வாழ்நாள் கல்வி

பயறுவகை பயிர்கள்

தட்டப்பயறு சாகுபடி தொழில் நுட்பம்

பயறுவகை பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தட்டப்பயறு பயிர்வகைப் பயிர்களை சேர்ந்தது. அதிக புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இவற்றை கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். நடவு செய்த மூன்று மாதத்திலேயே பலன் தரக்கூடியது.  தட்டப்பயிரின் செடியில் வேர்முடிச்சுகள் தென்படுவதால் அவற்றில் தழைச் சத்துக்களை  கிரகித்து வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு. இது வெப்பத்தை விரும்பும் பயிர் அனைத்துவகையான மண்வகைகளிலும் வளரக்கூடியது.  

 

ரகம்

வம்பன்1, கே1, கே2.

 

பட்டம்

ஆடி பட்டம்

 

விதையளவு

8 கிலோ / ஏக்கர்

 

விதை நேர்த்தி

உயிர்உர விதை நேர்த்தியான ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம்,  இவற்றை ஆறிய அரிசி வடிகஞ்சியில் கலந்து  விதை நேர்த்தி செய்து நிழலில்  உலர்த்தி 24 மணிநேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

நன்கு புழுதிபட  4-5 உழவுகள் போட வேண்டும். கட்டிகள் மற்றும் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் மண் பொதுபொதுப்பாக இருக்கவேண்டும். கடேசி உழவின் போது  5 டன் மக்கிய தொழுவுரம் போட்டு உழவு செய்ய வேண்டும். .  

 

அடியுரம்

ஒரு டன் ஊட்டமேற்றிய தொழுவுரம் போட வேண்டும் அல்லது 30 கிலோ டி.ஏ.பி. உழவு சால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும். 

 

உயிர் உரம்

ரைசோபியம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, டிரைக்கோடெர்மாவிரிடி ஒருகிலோ சூடோமோனஸ் ஒரு கிலோ  போன்ற உயிர் உரத்தினை  100 கிலா அளவுள்ள மக்கிய ஈரப்பதம் உள்ள தொழுவுரத்துடன்  நன்றாக கலந்து நிழலில் மூடி வைத்திருந்து வயலில்  ஈரம் இருக்கும் பொழுது  தூவி விடவேண்டும்.

 

நுண்ணுரம்

ஒரு ஏக்கருக்கு பயறுவகை நுண்ணுரம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டரும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.  ( 33 செடிகள் / சதுர மீட்டர்)

 

நீர் நிர்வாகம்

விதை நடவு செய்யும் போது  உயிர்த் தண்ணீர் பாய்ச்சனும், அதன் பிறகு விதை முளைக்கும் போதும், பூ பூக்கும் பருவம், காய் வளர்ச்சி பருவம்,  ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்;களில் நீர்பாய்ச்ச வேண்டும்;

 

களை நிர்வாகம்

பயிர் நடவு செய்த 15ம் நாள் ஒரு களையும்,  30ம் நாள் ஒரு களையும் எடுக்க வேண்டும். சரியான தருணத்தில் களை எடுக்காமலிருந்தால் பயிர் வளர்ச்சி  பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.

 

அசுவினி

அறிகுறி
இளம் தளிர்கள், பூக்கள், மொட்டுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும். பூக்களும் பிஞ்சுகளும் உதிரும்.  செடிகளில் சாறு வடியும்,  செடிகளை சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை    
அசுவுனி தாக்கப்பட்ட செடிகளை களைத்து அழிக்க வேண்டும். மோனோக்குரோட்டோ பாஸ்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி / என்ற அளவில்  தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

பச்சைப்புழு

அறிகுறி

பச்சைப்புழுவின் தாய்ப்பூச்சி பழுப்பு நிறத்தில் காணப்படும் அவை  சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில்  தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள்  செலுத்தி வட்டவடிவ துவாரங்கள்  ஏற்படுத்துகின்றன.

கட்டுப்படுத்தும் முறை இயற்கை முறையில்
    
ஒரு ஏக்கருக்கு ஒரு இடத்தில் விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தலாம் , இனக்கவர்ச்சிப் பொறி  ஒரு ஏக்கருக்கு  5 இடங்களில் வைத்து ஆண்; அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். டிரைக்கேகிரம்மா  முட்டை ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு  4 சிசி பயன்படுத்தலாம்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஒவ்வொன்றிலும் சம அளவு  (ஒரு ஏக்கருக்கு அரைக்கிலோ அளவு ) எடுத்து இடித்து சாறு பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி  என்ற விகிதத்தில்  கலந்து மாலைவேளையில் தெளிக்கலாம். 

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

இரசாயனமுறையில்  கட்டுப்படுத்த     ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி குவினல் பாஸ்  அல்லது குளோரி பைரிபாஸ் 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில்  தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

நாவாய்ப்பூச்சி

தாக்குதலின் அறிகுறி
     
நாவாய்ப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உண்டாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும். வெறும் தோல் மட்டும் இருக்கும் 

கட்டுப்படுத்தும் முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு  3 மில்லி குவினல் பாஸ் அல்லது குளோரி பைரிபாஸ்  மருந்தை மாலை வேளையில்  தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 

வைரஸ்

அறிகுறி      

செடி ஆங்காங்கே பழுத்து திட்டு திட்டாக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பிறகு இலைகள் அனைத்தும் பழுப்பு நிறமாக மாறி கொட்டி விடும். 

கட்டுப்படுத்தும் முறை 

வைரஸ் தாக்கப்பட்ட செடிகளை பிடிங்கி அப்புறப்படுத்த வேண்டும்.
விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளிலிருந்து விதை தேர்வு செய்யக் கூடாது. சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.    

 

சாம்பல் நோய்

அடிச்சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறி
    
இலைகளின் இரு புறங்களிலும் சிறிய வெண்மை கலந்த  சாம்பல் நிறமான  புள்ளிகள் காணப்படும். இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை    

அடிச்சாம்பல் நோய்தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். கார்பன்டிசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2  கிராம்   என்ற அளவில்  கலந்த தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

அறுவடை மொழில் நுட்பம்

முற்றிய நெற்றுக்கள் அறுவடை செய்து காய வைத்து குச்சியில் தட்டி பயிர்களை பிரித்தெடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு 
இலைவழித் தாவர  உணவாக மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10கிராம்   பூ பூக்க தொடங்கும் பருவத்திலும், பூப் பருவத்திலும் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு  நனையுமாறு தெளிக்க வேண்டும்.

அறுவடை செய்யும்போது தட்டப்;பயிரின் வேர்ப்பகுதியை வயலிலேயே விட்டு விட வேண்டும். வேர் முடிச்சில்தான் தழைச்சத்து  அதிகம் இருக்கும்.

 

முடிவுரை

தட்டப்பயறு  சாகுபடி செய்தால்  செலவும் குறைவு. குறுகிய நாளிலேயே பலன் தரக்கூடியது. இவற்றை சாகுபடி செய்து பழமாகவும் அறுவடை செய்து விற்பனை செய்லாம். நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது இவற்றிற்கு உரம் அதிகம் தேவைப்படாது தண்ணீர் செலவும் குறையும், எனவே விவசாயிகள் பயறுவகை பயிர்களாகிய தட்டப்பயிரை சாகுபடி செய்ய முன்வருவோம்.