வாழ்நாள் கல்வி

பணப்பயிர்கள்

வாழை சாகுபடி தொழில் நுட்பங்கள்

பணப்பயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

முன்னுரை  : Introduction
வாழை ஒரு பணப்பயிராகும்.  முக்கனிகளுள் ஒன்று வாழை  இவற்றை சாகுபடி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மணமக்களை வாழ்த்துவது கூட வாழையடி வாழை என்றுதான் வாழ்த்துவார்கள்.  வாழை நடவு செய்தால் போதும் அது பக்ககன்றுகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். இவை வெப்ப மண்டல பயிராக இருப்பதால் அதிக வெப்ப நிலையிலும் நீரிலும் வளர்ந்து மகசூல் தரக்கூயது. இதனுடைய இலைகள், காய்கள் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்யலாம். ஆகவே விவசாயிகள் அனைவரும்  வாழை  விவசாயம் செய்து அதிக லாபம் பெறலாம். 

 

 

ரகம்

பூவன், நேந்திரன், ரஸ்தாளி, ரொபோஸ்டா, மோரிஸ் செவ்வாழை, திசு வாழை

 

பட்டம்

கார்த்திகை – மார்கழி

 

வாழை கட்டை தேர்வு

ஈட்டி இலை, நோய் தாக்காதது. 9 முதல் 12 பட்டையுடைய கன்று
இருக்க வேண்டும்.
கட்டையின் அளவு 1 ½  முதல்  2½ கிலோ வரை எடை இருக்கவேண்டும்.

 

 

வாழை கட்டை நேர்த்தி

வாழைக் கட்டையை  நடவிற்கு முன் சேற்றில் நனைத்து எடுத்து பின்னர் அதன் மேல் பியூரடான் 20 கிராம்;  கட்டையில் தூவி நடவு செய்ய வேண்டும்
இயற்கையில் வாழை கிழங்கு நேர்த்தி
ஒரு கட்டைக்கு 10 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் இரண்டையும் கலந்து கட்டையை நனைத்து அரைமணிநேரம் வைத்திருந்து நடவு செய்யலாம்.

 

 

நிலம் தயாரித்தல்

மக்கியதொழுவுரம் ஒரு ஏக்கர்  5 டன் வயலில் இட்டு  3 முதல் 4 உழவுகள் போட வேண்டும். வயலில் கட்டிகள் களைகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

 

உயிர் உரம்

10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ  பாஸ்;போபாக்டீரியா, 5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி மூன்றையும் கலந்து அதில் ஆறிய மக்கிய தொழுஎரு 200 கிலோவுடன் கலந்து நடவு செய்த 30 ம் நாள் வாழைத் தூருக்கும் அருகில் வயலில் ஈரம் இருக்கும்பொழுது 250 கிராம் / கட்டை  என்ற அளவில் போடவேண்டும்.

 

நடவு முறை

ஒரு அடி குழி எடுத்து அதில் கட்டையின்  கிழங்;கு பகுதியில் இருந்து மேலாக 20 செ.மீ உயரத்தில் வெட்டிய கட்டையை குழியில் வைத்து மண்ணைப்போட்டு நன்றாக மிதித்து விட வேண்டும்.

 

பயிர் இடைவெளி

 ரொபோஸ்டா 6  x 6 அடி, 1210 கட்டைகள்  /   ஏக்கர்
 மோரிஸ் 5 ½  x  5 ½ அடி  ( 1440 கட்டைகள் / ஏக்கர்) 
 செவ்வாழை 8  x 8 அடி,  700 கட்டைகள்; / ஏக்கர் 
 பூவன் 7  x  7 அடி,  900 கட்டைகள்  / ஏக்கர்

 

 

நீர் நிர்வாகம்

தண்ணீர் தேங்;கக்கூடாது தண்ணீர் நின்றால் பூஞ்சாண நோய் தாக்க வாய்ப்புள்ளது. ஆனால் வயலில் ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

களை நிர்வாகம்

வாழை நடவு செய்த 30 ம் நாள் முதல் களையும் பிறகு  தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை களை வெட்ட வேண்டும்.

 

ஊடுபயிர்

ஊடு பயிரக பயறு வகைபயிகள் மற்றும் தக்க  பூண்டு; சணப்பை கொள், நரிப்பயறு போன்ற பயிர்கள் சாகுபடி செய்து  களையை கட்டுப்படுத்தலாம்.  மேலும் வாழைக்கு தேவையான தழைசத்தும் கிடைக்கும்.

 

உர நிர்வாகம்

110  : 30  : 330   / ஏக்கர் 
வாழை மரம் ஒன்றுக்கு 550 கிராம் அமோனியம் சல்பேட், 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 550 கிராம் பொட்டாஷ்  தேவை முழு அளவு மணிச்சத்து, பாதி அளவு தழைச்சத்து, பாதி அளவு சாம்பல் சத்து நடவு செய்த மூன்றாம் மாதம் 1  ½ அடி   தூரத்தில் 10 செ.மீ அழத்தில் வைக்க வேண்டும் மீதமுள்ள தழைச்சத்தையும், சாம்பல் சத்தையும் 5 வது மாதத்தில் வைக்க வேண்டும். 

