வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

மூலிகை தயிர் மிக்சர் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

விவசாயத்தில்  அதிகமான இரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண்வளம், மனிதனின் உடல் நலம்,  சுற்றுபுற சூழலும் பாதிக்கப்பட்டு உள்ளது.  இவற்றை பாதுகாக்க மனிதர்கள் இயற்கை விவசாயத்தில்  ஈடுபடுகிறார்கள்;. இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பயிர்வளர்ச்சி ஊக்கிகளில் ஒன்றுதான் மூலிகை தயிர் மிக்சர் இவற்றை தயாரிக்க குறைந்த செலவே ஆகும்.  ஆனால் நிறைவான மகசூலை கொடுக்கக் கூடியது. பயிர்களுக்கு தெளிக்கும் போது  மண்ணின் வளம் பாதுக்காக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டதாகவும் உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் மூலிகை தயிர் மிக்சர் தயாரித்து  பயன்படுத்த முன் வருவோம். 

 

மூலிகை தயிர் மிக்சரின் பயன்கள்

இக்கரைசல் பயிர்களுக்கான ஒரு மூலிகை மருந்தாகும்.
மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கம் செய்யும்.
காய்கறிகள், பழங்கள் அதிக சுவையுடையதாக இருக்கும்.
சுற்றுப்புறச்  சூழல் பாதுகாக்கப்படுகிறது.
பயிர்கள் காய்கறிகள், ஒரே சீராகக் காணப்படும்.
பழ அழுகல் நோயைக் கட்டுப் படுத்தும்.
பழ ஈயைக் கட்டுப்படுத்தும்
பூக்கள் உதிராது
25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும்,75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது

 

 

மூலிகை தயிர் மிக்சர் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

வேப்பங்கொட்டை பவுடர்    -  1 கிலோ
பசுமாட்டுத்தயிர்            -  2 லிட்டர்
அதிமதுரம் தூள்            - 10 கிராம்
கடுக்காய் பொடி            -  10 கிராம்
தண்ணீர்                   -  5 லிட்டர்
பசுங்கோமியம்             -  3 லிட்டர்

 

 

தயாரிக்கும் முறை

முதல் படி
 
முதலில் வேப்பங்கொட்டை பவுடர் 1 கிலோவை 5 லிட்டர்  நீரில்     12 மணி நேரம்  ஊற வைக்க வேண்டும். பின் இதனை வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். எடுத்த சாறுடன் 3 லிட்டர் பசுமாட்டுக் கோமியம் சேர்க்க வேண்டும். இக்கரைசலுடன் 2 லிட்டர் பசுந்தயிரையும்  சேர்க்க வேண்டும்.

இரண்டாம்படி

இக்கரைசலை 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு இதனை வடிகட்டி அதில் அதிமதுரம் தூளையும். கடுக்காய் பொடியையும் சேர்க்க வேண்டும். தூய்மையான வேப்ங்கொட்டை மூலிகை தயிர் மிக்சர் சாறு 8 லிட்டர் கிடைக்கும்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள் ,தானியப்பயிர்கள், பயறுவகைப் பயிர்கள், எண்ணைவித்து. மரப்பயிர்கள்; போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 

 

 

பயன்படுத்தும் முறை

ஒரு லிட்டர் கரைசலுடன் 9 லிட்டர் நீர் கலந்து  காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம் 

 

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டியது

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை (RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி அஞ்சல், கன்னிவாடி வழி, திண்டுக்கல் மாவட்டம் - 624 705.
போன் நம்பர் - 0451-2555745 
மின்னஞ்சல் rsgaseed @gmail.com 
வலைதளம்; -WWW.L3FTN.COM, rsga.co.in
முகநூல்  Facebook /rsgaseedkannivadi
Youtube    - rsgaseed

 

முடிவுரை

மூலிகை தயிர் மிக்சர் தயாரித்து பயன்படுத்தி வருவதால் மகசூல் கூடுவதுடன் சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது செலவும் குறையும் நம்மிடம் உள்ள பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.  இயற்கை விவசாயம் செய்து மூலிகை தயிர் மிக்சரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.