வாழ்நாள் கல்வி

வாழையை தாக்கும் தண்டு கூன்வண்டு

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


தண்டு கூன்வண்டின் வளர்ச்சி பருவம்

தண்டு கூன்வண்டின் வளர்ச்சி பருவம் (Growth stage of Stem Borers)


வாழை மரங்களை சேதப்படுத்தும் தாய் தண்டு கூன்வண்டானது கருப்பு மற்றும் செம்மண் நிறத்தில் இருக்கும். இந்த வண்டுகள் வாழை மட்டை மற்றும் தண்டு பகுதிகளில் முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரக்கூடிய புழுக்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். இவைகள் வாழை மரத்தின் பட்டையை குடைந்து கொண்டே உட்சென்று நடுத்தண்டினையும்; தாக்குகிறது.



வாழையை தாக்கும் கூன்வண்டுகள்

வாழையை தாக்கும் கூன்வண்டுகள் (Impact of Stem Borer in Banana)


கூன்வண்டின் புழுக்கள் தண்டினுள்ளேயே,  வாழைநார் கொண்டு தன்னைச் சுற்றி கூடை கட்டி கூட்டுப் புழுவாக மாறி வளர்கின்றன. பின்பு கூன்வண்டாக மாறி வெளிவந்து நல்ல நிலையில் இருக்கும் மற்ற மரங்களை தாக்குகிறது. பாதிக்கப்பட்ட மரத்தின் தண்டினை பிளந்து பார்த்தால் தண்டுப்பகுதி நீண்ட அளவில் குடைந்து காணப்படும். அதிகளவு தண்டு கூன்வண்டுகளின் தாக்குதல் இருந்தால் வாழை மரத்தின் தண்டுப் பகுதி ஓட்டை ஓட்டையா இருக்கும். 

 



தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் (Symptoms of Banana Stem borer Attack)


தண்டு கூன் வண்டானது 5 முதல் 6 மாத வயதுடைய மரங்களையே பெரும்பாலும் தாக்குகின்றன. இவ்வண்டின் புழுக்கள் தண்டினை விரும்பி உண்பதால் 7ஆவது மாதத்துக்கு மேல் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும். இந்தப் புழுக்கள் மட்டையைக் குடைந்து உள்ளே செல்வதால், துவாரம் ஏற்பட்டு அதில் பிசின் போன்ற திரவம் வெளிப்படும். இவ்வண்டுகளின் தாக்குதலால் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர் போன்றவை செல்வது தடைபட்டு, மரம் வளர்ச்சியின்றி இருக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் தண்டு திசுக்கள் அழுகி துர்நாற்றம் வீசும். 



கூன்வண்டு தாக்குதலை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை

கூன்வண்டு தாக்குதலை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை (Bio control methods)


வாழையில் கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டங்களில் சேரும் காய்ந்த இலைகளையும், வாழை மட்டைகளையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். மரத்தில் இருந்து வாழைத்தார் வெட்டிய பின் மரத்தை பிளந்து உட்தண்டு பகுதிகளை நீக்கி விட வேண்டும். மேலும் 1 முதல் 2 அடி நீளமுள்ள வாழை மர தண்டுகளை நீளவாக்கில் பிளந்து, பிளந்த உட்பகுதி நிலத்தை நோக்கி இருக்குமாறு தோட்டத்தில் ஆங்காங்கே வைத்து விடவேண்டும். இந்த பிளந்த தண்டுகளில் கூன்வண்டுகள் கவரப்பட்டு தண்டுக்குள் வண்டுகள் இருக்கும். பின் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம் அல்லது வயலில் ஈரப்பதம் இருக்கும் பொழுது பூஞ்சாண பூச்சிக் கொல்லிகளான பிவேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்றவற்றை தெளித்து உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.



தண்டு கூன்வண்டு கட்டுப்பாட்டில் நீம் அசாலின் பங்கு

தண்டு கூன்வண்டு கட்டுப்பாட்டில் நீம் அசாலின் பங்கு  (Stem Borer control through Neemazal) 
நீம்அசால் என்பது வேம்பினை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனமற்ற பூச்சி கொல்லியாகும். இதன் பூச்சி கொல்லித் தன்மைக்கு காரணமாக இருப்பது அசாடிராக்டின் என்கிற வேதிப் பொருளாகும். வாழையில் கூன்வண்டின் பாதிப்பைக் கட்டுப்படுத்த வாழையில் நீம் அசால் 1.2 சதத்தை (4 மி.லி. நீம் அசால், 4 மி.லி. தண்;ணீர்) ஊசி மூலம் தண்டுகளில் செலுத்தி கட்டுப்படுத்தலாம்.