வாழ்நாள் கல்வி

எண்ணெய்வித்து பயிர்கள்

நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பம்

எண்ணெய்வித்து பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

நிலக்கடலை எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது.  இவை ஒரு எண்ணெய் வித்து பயிராகும்.  இன்று உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக உள்ளது இந்தியா.  இதன் தாயகம் வட அமெரிக்கா. தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய்,  (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாகவும், அவற்றை பொடித்து இனிப்பு உருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

 

ரகம்

டிஎம்.வி 7, வி.ஆர்.ஐ.1, 3, 8, 12,  ஏ. எல் ஆர் 3

 

பட்டம்

மானாவாரி பயிராக சித்திரை பட்டம்
ஆடிபட்டம் இறவை பயிராக மார்கழி , 
மாசி பட்டமும் மற்றும் சித்திரைப் பட்டத்திலும் நடவு செய்யலாம் 
கார்த்திகை,  - நவம்பர் - டிசம்பர்
மார்கழி பட்டம் டிசம்பர் - ஜனவரி
ஆடி  பட்டம்  ஜீலை- ஆகஸ்ட்
ஆனி பட்டம்  ஜீன்- ஜீலை

 

 

விதை அளவு

1 ஏக்கருக்கு 40  சேர் அல்லது 65 கிலோ பருப்பு

 

விதை நேர்த்தி

இயற்கைமுறையில்    
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கலந்து உலர்த்தி நடவு செய்யலாம் 
உயிர்உர விதைநேர்த்தி 
ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு  2 பாக்கெட் ரைசோபியம் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா  இவற்றுடன் ஆ றிய அரிசி  வடிகஞ்சி தேவைக்கேற்ப கலந்து 24 மணிநேரத்திற்குள் விதைக்க வேண்டும்,
இரசாயன  விதை நேர்த்தி 
கார்பென்டாசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம் 
குறிப்பு 
இதில்தாவது ஒன்றில் கலந்து விதை நேர்த்தி செய்யவும் இரசாயன விதைநேர்தியில்  உயிர் உரவிதை நேர்த்தியை கலக்க கூடாது. 

 

 

நிலம் தயாரித்தல்

மணல் பாங்கான வண்டல்,  செம்மண் மற்றும் கரிசல் மண் கடலை நடவு செய்ய ஏற்றவை. மண்ணில் கட்டிகள் இல்லாமலும் அடிப்பக்கம் இருகல் இல்லாமல்; 4, 5 உழவு போட வேண்டும் ஒரு ஏக்கருக்கு  5 டன் தொழுஉரம்  போட வேண்டும். கடைசி உழவின் போது 200 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.

 

அடியுரம்

ஒரு ஏக்கருக்கு 50 கிலோ டி. ஏ.பி , 35 கிலோ பொட்டாஷ் இரண்டையும் கலந்து காட்டில் விதைத்து விட வேண்டும்.

 

விதைக்கும் முறை

வீட்டுப்பருப்பாக இருந்தாலும், ஆலைப்பருப்பாக இருந்தாலும,; கடைகளில் வாங்கிய பருப்பாக இருந்தாலும்  முளைப்புத்திறன் பார்ப்பது அவசியம்  கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி 10 பருப்புகளை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் 8 லிருந்து 9 பருப்பு  முளைந்திருந்தால் அவை 80 சதம் அல்லது 90 சதம் முளைப்புத் திறன் இருக்கிறது   6- 7 பருப்புகள் முளைத்தால் அவை விதைப் பருப்பின்  அளவை 10 கிலோ கூட்டி விதைக்க வேண்டும்.  இவை பயிர் எண்ணிக்கையை பராமரிப்புக்கு அவசியம். களைக்கொத்து கொண்டு ஆட்கள் மூலம் நடவு செய்யலாம், அல்லது உழவு சாலில் போட்டு விதைக்கலாம்.    

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டரும் , செடிக்கு செடி  10 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்யலாம் இதுவே ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும்.

 

ஊடு பயிர்

ஊடுபயிர் துவரை. தட்டப்பயறு, மக்காச்சோளம்,  சாகுபடி செய்து பூச்சி, புழுக்களை கட்டுப்படுத்தலாம்

 

உயிர் உரம்

2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா,  100 கிலோ ஆறிய மக்கிய தொழு எருவுடன் கலந்து வயலில்  ஈரம் இருக்கும் பொழுது  விதைக்க வேண்டும்.    

 

நுண்ணுரம்

ஒரு ஏக்கருக்கு கடலை நுண்ணுரம்  5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து  சீராகத் தூவி விட  வேண்டும்.    

 

நீர் நிர்வாகம்

10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம் மற்றும் பயிரின் நிலையை அறிந்து நீர் பாய்ச்சலாம். கண்டிப்பாக மூன்று முறை நீர்பாய்ச்சுதல் மிக முக்கியம் அதாவது பூ எடுப்பதற்கு முன்பு, பூக்கும் பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும்.

