வாழ்நாள் கல்வி

காய்கறி பயிர்கள்

வெண்டைக்காய் சாகுபடி தொழில் நுட்பங்கள்

காய்கறி பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

வெண்டைக்காய் மக்கள் விரும்பி சமைத்து சாப்பிடக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இவை பருத்தி செடியின் குடும்பத்தை சாhந்தது. வெண்டைக்காயின்  பூர்வீகம்  எத்தோப்பியா நாட்டிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்துள்ளது. வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் பனிகாலங்களில் இவற்றை சாகுபடி செய்தால் அதிகமான நோய்தாக்குதல் ஏற்படும்.  அனைத்துவகையான மண்வகைகளிலும் வளரக்கூடியது.  இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும்.

 

ரகம்

ஒட்டுரகம், அர்க்கா அனாமிக்கா.

 

பட்டம்

மே,  ஜூன்  மாதங்களில் பயிரிடுவதை தவிர்க்கவும்  மற்ற  மாதங்களில்  பயிரிடலாம் 

 

விதையளவு

ஒட்டு ரகமாக இருந்தால்  2 கிலோ  / ஏக்கர் , 
சாதாரண ரகம் 3 கிலோ  / ஏக்கர்

 

 

விதை நேர்த்தி

அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம் இரண்டையும்  ஆறிய அரிசி வடிகஞ்சியில் கலக்கி  விதையில் நனைத்து  நிழலில் உலர்த்தி   24 மணி நேரத்திற்குள் நடவு செய்தல் வேண்டும். வெயில் காலமாக இருந்தால் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நடவு செய்தல் வேண்டும்  

 

நிலம் தயாரித்தல்

மூன்று முதல் நான்கு உழவு போட வேண்டும். கட்டிகள், களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசி உழவின்போது  5 டன் தொழுவுரம் இடவேண்டும் . அல்லது மண்புழு  உரம் 1000 கிலோ,  250 கிலோ ஜிப்சம்  இடுவது நல்லது.

 

பயிர் இடைவெளி

ஒட்டு ரகம் 
வரிசைக்கு வரிசை  2 அடி, செடிக்கு செடி 1 அடி.    
சாதாரண ரகம்  
வரிசைக்கு வரிசை  1½ அடி  செடிக்கு செடி 1 அடி. 

 

 

உயிர் உரம்

பயிர் நடவு செய்த  மூன்றாம் நாள் உயிர் தண்ணீர்  பாய்ச்சும் போது  2 கிலோ அசோஸ்பைரில்லம்,   2 கிலோ  பாஸ்போபாக்டீரியா,  1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி.  2 கிலோ வேம் நான்கையும்   ஆறிய மக்கிய தொழுஎரு 100 கிலோ அளவில் கலந்து விதைக்க வேண்டும்.

 

நீர் நிர்வாகம்

3 ம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சிய பிறகு  வாரத்திற்கு ஒரு முறையும், காய் அறுவடை செய்யும் பொழுது 4 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .

 

களை நிர்வாகம்

ஆட்கள் மூலம் களை எடுத்து கட்டுப்படுத்தலாம்   

 

உர நிர்வாகம்

முதல் களையின் போது 30 நாட்களுக்குள் 50 கிலோ  டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் செடியின் அருகில் போட்டு மண்ணைப்போட்டு மூடவேண்டும். 15 நாட்களுக்கு  ஒரு முறை  20 கிலோ  அம்மோனியம் சல்பேட், 15 கிலோ பொட்டாஷ; செடிக்கு அருகில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 

செடி வளர்ச்சி குன்றி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில்  19 :  19 :  19   கரையும் உரம் தெளித்து செடி வளர்ச்சியை அதிகப் படுத்தலாம்.

 
செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் தெளித்து செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம். 

 

 

அசுவினி தாக்குதல்

அசுவினி  தாக்குதலின் அறிகுறி 

இலையின் அடியில் கருப்பாக இருக்கும்.  இலை தளிர்க்காமல் குடை போன்று இருக்கும்.  செடியின் மேல் எறும்பு ஊறும். 

கட்டுப்படுத்தும்முறை

வரப்பு மற்றும்  வாய்க்கால் பகுதியில்;  தட்டப்பயறு  நடவு செய்து அசுவினி தாக்குதலை குறைக்கலாம்.

இமிடா குளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1மில்லி, அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து  தெளித்து கட்டுப்படுத்தலாம். 

