுப்பு நிற பூஞ்சணம் வளர்ந்து இருக்கும். இதுவே மிளகாய் செடியில் ஏற்படக்கூடிய கருகல் நோயின் அறிகுறி ஆகும்.  



கருகல் நோயினை கட்டுப்படுத்தும் முறை

கருகல் நோயினை கட்டுப்படுத்தும் முறை (Die Back Controlling Method)


மிளகாய் செடிகளில் கருகல் நோய் தரம் குறைந்த விதைகள் மற்றும் காற்றின் மூலம் பரவுகிறது. அதனால் விதைகளை விதைநேர்த்தி செய்து விதைக்கவும். மிளகாய் வயலில் நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மான்கொசெப் மருந்து என்ற வீதத்தில் கலந்து இரண்டு முறை 15 நாள் இடைவெளியில் தெளித்து கருகல் நோயினை கட்டுப்படுத்தவும்.



மிளகாய் செடியில் இலைசுருட்டு நோய்

மிளகாயில் செடியில் இலைசுருட்டு நோய் (Leaf Curl Diseases)


மிளகாய் பயிரில் ஏற்படும் இலைசுருட்டு நோயை உண்டாக்குவது சாறு உறிஞ்சும் பூச்சிகளே. இதனால் செடிகள் வளர்ச்சி குன்றி இலைகள் சுருண்டு காணப்படும். அதனால் இலைசுருட்டு நோயை கட்டுப்படுத்த சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி இமிடாகுளோபிரிட் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது டைமீத்டோயேட் என்ற மருந்தை 10 லிட்டருக்கு தண்ணீருக்கு 20 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

 



இலைசுருள் வைரஸ் நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

இலைசுருள் வைரஸ் நோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை (Leaf curl Diseases control through Organic)


மிளகாய் செடிகளில் இலைசுருள் வைரஸ் நோயை பரப்புவது வெள்ளை ஈக்கள். அதனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது அவசியம். இலைசுருள் நோயை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு மஞ்சள் நிற ஒட்டு பொறியை 15 என்ற அளவில் செடியின் உயரத்திற்கு ஒரு அடிக்கு மேல் கட்டிவைக்கவும்.



இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் (Leaf Spot)


மிளகாயில் இலைப்புள்ளி நோய் தாக்கிய செடிகளின் இலைகளில் செம்பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மேங்கோசெப் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 



சாம்பல் நோய்

சாம்பல் நோய் (Powdery mildew)


அடிச்சாம்பல் நோய் தாக்கத்தால் இலைகளின் அடியில் வெள்ளை நிற பொடி தூவியது போல் இருக்கும். அடிச்சாம்பல் நோய்க்கு நனையும் கந்தகத்தூள் 2 கிராம் அல்லது டைகோகேம் 0.5 கிராம் இதில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும்.