 

உர நிர்வாகம்

டி. ஏ.பி  ஒரு ஏக்கருக்கு 50 கிலோவை   வயலில் ஈரம் இருக்கும் பொழுது விதைத்து விட வேண்டும்.

 

களை நிர்வாகம்

ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்தலாம் 22ம் நாள் முதல் களை, 40ம் நாள் இரண்டாம் களை வெட்டும்போது ஜிப்சம் 100 கிலோ  இட்டு மண் அணைக்க வேண்டும்  )(களைக் கொல்லிகள் அடிக்கலாம்) புளுரோகுராலின் களைக்கொல்லி மருந்து ஏக்கருக்கு 800 மில்லி என்ற அளவில் 20கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சீராக தூவி விட வேண்டும் மருந்து இடும்போது மண்ணில் போதுமான ஈரம் இருக்கவேண்டும். இந்த களைக் கொல்லி அணைத்து களைகளையும் கட்டுப்படுத்தும் இவ்வாறு களைக்கொல்லி தெளித்தால் 30 நாள்வரை களைகளை கட்டுப்படுத்தலாம்.    

 

 

இலைவழி உரம்

 பூ பூக்க  ஆரம்பித்த போது 1 கிலோ  டி.ஏ.பி  400கிராம் அம்மோனியம் சல்பேட் 200 கிராம் போரிக் அமிலம்  முதல் நாள் ஊறவைத்து பின்னர் வடித்து 9லிட்டர் நீர், 1 லிட்டர் கரைசல், 10மில்லி டீபால் கலந்து  தெளிந்த நீரை எடுத்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

 

ஊட்டச்சத்து குறைபாடு

துத்தநாக குறைபாடு
இலை நரம்பிற்கு இணையாக இலேசான மஞ்சள் நிறக்கோடுகள் இலையின் பரப்பில் தோன்றும். முதிர்ந்த நிலையில் நரம்பில் பச்சைப் பற்றாக்குறை மற்றும் நுனிமொட்டு வளர்வது தடைபடும். துத்தநாகம் குறைவாக உள்ள மண்ணிற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.
இரும்பு குறைபாடு
நரம்புகளுக்கிடையே பச்சையக்குறைவு, நுனி மற்றும் வேர்களின் வளர்ச்சி குறையும். இந்த குறைபாட்டை நீக்க  ஒரு ஏக்கருக்கு 10 கிலோ இரும்பு சல்பேட் கரைசலை, விதைத்த 30 மற்றும் 50வது நாட்களில் தெளிக்கவேண்டும்.
போரான் குறைபாடு
இளம் இலைகளின் வளர்ச்சி தடைப்பட்டு, குட்டையான புதர் அமைப்பைத் தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு. விதையில்லாக் காய்களைத் தரும். போரான் குறைபாடுள்ள மண்ணிற்கு 10 கிலோ போராக்ஸ் மற்றும் 200 கிலோ ஜிப்சம் விதைத்த 45 வது நாளில் இடவேண்டும்.

 

 

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

இயற்கைமுறையில்   கட்டுப்படுத்த  

  • கோடை உழவின் போதுகூட்டுப்புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்
  • வயலில் 4 இடத்தில் விளக்குப் பொறி வைக்கலாம்.  அல்லது சொக்கப்பான் கொழுத்தி தாய் அந்துப் பூச்சிகள் நடமாட்டத்தைக் கண்டு  கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
  • முட்டைக் குவியல்களை பொறுக்கி அழித்து கட்டுப்படுத்தலாம்.
  • பச்சைப்புழுவிற்கு தனியாக N.P.V கரைசல் 100 மில்லி டீபால் கலந்து மாலை வேளையில்  தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • 6 வரிசைக்கு ஒரு வரிசை  தட்டப்பயிர் ஊடு பயிராகவும்,  ஆமணக்கு வரப்பு ஓரப் பயிராக நடவு செய்து   முட்டை பருவம், சிறு புழுக்களை கட்டுப்படுத்தலாம்

இரசாயன முறையில் கட்டுப்படுத்த 
குளோரி பைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு  3மில்லி அல்லது குயினஸ் பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அல்லது இமிடாகுளோபிரிட் 3 மில்லி என்ற அளவில் கலந்து  மாலை  வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

சிவப்பு கம்பளி புழு

அறிகுறி :
இலைகளை தின்று விடும் வெறும் குச்சிகள் மட்டும் காணப்படும்    
கட்டுப்படுத்தும் முறை    
ஒரு லிட்டர் தண்ணீருக்கு குளோரி பைரிபைரிப்பாஸ் 3 மில்லி, டைக்குளோராவாஸ் 1 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம் .   

