வாழ்நாள் கல்வி

சின்ன வெங்காயம் சாகுபடி

சின்ன வெங்காயம் சாகுபடி

சின்ன வெங்காயம் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

காய்கறி பயிரில் சின்ன வெங்காயம் மிக முக்கிய பயிராக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சமையல் செய்வதற்கு அதிகளவு சின்ன வெங்காயமே பயன்படுத்தப்படுகிறர்கள். அதனால் இங்கு சின்ன வெங்காய சாகுபடி முக்கியபயிராக சாகுபடி செய்து வருகிறார்கள். மேலும் இது குறுகிய காலப்பயிராக இருப்பதால், விவசாயிகளுக்கு குறைந்த நாட்களில் நல்ல இலாபம் தரக்கூடிய பயிராகவும் இருக்கிறது.

 

பட்டம் மற்றும் இரகங்கள்

சித்திரை (மே - ஜுன்), புரட்டாசி (அக்டோபர் - நவம்பர்) ஆகிய பட்டங்களில் வெங்காயம் சாகுபடி செய்யலாம். கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ.என் 5 ஆகிய இரகங்களை தேர்வு செய்து இந்த பட்டங்களில் நடவு செய்யலாம். கோ 1 மற்றும் கோ.என் 5 இரகங்கள் 90 நாள் பயிh,; மற்ற இரகங்கள் 65 நாள் பயிர்.

 

விதையளவு

கோ 1, கோ 2, கோ 3, கோ 4 ஆகிய இரகங்களுக்கு 400 கிலோ விதை வெங்காய குமிழ்கள் தேவைப்படும் கோ ஒ.என் 5 இரகமாக இருந்தால் சுமார் 2.5 கிலோ வெங்காய விதை தேவைப்படும.

 

நிலம் தயார்செய்தல்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இரும்பொறை மண் உள்ள நிலம் சின்ன வெங்காய சாகுபடிக்கு உகந்தது. களிமண் வெங்காய சாகுபடிக் ஏற்றது அல்ல. வெங்காயம் நடவிற்கு முன் நிலத்தை உளிக்கலப்பை, வட்டக்கலப்பை மற்றும் கொக்கிக்கலப்பை மூலம் ஒரு முறை உழவு செய்ய வேண்டும். 

 

உரம்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் மற்றும் 150 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் ஒரு ஏக்கருக்கு 1 கிலோ அசோஸ்பைரில்லம், 1 கிலோ பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் 1 கிலோ என்றளவி;ல் இம்மூன்றையும் 20 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இடவும். மேலும், ஒரு எக்டருக்கு 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். மேலும், முன்குறிப்பிடப்பட்ட உயிர் உரத்துடன் 20 கிலோ துத்தநாகம் அல்லது பெரஸ் சல்பேட் இவ்விரண்டில் ஒன்றை கடைசி உழவுக்கு முன் இடவேண்டும்.

 

பயிர் இடைவெளி

பாருக்கு பார் 1 ½ இடைவெளியும் செடிக்கு செடி ½ அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

 

களை நிர்வாகம்

வெங்காய பயிருக்கு கை கலை எடுப்பதே நல்லது. களை கொல்லியை பயன்படுத்துவதாக இருந்தால் விதை நடவு செய்த மூன்றாம் நாள் தெளிக்கவும்.

 

நீர் மேலாண்மை

வெங்காயம் நடவு செய்த பிறகும் மூன்றாம் நாலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

 

 

இலைப்பேன் தாக்கம்

வெங்காயப் பயிரில் பேன் போன்ற  பூச்சிகள்; இலை இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகளில் வெண்திட்டுக்கள் போன்று காணப்படும். இதன் தாக்குதல் அதிகரிக்கும் போது இலையின் நுனிப்பகுதி கருக தொடங்கும். இலைப்பேனை கட்டுப்படுத்த வெறும் தண்ணீரை பீச்சி அடித்து இலைப்பேன்களை அழிக்க முடியும்;;. தாக்குதல் அதிகம் இருக்கும் பட்சத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மிலி புரோபனோபாஸ் மருந்துடன் 100 மிலி ஒட்டுபசை கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

 

 

வேரழுகல் நோய்

வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறியாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, மெதுவாக காய ஆரம்பிக்கும். செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும். வெங்காயம் அழுகி அதன் மீது வெள்ளை நிற பூஞ்சாணம் வளர்ந்திருக்கும். இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 
வெங்காயத்தில் வேரழுகல் நோய் வராமல் தடுக்க விதை நேர்த்தியாக 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை, ஒரு கிலோ விதை வெங்காயத்துடன் கலந்து நடவு செய்தல் வேரழுகல் நோய் வராமல் தவிற்கலாம். 

 

புழுக்கள் தாக்கம்

வெங்காயத்தில் புழுக்கள் தாக்கினால் அவற்றை கட்டுப்படு;த்த ஓரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குயினால்பாஸ் மருந்து அல்லது 4 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்து இவற்றுடன் ஒட்டும் திரவம் கலந்து வெங்காயத்தில் பயிரில் தெளித்து,  புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

 

நுனிகருகல் நோய்

வெங்காயத்தில் நுனி கருகல் நோயினால் நுனி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் கருகிவிடும்;. நுனி கருகல் நோயினை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம்;  சாப் மருந்து அதனுடன்; ஒட்டுப்பசையுடன் கலந்து வெங்காய வயலில் தெளித்து நுனி கருகல் நோயினை கட்டுப்படுத்தலாம். 

 

அறுவடை

வெங்காய வயலில் 50 சதவீத வெங்காயத்தாள் காய்ந்தவுடன் அறுவடையை துவங்கலாம். அறுவடை செய்த வெங்காயத்தின் மேல் தோல்களை நீக்கி 10 முதல் 15 நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும.; பின் உலர்த்திய வெங்காயத்தை காற்றோட்டம் உள்ள அறைகள் அல்லது பட்டிகளில் சேமித்து வைக்கலாம்.