வாழ்நாள் கல்வி

சம்பங்கி பூ சாகுபடி

சம்பங்கி பூ சாகுபடி

சம்பங்கி பூ சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

தமிழ்நாட்டில் 1600 ஹெக்டேருக்கு அதிகமாக சம்பங்கி மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மலர் அதிகளவு மாலை கட்டுவதற்கும், வாசனை திரவியம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி விவசாயிகள் சம்பங்கி மலரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிகளவு வருமானம் ஈட்டுகிறார்கள். சம்பங்கி சாகுபடி விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய பயிராக இருப்பதால் புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துகிறார்கள். 

 

சம்பங்கி இரகங்கள்

சிரிங்கார், பிரஜ்வால், அர்கா நிரந்தர், பூளே ரஜனி ஆகியவை ஓரடுக்கு மலர் வகையைச் சார்ந்தது. இதில் பிரஜ்வால் மற்றும் அர்;கா நிரந்தரா என்ற இரகங்கள் உயர் விளைச்சலை தரக்கூடியது. பிரஜ்வால் இரக சம்பங்கிபூ மொட்டில் இளஞ்சிவப்பாகவும,; மலர்ந்தவுடன் வெள்ளையாகவும் இருக்கும். இந்தரகம் நடவு செய்த 95 நாட்;களில் இருந்து அறுவடை செய்யலாம். வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு 18 டன் மகசூல் கிடைக்கும். அர்;கா நிரந்தரா இரகம் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு 22 டன்கள் மகசூல் கிடைக்கும். இது நடவு செய்ததிலிருந்து 90 நாட்;களில் முதல் பூ அறுவடை செய்யலாம். இந்த காரணங்களால் விவசாயிகள் இந்த இரண்டு இரகங்களை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். 

 

ஈரடுக்கு பூவிதல் கொண்ட சம்பங்கி இரகங்கள்

சுவாசினி, வைபவ் ஆகிய இரகங்கள் ஈரடுக்கு பூவிதழ் கொண்ட இரகங்கள். சுவாசினி இரகம் நீளமான பூங்கொத்தில் தடிமனான பெரிய பூக்களைக் கொண்டது. பூங்கொத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் சீராக மலரும் தன்மை கொண்டது. வைபவ் ரக பூக்கள் பச்சை நிறமாகவும், விரிந்தபின் வெள்ளை நிறமாகவும் காணப்படும். இது சுவாசினி இரகத்தைவிட 50 சதவிதம் கூடுதல் விளைச்சல் கொடுக்கவல்லது. ஈரடுக்கு பூவிதல் இரகங்கள் பூங்கொத்து தயாரிப்புக்கு மற்றும் பூஜாடியில் வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

பட்டம்

ஜூன், ஜூலை (ஆனி-ஆடி) மாதங்களில் நடவு செய்யலாம். தண்ணீர் வசதி இருந்தால் சம்பங்கியை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். 

 

விதையளவு

ஒரு ஏக்கருக்கு 500 - 600 கிலோ கிழங்கு தேவைப்படும். கிழங்குகள் சிறிதாக இல்லாமல் குறைந்தது 25 முதல் 30 கிராம் எடை இருக்க வேண்டும். கிழங்குகளை எடுத்து முப்பது நாட்கள் கழித்து நிலத்தில் ஊன்ற வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

சம்பங்கியை உவர் மற்றும் களர் நிலங்கள் உட்பட எல்லாவகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.  சம்மங்கிக்கு  மணல் கலந்த வண்டல் மண்  மிகவும் உகந்தது. சம்பங்கி நடவு செய்ய நிலத்தை நன்கு புழுதிபட 5 உழவுகள் ஓட்ட வேண்டும். களைகள் அதிகம் முளைக்காமல் இருக்க நிலத்தை உழுது நன்கு ஆறப்போட வேண்டும். பின் ஆட்டு கிடை வைத்து உழவு ஓட்டவும்;. கடைசி உழவில் அடியுரமாக டி.ஏ.பி. 50 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ இடவும். ஆட்டு கிடை போடவில்லை என்றால் 8 - 10 டன் தொழு உரம் இடவேண்டும்.

