வாழ்நாள் கல்வி

உயிர்உரங்கள்

உயிர்உரங்கள்

உயிர்உரங்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

உயிர் உரங்கள் என்பது மண்ணில் வாழும் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களை உற்பத்தி செய்து அவற்றை நிலத்தில் பயன்படுத்துவதே  உயிர்உரம் ஆகும். உயிர் உரங்களை நிலத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதுடன், மண்ணில் அங்ககச்சத்துகளின் அளவும் அதிகரிக்கும். இதனால் மண்ணின் கார அமில தன்மை நடுநிலையாக இருக்கும். அதே சமயம் மண்ணில் புழுக்களும், நுண்ணுயி;ர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மண் வளம் கூடுவதுடன் நோய்களும் குறையும்

 

தழைச்சத்து

அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசிட்டோபேக்டர், அசட்டோபேக்டர் ஆகிய உயிர் உரங்கள்  பயிர்களுக்கு தழைச்சத்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம் பயிர்களின் வேர்மண்டலத்தில் தனித்து வளர்ந்து, காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து அதை மாற்றி தழைச்சத்தை பயிர்களுக்கு நிலைநிறுத்துகின்றன. அசோஸ்பைரில்லத்தை நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ரைசோபியம் பயறு வகை குடும்பத்தை சார்ந்த பயிர்களில் வேர் முடிச்சுகளில் வளர்;ந்து பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தை கொடுக்கும். அசிட்டோபேக்டர்  கரும்பு பயிர்களுக்கு தழைச்சத்து கொடுக்கும் உயிர்உரம். அசட்டோபேக்டர்  மலைத்தோட்ட பயிர்களுக்கு தழைச்சத்து கொடுக்கும் உயிர்உரம். இவ்வகை உயிர்உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்தை பெற முடியும்.

 

மணிச்சத்து

பாஸ்போபாக்டிரியா மணிச்சத்தை கொடுக்கும் உயிர்உரம். பாஸ்போபாக்டிரியா மண்ணில் வேரைச் சுற்றிய பகுதிகளில் வாழும் நுண்ணுயிர்களாகும். தமிழகத்தில் பேசில்லஸ் என்ற பாக்டீரியா மணிச்சத்தை கிரகித்து கொடுக்கிறது. இவ்வகை நுணணுயிர்கள் அங்கக அமிலங்களைச் சுரந்து, பயிர்களுக்குக் கிட்டா நிலையிலிருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கிடைக்கச் செய்கின்றன. பாஸ்போபாக்டிரியாவை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பாஸ்போபாக்டிரியாவை பயன்படுத்துவதால் பயிரின் வேர் வளாச்;சி, தண்டு வளர்ச்சி மற்றும் பூ காய்கள்; உருவாகும் திறனையும் அதிகப்படுத்தும். 

 

சாம்பல்ச்சத்து

பொட்டாஸ்போக்டிரியா மண்ணில் வேரைச் சுற்றிய பகுதிகளில் வாழும் நுண்ணுயிர்கள் இவ்வகை நுண்ணுயிர்கள் பல அங்கக அமிலங்களைச் சுரந்து, பயிர்களுக்குக் கிட்டா நிலையிலிருக்கும் சாம்பல்;சத்தைக் கரைத்துப் பயிருக்குக் கிடைக்கச் செய்கின்றன. பொட்டாஸ்பாக்டிரியாவை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். நம்ம பகுதியில் ப்ரடூசியா என்ற பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது.

 

வேம் (வேர் உட்பூசணம்)

வேம் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை கரைத்து பயிருக்கு கிடைக்குமாறு செய்கிறது. வேர்களில் நோயினை உண்டாக்கும் பூசணத்தினை வளரவிடாமல் பயிரின் வேரினைக் காக்கிறது. மேலும் மண்ணில் உள்ள நீரினை உறிஞ்ச வேர்களுக்கு கிடைக்க செய்யும். அங்கக கரிமச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது.

 

பி.பி.எப்.எம்

பி.பி.எப்.எம். என்பது மெத்தைலோ பாக்டீரியம். இது ஒரு நுண்ணுயிரி. இது பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் மற்றும் ஆக்ஸின்களை கொடுக்கிறது. இந்த நுண்ணுயிர் கரைசலை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். மேலும் மரப்பயிhகளுக்கும், பூச்செடிகளுக்கும் பயன்படுத்தலாம். வறச்சி சமயத்தில் பி.பி.எப்.எம் ஐ  காலை அல்லது மாலை நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 முதல் 200 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தால் 10 நாட்களுக்கு பயிர்கள் வறச்சியை தாங்கி இருக்கும். பயிர்கள் நல்ல பச்சை நிறமாக தோற்றமளிக்கும்.

 

குறிப்பு

குறிப்பு: இது போன்ற உயிர்உரங்களை பயன்படுத்தும் போது இதனுடன் இரசாயன உரங்களையோ, பூச்சி கொல்லிகளையோ பயன்படுத்த கூடாது.