வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

அக்னி அஸ்திரம் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

அக்கினி அஸ்திரம் பெயருக்கு ஏற்றாற்போல  அக்கினி ( நெருப்பு) அஸ்திரம் ( சூரணம்)  அக்கினி அஸ்திரம் பயிர்களை தாக்கும்  பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் எரியும் தன்மையை ஏற்படுத்தி  பூச்சியின் இனங்களை அழிக்கும். அதுமட்டும் அல்லாது அவற்றால் ஏற்படும் நோய்களை தடுக்க கூடிய எளிய வகை பூச்சிகொல்லிதான்  இந்த அக்கினி அஸ்திரம். இவற்றை தெளித்தால் எல்லாவகையான  பூச்சி தாக்குதலும்  குறையும் நஞ்சில்லா காய்கறியும் நமக்கு கிடைக்கும். சுற்று சூழலும் பாதுகாக்க பயன்படுகிறது அனைத்து விவசாயிகளும் இவற்றை தயாரித்து பயன்படுத்த முன்வருவோம்.

 

அக்னி அஸ்திரம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

வேப்ப இலை     - 4 கிலோ
வெள்ளைப்பூண்டு     - 2 கிலோ
பச்சைமிளகாய்    - 2 கிலோ
புகையிலை        - 1 கிலோ
மாட்டுக்கோமியம்    - 30 லிட்டர்
பாத்திரம்         - 50 லிட்டர் கொள்ளளவு

 

 

தயாரிக்கும் முறை

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில்  பழைய மாட்டுக்கோமியம் 30 லிட்டர், புகையிலை 1 கிலோ, (பச்சைமிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 2 கிலோ இவற்றை பொடித்தது) வேப்ப இலை 4 கிலோ அனைத்தையும் சேர்த்து  ஒரு பாத்திரத்தில் போட்டு  1 மணி நேரம் கொதிக்க விட வேண்டும்.  பின்பு அதனை இறக்கி ஆற விட்டு பின்பு வடிகட்டி வைத்துக்   கொண்டு பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறி பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்;ணெய் வித்து பயிர், பணப்பயிர்கள், வாசனை பயிர்கள் வீட்டுத் தோட்ட பயிர்கள்,  தானியப்பயிர்கள்  மழைத்தோட்ட பயிர்கள் போன்ற அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

 

பயன்படுத்தும் முறை

ஒரு  லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற விகித்தில் கலந்து பயிர்களுக்கு  காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம். காய்ப்புழு தாக்கக்கூடிய அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

 

 

பயன்கள்

  • பூச்சிகொல்லியாக பயன்படுகிறது.
  • நன்மை செய்யும் பூச்சிகள் வளரும்.
  • தீமை செய்யும் பூச்சிகளுக்கு ஒவ்வா தன்மையை உண்டு பண்ணி பூச்சிகள் பயிர்களை தாக்காமல் வெளியே செல்லும்.
  • இரசாயன மருந்து தெளித்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து இறந்துவிடும்.
  • செலவு குறையும் பயிர் வளர்ச்சியை ஊக்கு விக்கும்
  • இயற்கை மருந்து தெளித்தால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்காது.மகசூல் அதிகமாக இருக்கும். மண் வளம் கெடாது.
 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இயற்கை முறையில் பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தக்கூடிய இக்கரைசலின் பயன்களை பற்றி அனுபவமுள்ள விவசாயிகள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் அனைவரும் இவற்றை தயாரித்து பயன்படுத்த முன்வருவோம்.