 

சம்பங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்தல்

சம்பங்கி கிழங்கு நடுவதற்கு தேர்வு செய்யும்போது செடி நட்டு 4 வருடம் ஆன தாய் செடியில் இருந்துதான் கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். சம்மங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்யாமல் நடவு செய்தால் அதிகம் பூஞ்சாணங்கள் தாக்கி கிழங்குகள் அழுகிவிடும். முளைப்புதிறனும் குறைந்து காணப்படும்.  அதனால் பூஞ்சாண பாதிப்பு வராமல் இருக்க விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். அதாவது ஓரு ஏக்கரில் சம்மங்கி நடவு செய்ய 500 முதல் 600 கிலோ விதை கிழங்கு தேவைப்படும். இந்த 500 கிலோ விதை கிழங்கை விதைநேர்த்தி செய்ய 3 கிலோ சூடோமோனஸ், 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி,  3 கிலோ வேம்,  3 கிலோ மக்கிய மாட்டுச்சாணம்  இவை அனைத்தையும்; 30 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்பு அந்த கரைசலை சம்மங்கி கிழங்குகளில் ஊற்றி நன்றாக பிறட்டி நிழலில் ஒரு மணிநேரம் உழரவிட்டு அதன் பிறகு எடுத்து நடவு செய்ய வேண்டும்.  

 

 

கிழங்கு நடும் முறை

வெங்காயத்திற்கு போடும் பார் அளவை விட சிறிய கரையாக இருக்க வேண்டும்.  ஒரு குத்திற்கு 6 கிழங்குகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 45 சென்டி மீட்டர் இடைவெளியும். செடிக்கு செடி 40 சென்டி மீட்டர் இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்து உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

 

உரநிர்வகம்

சம்பங்கி நடவு செய்த பின் மாத்திற்கு ஒரு முறை 500 கிலோ ஆட்டு எரு மற்றும் 50 கிலோ கடலை புண்ணாக்கு (தண்ணீரில் ஊற வைத்து ஊற்ற வேண்டும்) வைக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் தொடர்ந்து பூ வந்து கொண்டே இருக்கும

 

நுண்ணுட்ட உர நிர்வாகம்

சம்மங்கிக்கு போரான் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியம். அதனால் தண்ணீர் வடிவில்; கிடைக்கும் போரான் நுண்ணூட்டம் உரத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் கலந்து அதனுடன் ஒட்டு பசை சேர்த்து சம்மங்கி வயலில் மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இலைவழியாக போரான் நுண்ணூட்டம் உரம் கொடுப்பதால் பூ  மலர்வதற்க்கு நீண்ட நேரம் எடுத்துக்கும். இதனால் பூ சந்தையில் நல்ல விலைக்கு போகும். 

 

மெக்னிசியம் சத்து

சம்மங்கி பூ சிறுத்து இருத்தல், பூ உதிர்தல் போன்ற குறைபாடுகள் இருந்தால் அது மெக்னிசியம் சத்து பற்றாகுறை ஆகும். மெக்னிசியம் சத்து பற்றாகுறையால் பூக்களின் காம்பில்  கருப்பாகவும், பூக்கள் சிரிதாகவும் இருக்கும். சில சமயம் பூக்கள் உதிரவும் செய்யும். இதனால் சம்மங்கி வயலில் இவ்வகை ஆறிகுறிகள் தென்பட்டால் மெக்னிசியம் - இடிடிஏ (EDDT) வை வாங்கி 10 லிட்டர் தண்ணீர்க்கு 15 கிராம் வீகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

