வாழ்நாள் கல்வி

காய்கறி சாகுபடி

தக்காளியில் இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதல்

காய்கறி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

உலக அளவில் தக்காளி ஒரு முக்கிய காய்கறி பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி அதிக சத்துக்துணவு கொண்ட காய்கறியாக இருப்பினும் அதில் வைட்டமின் ஏ.மற்றும் டி சி. சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது.  தக்காளி பயிரை அதிகம் சேதப்படுத்தும்   இலை தின்னும் புழு மற்றும் காய்ப்புழுவை கட்டுப்படுத்தினாலே நல்ல மகசூல் கிடைக்கும் கட்டுப்படுத்த நல்ல தரமான விதைகளை வாங்கி தகுந்த நேரத்தில் சாகுபடி செய்து தக்காளி உற்பத்தியை பெறுக்குவோம்.

 

தக்காளி சாகுபடியில் நிலத்தேர்வு செய்தல்

நிலத்தை நன்றாக 3முதல் 4 உழவுகள் போட்டு உழவு செய்து வரப்பு ஓரங்களை மண்வெட்டியால் வெட்டி நன்றக களையில்லாமல் வைக்கவும் பின்பு கடேசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 10 டன் இடவேண்டும்  பின்பு அவற்றை ரகத்திற்கு ஏற்றவாறு பாத்திகள் அமைக்க வேண்டும்.

 

உயிர் உரம் இடல்

ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம்2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ, சூடோமோனஸ் 2 கிலோ, பிவேரியா பேசியானா 2கிலோ இவற்றை 200 மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில்  நன்றாக கலந்து அவற்றில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை உயிர் உரக் கலவையில் தெளித்து நன்குபிரட்டி  நிழல்பகுதியில் ஒருவாரம் வரை வைத்திருந்து அதன்பிறகு பாத்தியில் உள்ள பார்களில் போட்டு நாற்றுக்களை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும்.

 

இரசாயன உரம்

ஒரு ஏக்கருக்கு யூரியா 60 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 240 கிலோ பொட்டாஷ் 64 கிலோவை கலந்து பாத்திகளில் லேசாக தூவிவிட்டு தண்ணீர் பாய்ச்சி பிறகு நாற்றுக்களை  நடவு செய்ய வேண்டும். 

 

நடவு முறை

நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட விரியமுள்ள   நாற்றுக்களை அசோஸ்பைரில்லம்.விரிடி இவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் ஒவ்வொன்றிலும் எடுத்து ஆரிய அரிசி வடிகஞ்சியில் கலந்து நாற்றின் வேர்பாகத்தை இவற்றில் நனைத்து அதன்பிறகு பாருக்கு பார் 3 அடியும் செடிக்கு செடி 2அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.நடும் பொழுது தண்ணீர் பாய்ச்சி நடவு செய்யனும் அதன்பிறகு 3நாட்கள் கழித்து உயிர் தண்ண்Pர் பாய்ச்ச வேண்டும்.பிறகு 35 நாட்களில்  களை எடுக்க வேண்டும் திருப்ப எப்பெல்லாம் களைகள் உள்ளதோ அப்பொழு எல்லாம் களை எடுப்பது அவசியம்.

 

மேலுரம் இடுதல்

தக்காளி நடவு செய்த 35 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 35 கிலோ யூரியாவை களை எடுத்த சமையத்தில் போட வேண்டும் இந்த சமையத்தில் மேலுரம் இடுவது பூக்கள் பிடிக்கவும் காய் அதிகம் பிடிக்கவும் உதவுகிறது. இரண்டாவது மேலுரமாக 55 நாட்களில் 35 கிலோ யூரியா இடவேண்டும் பிடித்த காய்கள் நன்கு திரட்சியாக இருக்கும்.

 

நுண்ணூட்டம்

தக்காளி நட செய்த 30 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு காய்கறி நுண்ணுரம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து தூவி விட வேண்டும்.

 

வளர்ச்சி ஊக்கி

மகசூலை அதிகரிப்பதற்காக பிளானோபிக்ஸ் தக்காளி நடவு செய்த 45- 65-  நாட்களில் ஒரு லிட்டர்  (நல்ல தண்ணீராக இருக்க வேண்டும்) தண்ணீருக்கு 0.25 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இவற்றை தெளிப்பதால் 120 நாட்களில் பூ உதிர்வதையும் தடுக்கும்.  அல்லது   டிரைகான்டினால் என்ற பயிர் ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து பயிர் பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில்  தொடர்ந்து மூன்று முறை தெளிக்க வேண்டும்.

 

இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதல்

தக்காளியில் தழைச்சத்து அதிகமாக இடும்பொழுது பச்சைக்காய்ப்புழுவின் தாய் அந்துப்பூச்சி இலையின் பின்புறம் முட்டை இட்டுவிடும் குற்சுகள் பொரித்து விட்டு இலையின் பின்புறத்தில்  உள்ள பச்சையத்தை உறிஞ்சி விடும். இலை கோடு கோடாக இருக்கும்.
அறிகுறி
தக்காளி இலையில் வெண்மை நிற கோடுகள் தெரியும் பச்சையம் இழந்து காணப்படும் இலையை சுரண்டிப் பார்த்தால் இலை கண்ணாடி போல வெளிறிய நிறத்தில் தெரியும். மகசூல் பாதிக்கும் பூ பிடிக்காது பிடித்த பூக்கள் கொட்டி விடும் மகசூல் இழப்பு ஏற்படும்.

 

 

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

  • கோடை உழவு செய்து  கூட்டுப்புழுவின் முட்டை பருவத்தை கட்டுப்படுத்தலாம்.
  • ஊடுபயிர் சாமந்திப்பூ சாகுபடி செய்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் 
  • ஆமணக்கு பயிரை வரப்பு ஓரங்களில் வளர்த்து காப்புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்
  • ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 5 சி.சி கட்டலாம்
  • இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் பேசிலஸ் துருஞ்சியன்ஸ் பாக்டீரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து அடிக்கலாம்
  • என்.பி.வி. கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி  என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
  • இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு10 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்
 

இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் தயாரிப்பு முறை

இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம், பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர்  மாட்டுக் கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலில் 300 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக் கேற்ப தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

இரசாயன முறையில் கட்டுப்படுத்தும் முறை

குவினால் பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மல்லி அல்லது குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

 

முடிவுரை

சாகுபடி செலவை குறைக்கவும் நல்ல தரமான காய்கறியை உற்பத்தி செய்ய  இயற்கை பூச்சி கொல்லி முறைகளை கடைப்பிடித்து  இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.