வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

பாகற்காயில் காய்த்துளைப்பான் தாக்குதல்

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

அன்றாட உணவில் பாகற்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது பாகற்காயை விவசாயிகள் பந்தல் முறையில் சாகுபடி செய்து வருகிறார்கள் பாகற்காயில் வைட்டமின் ஏ. சி. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. பாகற்காயை அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் வெள்ளை மற்றும் பச்சையில் பெரியது என இரண்டு வகை உள்ளன கேரளாவில் பாகற்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது எனவே பாகற்காயை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து காய்ப்புழுவை தடுக்க வழிவகை செய்து மகசூலை கூட்டுவோம்.

 

நிலம் தயார் செய்தல்

நிலத்தை நன்றாக 4 முதல் 5 உழவுகள் செய்து கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் இடவேண்டும். வயல் கல், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் இல்லாமலும்.  கட்டிகள் இல்லாமலும் பொது பொதுப்புடன் இருக்க வேண்டும் பிறகு  10 அடிக்கு 10அடி என்ற அளவில் பார் அமைக்க வேண்டும். இவை கிழக்கு மேற்காக இருக்கனும் வயலுக்குள் சூரிய ஒளி நன்கு படுமாறு பார் கரை அமைக்க வேண்டும்.

 

ரகம் தேர்வு செய்தல்

ரகம் வீரிய ஒட்டு ரகமான ஈஸ்ட்வெஸ்ட், நாம்தாரி போன்ற பிற கம்பெனி ரகங்களும் உள்ளன அவற்றை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். அவற்றை சரியான பட்டத்தில் தமிழுக்கு புரட்டாசி, ஐப்பசி  ( செப்டம்பர்- அக்டோபர்) மாதங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி இடைவெளி 2அடி பாருக்கு பார் 10 அடி இடைவெளி இருக்கனும். 

 

நாற்று போடும் முறை

வயலில் அப்படியே நடவு செய்வதை விட நாற்று போட்டு நடவு செய்தால் நன்றாக இருக்கும் குழித்தட்டுக்களை வாங்கி வந்து அவற்றில் தென்னை நார் கழிவு மற்றும் உயிர் உரங்களை  கலந்து குழித்தட்டுக்களை நிறப்பி அவற்றில் விதைகளை நட வேண்டும். 

 

விதை நேர்த்தி

ஒரு ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவைப்படும் விதையை நடவு செய்வதற்கு முன்பே ஒரு நாள் இரவு முழுவதும் நூல் துணியில் விதையை கொட்டி முடிந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். அடுத்த நாள் எடுத்து நடவு செய்வதற்கு முன் விதையை 100 கிராம் அசோஸ்பைரில்லம்,100 கிராம் பாஸ்போபாக்டீரியா 10 கிராம் விரிடி, 10 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றை 200மில்லி ஆறிய அரிசி வடிகஞ்சியில் கலந்து விதையில் ஊற்றி நன்கு கலந்து  விதைநேர்த்தி செய்து  ஒரு மணிநேரம் நிழலில் உலர வைத்து அதன் பிறகு நடவு செய்யலாம். விதை  7 நாட்களில் முளைத்தவிடும். 4 இலைகள் வந்தவுடன் ( 20 நாட்கள்) குழித்தட்டிலிருந்து எடுத்து நாற்றை நடவு செய்யலாம்.

 

உயிர் உரம் இடல்

நாற்றை நடவு செய்த உடன் ஒரு ஏக்கருக்கு  2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 1 கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 200 கிலோ மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில் கலந்து ஒரு வாரம் வரை நிழலில் வைத்திருந்து அதன் பிறகு  வயலுக்கு தண்ணிர் பாய்ச்சிவிட்டு பிறகு எடுத்துப் போட வேண்டும். 

 

நுண்ணூட்டம்

நடவு செய்த 15 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு காய்கறி நுண்ணூட்டம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட வேண்டும்.

 

பந்தல் முறை

செடி நன்கு கொழுந்து அடித்து ஓடும் பொழுது அவற்றில் இடையில் உள்ள  நரம்புகள் மற்றும் சிம்புகளை ஒடித்து விட்டு அடி இலையில்  சணல் கயிறு கொண்டு கட்டி பந்தலில் ஏற்றி விடனும் பிறகு கொழுந்து ஒடும்.  கொடிக்கு கொடி  பின்ன விடாமல்  அவற்றை  நேருக்கு நேராக பந்தலில் படர விடவும். 

 

இரசாயன உரம்

ஒரு ஏக்கருக்கு யூரியா 60 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 240 கிலோ பொட்டாஷ்  64 கிலோவை கலந்து பாத்திகளில் லேசாக தூவிவிட்டு தண்ணீர் பாய்ச்சி பிறகு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். மேலுரமாக 20 க்கு 20  உரத்தை ஒரு ஏக்கருக்கு 50 கிலோ பொட்டாஷ் 30 கிலோ இடவேண்டும்.

 

வளர்ச்சி ஊக்கி

மகசூலை அதிகரிப்பதற்காக பிளானோபிக்ஸ் பாகற்காய் நடவு செய்த 45- 65  நாட்களில் ஒரு லிட்டர்  (நல்ல தண்ணீராக இருக்க வேண்டும்) தண்ணீருக்கு 0.25 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இவற்றை தெளிப்பதால் 120 நாட்களில் பூ உதிர்வதையும் தடுக்கும்.  அல்லது   டிரைகான்டினால் என்ற பயிர் ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து பயிர் பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில்  தொடர்ந்து மூன்று முறை தெளிக்க வேண்டும். அல்லது போரான் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2மில்லி கால்சியம் 2மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

 

காய்ப்புழு தாக்குதல்

அறிகுறி
பாகற்காயில் சாகுபடியில் பழ ஈ மிகுந்த சேதத்தை உண்டு பண்ணும் இவை முதலில் சிறிய பிஞ்சாக இருக்கும் பொழுதே காயில் ஓட்டை போட்டு பழ வண்டு முட்டை இட்டு விடும்   பிஞ்சு பழுப்பு கலராக இருக்கும் பாகற்காயில் சேதத்தை உண்டு பண்ணி விடும். பிறகு காயை பார்த்தால் கோனலாக இருக்கும்.

 

 

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடங்களில் வைத்து இந்த பழ ஈயை கவர்ந்து அழிக்கலாம் இனக்கவர்ச்சி பொறி வயலில் பூ பரவலாக எடுக்கும் பொழுதே வைத்து விட வேண்டும். பொருளாதார சேதநிலையை கட்டுப்படுத்தி மகசூலை கூட்டலாம். 
விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் பேசிலஸ் துருஞ்சியன்ஸ் பாக்டீரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து அடிக்கலாம்.

 

 

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

குவினால் பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மல்லி அல்லது குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

முடிவுரை

சாகுபடி செலவை குறைக்கவும் நல்ல தரமான காய்கறியை உற்பத்தி செய்ய  இயற்கை பூச்சி கொல்லி முறைகளை கடைப்பிடித்து  காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.