 

 

பச்சைபூச்சி

தாக்குதலின் அறிகுறி
 

செடியில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி மஞ்சளாகி உதிர்ந்து விடும்.  செடி நன்றாக காய்க்காது. 

கட்டுப்படுத்தும்முறை 

மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

குளோரி பைரிபாஸ், அல்லது குயினால்பாஸ்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். 

 

 

வேர்அழுகல்

வேர் அழுகல் தாக்குதலின் அறிகுறி  செடியை பிடுங்கிப் பார்த்தால் வேர்ப்பகுதி அழுகி காணப்படும்.  இந்நோய் தாக்கப்பட்ட செடி ஒரு வாரத்திற்குள் காய்ந்து மகசூல் இளப்பு ஏற்படும் தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கக் கூடாது.
 
கட்டுப்படுத்தும்  முறை 

டிரைக்கோடெர்மா விரிடி விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலமும், விதை நடவு செய்த  ஒரு வாரத்திற்குள் டிரைக்கோடெர்மா விரிடி 2கிலோவுடன் மக்கிய தொழு எரு 50 கிலோ கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது விதைத்து   இந்நோயை கட்டுப்படுத்தலாம். 

 

 

காய்ப்புழு

காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி  

மொட்டில் துவாரம் இட்டு இளம் பிஞ்சுகள், காயை சாப்பிடுவதால் காய் வளைந்து காணப்படும்.
 
கட்டுப்படுத்தும்முறை
 

இந்த காய்ப்புழுவை கட்டுப்படுத்த விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம், டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை 4 மில்லி / ஏக்கர் பயன்படுத்தலாம்.

இனக்கவர்ச்சி பொறி 6  இடங்களில் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

குளோரிபைரிபாஸ் அல்லது குயினால்பாஸ் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி  கலந்து  தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 

 

 

மஞ்சள்தேமல் நோய்

அறிகுறி 
செடி வெளுத்து இளமஞ்சள் நிறமாக ஆங்காங்கே காணப்படும். இந்நோய் வெள்ளை ஈ மூலமாக பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் காய்கள் அனைத்தும் வெண்மையாக மாறிவிடும். 

கட்டுப்படுத்தும்முறை  
 
இந்நோய் உள்ள  செடிகளை வயலில் இருந்து அகற்றி விடவேண்டும். மஞ்சள் அட்டையில் கிரீஸ் அல்லது விளக்கெண்ணெய்யை தடவி வைத்து கட்டுப்படுத்தலாம். ஆல்லது மஞ:சளய் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து பறக்கும் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

இமிடாகுளோர் 1 மில்லி   ஒரு லிட்டர் தண்ணீருடன்   நிம்புசிடின் 3 மில்லி என்ற அளவில்  கலந்து தெளிக்கலாம். 

 

 

சிவப்பு செல்

தாக்குதலின் அறிகுறி 

இலை சல்லடை போன்று காணப்படும். இலையின் மேல் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  
கட்டுப்படுத்தும் முறை 
புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2½  மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.  

 

 

சாம்பல் நோய்

தாக்குதலின்  அறிகுறி

செடியின் பின்பகுதியில் இலையில் சாம்பல் நிறத்துடன் காணப்படும். பொதுவாக பனிகாலமான நவம்பர், டிசம்பர் மாதங்;களில் அதிகமாக இருக்கும்  
 
கட்டுப்படுத்தும் முறை   
சல்பர் 1 லிட்டர் தண்ணீருக்கு  2 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.   

 

 

வளர்ச்சி ஊக்கி

பூ பூக்கும் பருவத்திலும் பிறகு 15 நாள் கழித்தும்  வளர்ச்சி ஊக்கி  ஏதாவது ஒன்றை வயலில் ஈரம் இருக்கும் பொழுது மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம்

 

அறுவடைத் தொழில் நுட்பம்

ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும். காய்களை செடியில் முத்தவிடக் கூடாது முத்த விட்டால் செடி வளர்ச்சி நின்று விடும்

 

முடிவுரை

வெண்டக்காயை சாகுபடி செய்வதால் செலவும் குறைவு  45 நாளிலேயே மகசூல் கொடுக்கக் கூடியது  அவற்றில் உள்ள கொழகொழப்புத் தன்மைத்தான். பிடிக்காமலே பலரும் அதை விரும்பி  உணவில் சேர்த்துக்  கொள்வதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. வெண்டைக்காய் சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.  இவ்வளவு நன்மை தரும்  வெண்டைக்காயை  விவசாயிகள் சாகுபடி செய்ய முன் வருவோம்.