 

 

பின்செய் நேர்த்தி

மாதம்  ஒருமுறை மண் வெட்டி, கொத்து கொண்டு மண் அணைக்கவேண்டும்.
மாதம் ஒரு முறை பக்கக் கன்றுகளை அகற்றவேண்டும்.

காய்ந்த மற்றும் நோய் தாக்கப்பட்ட இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்தால் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கடைசி சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை விடாமல் இருக்க முட்டுக் கொடுக்கவேண்டும். குறைக்காம்பு அழுகல்  நோயைத் தடுக்க கண்ணாடி இலைக்கொண்டு குலைக்க காம்பை மூடி விடவேண்டும். 

வெய்யிலினால் காய்கள் சேதம் அடைவதைத் தடுக்க, குலைகளை வாழை இலைகளைக் கொண்டு மறைத்து வைக்கவேண்டும். 

மரம் தூர்விடும் தருவாயில் மறுதாம்புப் பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கிவிடவேண்டும்.

 

 

கிழங்கு கூன் வண்டு

 கிழங்குகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு  துளைகள் காணப்படும்.
 இத்துளைகளில் சாறு வடிந்து நாளடைவில் மரம் காய்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும்முறை
 

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்தை கலந்து வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும்.

தண்டுத் துளைக்கும் வண்டு

அறிகுறி:

இவ்வண்டு சதைப்பற்றுள்ள வாழைத் தண்டில் சிறிய துளைகளிட்டு அதனுள் முட்டையிடும். துளைகளிலிருந்து பழுப்பு நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளிவரும். இது முதல் அறிகுறியாகும். பின்பு முட்டைகள் பொரித்து 3 முதல் 25 புழுக்கள் வரை தண்டினைக் குடைந்து உணவாக உட்கொண்டு வேகமாக வளரும். இதனால் தண்டின் திசுக்கள் பாதிக்கப்பட்டு வாழை இலையின் ஓரங்கள் காய்ந்து இலைகள் வெளுத்து விடும். இலைகள் கொத்தாக ஒரே இடத்திலிருந்து வெளிவருவதுபோல் காணப்படும். வாழைப்பட்டைகள் அழுகிவிடும். பூ வெளிவருவது பாதிக்கப்பட்டு. காய்களின் முதிர்ச்சியும் பாதிக்கப்படும். புழுக்களின் சேதம் அதிகமாக இருந்தால், மிக இலேசான காற்றில் கூட தாக்கப்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

வாழைத் தோட்டத்தில் அவ்வப்போது காய்ந்த இலைகளையும் சருகுகளையும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்கவேண்டும்.

பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிட வேண்டும்.
வண்டு தாக்கிய மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து பின்பு தீயிட்டு அழிக்கவேண்டும்.

மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன்  350 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இம்மருந்து கரைசலைத் தண்டின் அடிப்பாகத்திலிருந்து 60 செ.மீ உயரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள சாய்வாகக் கீழே நோக்கி தண்டினுள் ஆழமாகச் செலுத்த வேண்டும்.

இதே போன்று வாழைத் தண்டில் 150 செ.மீ உயரத்தில், கீழே செலுத்திய பக்கத்திற்கு எதிர்புறத்தில் மேலும் 2 மில்லி செலுத்தவேண்டும். மொத்தமாக ஒரு மரத்திற்கு நான்கு மில்லி அளவு மருந்து செலுத்தவேண்டும்.

மரத்தின் 5 வது மாதம் முதல் 8 வது மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து போடுவதன் மு{லம் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும். 


வாழை அசுவினி

இது வாழை முடிக்கொத்து நோயைப் பரப்பும் வைரஸ் கிருமியைப் பரப்புகிறது. இதனைக் கட்டுப்படுத்த கீழே காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவேண்டும். பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து  அடி வரை தெளிக்கவேண்டும். இதை 21 நாள் இடைவெளியில் சுமார் 1 மில்லி மோனோகுரோட்டோபாசை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள ஊசி மூலம் செலுத்தவேண்டும். குறை வந்த பிறகு மருந்து செலுத்தக்கூடாது.

