வாழ்நாள் கல்வி

தானியபயிர்கள்

மக்காச்சோள சாகுபடியில் பயிர் இடைவெளி

தானியபயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பொதுவாக மக்காச்சோள சாகுபடியில் பயிர் இடைவெளியும், பயிர் எண்ணிக்கையும் மகசூலை நிர்ணயிக்கும். மேலும் பட்டத்தில் சாகுபடி செய்வதன் மூலமும் மகசூல் இழப்பை தவிர்க்க முடியும். ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம், மற்றும் தைப்பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது மிகவும் நல்லது. இவற்றை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

 

மக்காச்சோள வகைகள்

மக்காச்சோளம் உணவிற்காகவும், கால்நடை தீவனத்திற்கும் மற்றும் பிற பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. இதில் குழந்தை மக்காச்சோளம், புரத மக்காச்சோளம், இனிப்பு மக்கச்சோளம் மற்றும் பொறி மக்காச்சோளம் என நான்கு வகைகளான மக்காச்சோளங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. புரத மக்காச்சோளத்தின் தேவை அதிகம் இருப்பதால் அனைத்து நாடுகளும் புரத மக்காச்சோளத்தை அதிகளவு சாகுபடி செய்கின்றன

 

நடவு இடைவெளியும் மகசூலும்

சில மக்காச்சோள இரகங்களை குறைவான இடைவெளியில் நடவு செய்வதால் தோகைகள் (இலைகள்) அடர்தியாக மூடிக்கொள்ளும். இதனால் மக்காச்சோள தட்டையின் கீழ் வரக்கூடிய பெண்பூவில் ஆண்பூவின் மகரந்தங்கள் விழும் போது படாமல் போகும்இ இதனால் மக்காச்சோள கதிரில் மணிகள் பிடிக்காமல் மகசூல் இழப்பு ஏற்ப்படும். அதனால் போதிய இடைவெளி விட்டு விதைகளை நடவு செய்ய வேண்டும். ஆனால் தோகைகள் (இலைகள்) விரியாமல் மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும் மக்காச்சோள இரகங்கனை தேர்வு செய்து நடவு செய்யும்போது நெருக்கமாக நடவு செய்யலாம்; இதனால் மகரந்த சேர்க்கை தடைபடாது.

 

வேர்கள் ஓட்டம் மற்றும் காற்றோட்டம்

மக்காச்சோள பயிர்களை போதிய இடைவெளி விட்டு நடவு செய்வதால் வேர்களின் ஓட்டம் அதிகரிக்கும் மேலும் வேர்களுக்கு நல்ல காற்றோட்டமும் கிடைக்கும். இதனால் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் எளிதில் கிடைத்து பயிர் செழித்து வளரும். போதிய இடைவெளி விட்டு நடவு செய்வதால் களை எடுப்பின் போதும் களைச்செடிகளை எளிதில் கட்டுப்படுத்த முடியும். அதனால் பரிந்துரை செய்யப்பட்ட இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

 

நடவு இடைவெளி

மக்காச்சோளத்தில் இரகங்களை பொருத்து பயிர் இடைவெளி விடவேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு செடிக்கு செடி 45 செ.மீ இடைவெளி இருக்கும்படி விதைகளை நடவு செய்யவேண்டும். பாருக்கு பார் 60 செ.மீ இடைவெளியும் விட வேண்டும். அதாவது வீரிய ஒட்டு இரகத்திற்கு ஒரு சதுரமீட்டருக்கு 8 முதல் 10 செடிகள் இருக்குமாறு 4 செ.மீ ஆழத்தில் விதைகளை ஊண்றவேண்டும். மற்ற இரகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட அளவுபடி இடைவெளி விடவும்.

 

முடிவுரை

மக்காச்சோள சாகுடி செய்யும் விவசாயிகள் இரகங்களை தேர்வு செய்யும் போது அந்த விதை பையில் கூறியுள்ளதுபடி தேவையான இடைவெளி விடவும். அல்லது வேளாண்மைத் துறையை அனுகி ஆலோசனை பெறவும்