 

பச்சைப்புழு

அறிகுறி    
இலையில் சிறு சிறு புழுவாக இருக்கும் இலையின் அடிப்பகுதியில் இலையை சுரண்டிச் சாப்பிடும்    
கட்டுப்படுத்தும் முறை -இயற்கை முறையில்    

  • ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 3சிசி கட்டலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறி ஒரு ஏக்கருக்கு 4 இடத்தில் வைத்து தாய் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
  • என்.பி.வி கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி தெளிக்க வேண்டும்
  • 5 கிலோ நெல் தவிடு , ½ கிலோ வெல்லம் , கார்பரில் மருந்து   ½ கிலோ, கலந்து  2 ½  லிட்டர் தண்ணீர் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து வயலில் ஆங்காங்கே மாலை வேளையில்  வைக்க வேண்டும். மண்ணிலிருந்து வெளிவரும்   புழுக்கள் அதை சாப்பிட்டு  இறந்து விடும்.    

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும்முறை    

குயினல்பாஸ், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி. ஒட்டுபசை சேர்த்து  
மாலை வேளையில் மட்டும் தெளிக்க வேண்டும்.

 

அசுவினி

அறிகுறி    
இலையில் கருப்பாக இருக்கும் இலையின் சாற்றை உறிஞ்சி செடியின் வளர்ச்சியை குறைக்கும்.    
கட்டுப்படுத்தும் முறை இயற்கைமுறையில்    
வாய்க்கால் பகுதிகளில் ஊடுபயிராக தட்டப்பயிர் நடவு செய்யலாம்.
இரசாயன முறையில் கட்டுப்படுத்தும்முறை    
இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி  என்ற அளவில் கலந்து  மாலை வேளையில் தெளித்து கட்டுப்;படுத்தலாம்.    

 

 

இலைப்புள்ளி நோய்

அறிகுறி    
இலையில் சின்னச் சின்னச் மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும் கடலை விளைச்சலில் சோடையாக இருக்கும் .   
கட்டுப்படுத்தும் முறை    
டைத்தேன் எம்.45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து  கட்டுப்படுத்தலாம்.

 

 

வேர்அழுகல்

அறிகுறி    
ஆங்காங்கே செடிகள் பட்டுக் காணப்படும். மழை அதிகம் இருந்தால் செடி காய்ந்து விடும் கடலையை எடுக்க முடியாது. செடி பிடுங்கிய இடத்தில் மண்ணை தோண்டினால் கடலை தென்படும்.  அவை கருப்பு கலராக இருக்கும். அந்த கடலைப்பருப்பை தின்றால்  இனிப்பாக இருக்கும்.    
கட்டுப்படுத்தும் முறை    
ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பன்டீசம் 3 கிராம் என்ற அளவில் கலந்து  அழுகிய வேரின் பக்கம் நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.  விதையின் மூலம் பரவும் நோய் ஆதலால் விதைநேர்த்தி மிகவும் அவசியம்.. டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில்  கலந்து விதைநேர்த்தி செய்தல் வேண்டும்.

 

 

தண்டு அழுகல்

முளைக்கும் விதையில் விதை அழுகல் ஏற்பட்டு முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. இளம் செடியில் தண்டு அழுகி இலைகள் மஞ்சள் நிறமாக பாதிக்கப்படும். மண் அருகில் தண்டுப்பகுதியில் கருப்பு நிற புஞ்சாண வளர்ச்சி காணப்படும்.    
கட்டுப்படுத்தும் முறை    
அறுவடைக்கு பின் காய்ந்த செடிகளை மற்றும் சறுகுகளை நீக்க வேண்டும். தொடர்ச்சியாக  கடலை பயிரிடக் கூடாது.  ஆழமாக விதை விதைக்கக் கூடாது. ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  அல்லது தாக்கப்பட்ட செடிகளைச் சுற்றி காப்பன்டீசம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் என்ற அளவில் கலந்து, கரைசலை  நன்கு நனையும் படி ஊற்ற வேண்டும்.

 

 

அறுவடை தொழில் நுட்பம்

முதிர்ந்த இலைகள் காய்ந்து மஞ்சள் நிறமாகி  கருப்பு நிற புள்ளிகள் தென்படும். 
செடியை பிடுங்கி பார்த்தால் கடளை பருப்புகள் முற்றியும் அவற்றின் ஓடுகள் கருப்பு நிற கோடுகளுடனும் காணப்படும். அந்த சமையத்தில் தண்ணீர் பாய்ச்சி கடலை செடியை  அறுவடை செய்யலாம்  இயந்திரத்தின் உதவியுடன் கடலையை அறுவடை செய்யலாம்.

 

 

முடிவுரை

நிலக்கடலை முக்கிய எண்ணெய் வித்து பயிராகவும், உணவுப் பொருளாகவும், நுண்சத்துக்களாகவும்  அதிகளவில்  பயன்படுவதால் அவற்றை இந்தியா மட்டும் அல்லாது மற்ற நாடுகளிலும் நிலக்கடலை சாகுபடி செய்து  பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை மானாவாரி பயிராகவும் இறவையிலும் சாகுபடி செய்து அவற்றின் உற்பத்தியை பெருக்க  முன்வருவோம்.