 

கண்ணாடி இறக்கை பூச்சி

இவைகள் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால், இலைகளின் மேல் பாகத்தில் சிறிய வெள்ளை நிறப்புள்ளிகள் தென்படும். இதனால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்துதல்
ஏக்கருக்கு மீத்தைல் டெமடான் 20 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

நூற்புழுக்கள்
அறிகுறிகள் :
வேர்களிலும், கிழங்குகளிலும் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக பாக்டீரியா மற்றும் பூசண நோய்க்கிருமிகள் எளிதில் நுழைந்து நோய்களை உண்டாக்க ஏதுவாகும். தாக்கப்பட்ட வாழைகள் வாடும்.
கட்டுப்பாடு :
நடவுக்கு வாழைக் கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
கிழங்கில் மருந்திடல் (Paring and Prolinage) வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன்மீது 40 கிராம் கார்போஃபியூரான் குறுணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நட வேண்டும்.

 

வாடல் நோய்

வாழை நடவு செய்த 5-6 மாத வாழை மரங்களில் இந்நோய் தாக்கும். தாக்கப்பட்ட வாழையின்  இலைவிளிம்புகள் மஞ்சள் நிறமடையும். 8 அல்லது 9 மாதங்;களில் இந்நோய் தாக்கக் கூடிய மரங்களின் இலை ஒடிந்து தொங்;கி விடும். மரத்தின் அடியில் ஒரு வித துர்நாற்றம் வீசும்.  மண்ணை தோண்டிப் பார்த்தால் கிழங்கு அழுகி இருக்கும்.
 
கட்டுப்படுத்தும் முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் கரைத்து வேரில் கிழங்கு பகுதி நனையுமாறு காட்டில் ஈரம் இருக்கும் பொழுது ஊற்ற வேண்டும். அல்லது இரசாயன முறையில் கட்டுப்படுத்த வாழை மரத்தின் தூர்ப்பகுதியில் மண்ணை நீக்க வேண்டும்  2 வது, 4 வது,,  6 வது  மாதங்;களில் வாழை மரத்தின் கிழங்;கில்  45 சத கோணத்தில் 10 செ.மீ ஆழத் துளையிட்டு கார்பன்டீசிம் 2 சதக் கரைசல் 3 மில்லி  / மரம் என்ற அளவில்  ஊசி மூலம் செலுத்தி கட்டுப்படுத்தலாம்.

 

முடிக்கொத்து நோய்

இந்நோய் தாக்கப்பட்ட இலைகள்  சிறுத்து காணப்படும்; மரத்தின் வளர்ச்சி குன்றி இருக்கும். இலையின் ஓரங்களில்  இலையை மடக்கினால் படபடவென ஒடியும்.  இந்நோய் தாக்கப்பட்ட மரங்களில் குலை தள்ளாது. இவை அசுவணி மூலம் பரவுகிறது

கட்டுப்படுத்தும் முறை 

நோய்தாக்கிய வாழையை கிழங்;குடன் அகற்றி விட வேண்டும். குழியில் ஒரு கிலோ சுண்ணாம்பு இட்டு     மூடவேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி, கார்பன்டீசம் 2 மில்லி  / லிட்டர் தண்ணீர்  என்ற விகிதத்தில் கலந்து ஒரு மில்லி மருந்தை  நடவு செய்த மூன்றாவது மாதம் முதல் குலை தள்ளும் வரை 45 நாள் இடைவெளியில் அடி மரத்தில் ஊற்ற வேண்டும்.

 

இலைக்கருகல் நோய்

வாழையில் சிறிய இளமஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றி பின் பழுப்பு நிறமடையும்
.
இயற்கை முறையில்  கட்டுப்படுத்தும்முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் ஒட்டுபசையுடன் கலந்து அடிக்க வேண்டும்.

 ஒரு  லிட்டர் தண்ணீருக்கு   M  45  (2 கிராம்)  அல்லது கார்பன்டிசம் 1 கிராம்  /    கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 

காஞ்சார நோய்

 அறிகுறி

இலைகள் பழுத்து புள்ளிகள் விழுந்து காய்ந்து வழுவிந்து காணப்படும்

 கட்டுப்படுத்தும்  முறை

60 முதல் 70 சதம்  காய்ந்த இலைகளை  அறுத்து எடுத்துவிட வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் சூடோமோனஸ் ஒட்டுபசையுடன் கலந்து அடிக்க வேண்டும்.

இரசாயனமுறையில்  கட்டுப்படுத்தும்முறை

ஒரு  லிட்டர் தண்ணீருக்கு   M  45  (2 கிராம்)  அல்லது கார்பன்டிசம் 1 கிராம்  /    கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 

அறுவடைத் தொழில் நுட்பம்

முற்றிய காய்கள்  இளமஞ்சள் நிறமாக தெரியும்  போது அறுவடை செய்யலாம்.

 

முக்கிய குறிப்புகள்

வாழை குலையில் கடைசி சீப்பு வந்தவுடன் அதன் நுனியின் பூ பாகத்தை ஒடித்து விட வேண்டும். அதனால் காய் விரைவில் முதிர்ச்சி அடையும்

 

முடிவுரை

வாழை சாகுபடியில் செலவை குறைத்து அதிக மகசூல் எடுத்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த முறையை கடைப்பிடித்து  தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாப்போம்.