வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

ஆவூட்டம் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

ஆவூட்டம் என்பது நாம் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடையின் மூலம்     கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் ஒரு நிலவள ஊக்கியாகும்.  இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்கும். மண்வளத்தை பாதுகாக்கவும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் ஆவூட்டம் பெரிதும் உதவுகிறது. ஆகவே நாம் மண்ணை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

 

ஆவூட்டம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

பசுமாட்டுச் சாணம்                     -    5 கிலோ
மாட்டுச் சிறுநீர்                            -    5 லிட்டர்
5 நாள் புளிக்க வைத்த தயிர்     -    2 லிட்டர் 
பால்                                               -    2 லிட்டர்
நெய்                                               -    500 மில்லி
பனங்கருப்பட்டி                           -    1 கிலோ 
அரசம் பழம்                                  -    ½ -1 கிலோ

 

 

தயாரிக்கும் முறை

சாணத்தையும் உறுக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து 4 நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் கோமியத்தை சேர்த்து மண்பானையில் ஊறவிட்டு விடவேண்டும்.

ஊறவைத்த கலவையில் புளித்த தயிரையும், பாலையும் இத்துடன் பனங்;கருப்பட்டியையும் அவற்றுடன் ஊற்றி நன்றாக கரைத்துவிடனும் அவற்றில் அரசம்பழம் ஒருகிலோவை தோல் இல்லாமல் நன்றாக பிசைந்து ஊறவைக்க வேண்டும்  

இவ்வாறு ஊறவைத்த கரைசலை 22 நாட்களுக்கு தினமும் 3 முறை கலக்கி வர வேண்டும். ஆவூட்டம்  மிகச் சிறந்த மணத்துடன் இருக்கும்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறி பயிர்கள் எண்ணெய் வித்து பயிர்கள், பணப்பயிர்கள், பயிர்வகை பயிர்கள் மலர் வகைகள் போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

 

பயன்படுத்தும் முறை

இதை 35 - 50 லிட்டர் தண்ணீருக்கு  ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்து விடலாம்.
 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் கலந்து நாற்றுக்களை நனைத்து நடவு செய்யலாம்.

 

ஆவூட்டத்தின் பயன்கள்

  • இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.
  • வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது.
  • பூச்சிகளை விரட்டுகிறது
  • பயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.
  • சுற்றுப்புற சூழல் பாதிப்படைவதில்லை
  • பயிரில் சுவை, மணம் அதிகரிக்கும் 
  • தரமான காய்கறிகளாக இருக்கும்
  • பயிர் ஓரே சீராக இருக்கும்
  • தயாரிக்கும் முறை எளிது
  • தயாரிக்கும் செலவும் குறைவு

 

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை ( RSGA )
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி) 
திண்டுக்கல் மாவட்டம் -624 705. 
போன் நம்பர்   0451-2555745, 9952305745 
மின்னஞ்சல் - Rsgaseed@gmail.com  
வலைதளம்  WWW.L3FTN.COM, rsga.co.in
Facebook / rsgaseed kannivadi.
Youtube. – rsga seed

 

 

முடிவுரை

பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை  உருவாக்கலாம்.