வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

புகையிலை கரைசல் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

இரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தி வந்ததால் மண்வளம் பாதிப்பு அடைந்துள்ளது. மண்வளத்தை பாதுகாக்க விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி கொல்லியாக செயல்படும் தன்மை கொண்டது புகையிலைக் கரைசல்  இவற்றை குறைந்த செலவில் தயாரித்து  பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.  

 

 

புகையிலைக் கரைசலின் பயன்கள்

  • சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் 
  • சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்பும் வைரஸ் நோய் தாக்குதல் வராது
  • புழுக்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி உண்ண விடாமல் தடுக்கும்.
  • மலர் சாகுபடிக்கு அடித்தால் பூக்கள் தொடர்ந்து பூத்துக்கொண்டே இருக்கும்.

 

 

புகையிலைக் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

புகையிலை – 150 கிராம்
தண்ணிர்    - 1 லிட்டர்
பாத்திரம்    - 1 

 

 

தயாரிக்கும் முறை

முதல்படி

முதலில்  150 கிராம் புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி  எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம்படி

1 லிட்டர் தண்ணீரை  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது புகையிலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து பிறகு. பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஓர் இரவு அல்லது 10 மணிநேரம் மூடி வைத்து விட வேண்டும். 

மூன்றாம்படி

அவற்றை நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். கிடைக்கக் கூடிய கரைசலுடன் 10 மடங்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.  

 

பயன்படுத்தும் பயிர்கள்

அனைத்துவகை பயிகளுக்கும் தெளிக்க தெளிக்கலாம் 

கட்டுப்படுத்தும் பூச்சிகள்:
அசுவுணி, பச்சைதத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி

 

பயன்படுத்தும் முறை

பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கலாம்

பயிர் நடவு செய்த 15 நாட்களில் ஒரு முறையும் மாதம் ஒரு முறையும் தெளிக்கலாம்.

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை(RSGA) ,
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி அஞ்சல், கன்னிவாடி வழி, திண்டுக்கல் மாவட்டம் - 624 705. போன் நம்பர்; - 0451- 2555745> 9952305745.
மின்னஞ்சல் rsgaseed @gmail.com 
வலைதளம்; -WWW.L3FTN.COM, rsga.co.in
முகநூல் Facebook /rsgaseedkannivadi

 

 

முடிவுரை

புகையிலை  கரைசல் தயாரித்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்போ, பக்கவிளைவோ ஏற்படாது. எனவே விவசாயிகள் குறைந்த செலவில் தயாரித்து  பூச்சி, நோய்தாக்குதலை  இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.