இலை பேன்

சம்மங்கியில் இலை பேன் தாக்குதலால் இலைகள் சுருங்கி, சுருண்டும் இருக்கும். இலைகளை உற்று கவனித்தால் பேன்கள் இருப்பது தெரியும். இதனால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்படும். இந்த இலை பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி புரப்போனோபாஸ், இதனுடன் ஒட்டு பசை கலந்து, இலை பேன் தாக்கப்பட்ட சம்மங்கி வயலில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

சம்மங்கியை சேதப்படுத்தும் வெட்டுக்கிளி

சம்மங்கியில் வெட்டுக்கிளி  இளைகளையும், மலர் மொட்டுக்களையும்  வெட்டி தின்று நாசம் செய்யயும். இதனால் மகசூல் இலப்பு ஏற்படும். இதனால் வெட்டுக்கிளிகள் அளித்திட 15 நாட்களுக்கு ஒருமுறை டைமீத்தேயேட் எனும் பூச்சி மருந்தை 1 லிட்டர் தண்ணீர்க்கு 3 மில்லி என்ற அளவில் களந்து தெளிக்க வேண்டும். 

 

மாவுபூச்சி

பருவநிலை மாற்றம் ஏற்ப்படும் சமயத்தில் சம்மங்கியில் மாவுபூச்சியின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த மாவுபூச்சிகள் செடியில் ஒட்டிகொண்டு சாற்றை உறுஞ்சுவதால் செடி வாடி காய்ந்துவிடும். மாவுபூச்சியினால் தாக்கப்பட்ட இலைகள் மடிந்து இருக்கும். செடிகளில் எறும்புகள் ஊறிக்கொண்டிருக்கும். இந்த மாவுபூச்சியை கட்டுப்படுத்த, முதலில் கிழே மடங்கியிருக்கும் இலைகளை அறித்து எடுத்து காட்டுக்கு வெளியே போட்டு தீ வைக்க வேண்டும். பின்னர் வெறும் தண்ணீரை செடிகள் மீது நன்கு படும்படி தெளிக்கவும். அதன்பிறகு 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி மீன் எண்ணெய், 30 மில்லி நிம்புசிடின், 10 மில்லி இமிடாகுளோர் இதனுடன் ஒட்டுதிரவம் சேர்த்து சம்மங்கி வயலில் தெளித்து மாவுபூச்சியை கட்டுப்படுத்தலாம் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் கோமியம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்

 

நூற்புழு தாக்கம்

நுற்புழு தாக்கத்தின் அறிகுறியாக சம்பங்கி வேர்களில் கருப்பு நிற சிறு முடிச்சுகள் இருக்கும். இலைகள் இளம் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். தண்ணீர் அதிகமாக பாய்ச்சுவதன் மூலம் சம்பங்கி வயலில் நூற்புழு தாக்கம் உண்டாகும். அதனால் தேவைக்கு ஏற்ப்ப தண்ணீர் பாய்ச்சவும். நூற்புழு தாக்குதலின் அறிகுறி தென்பட்டால் செடி ஒன்றுக்கு 20 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 10 கிராம் பெசிலியோமைசிஸ் ஆகியவற்றை வேர்பகுதியில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

 

இலைப்புள்ளி நோய்

சம்பங்கியில் இலைப்புள்ளி நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, பூக்கள் அதிகம் பிடிக்காமல் இருக்கும். சம்பங்கியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீர் 10 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து, இலைகள் மற்றும் தூர் பகுதியில் தெளிக்க வேண்டும் இதன் மூலம் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம் அல்லது மாங்கோசெப் என்னும் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

கிழங்கு அழுகல் நோய்

கிழங்கு அழுகல் நோய் பெரும்பாலும் நூற்புழு தாக்கத்தினால் வரும். இந்நோயை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ், மற்றும் பேசில்லஸ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 1 கிலோ வீதம் மக்கிய எருவில் கலந்து வயலில் இடவேண்டும் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.