வாழ்நாள் கல்வி

தானியபயிர்கள்

மக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு

தானியபயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

உணவிற்காகவும், கோழித்தீவனத்திற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காக மக்காசோளம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காசோள உற்பத்தியினை பூச்சி தாக்குதல் பாதிக்கிறது எனவே மக்காசோள உற்பத்தியை அதிகரிக்க பூச்சி மேலாண்மை மிகவும் முக்கியம். மக்காச்சோளத்தை முன்று வகையான புழுக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது அவை குருத்து புழு, தண்டுத்துளைப்பான் மற்றும் கதிர்களை சேதப்படுத்தும் கதிர் துளைப்பான்

 

மக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு

மக்காச்சோளம் நடவு செய்த 20 முதல் 30 நாட்களான இளம் பயிரினை குருத்து ஈயின் இளம் புழுக்கள் தாக்குகின்றன. இதன் புழுக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இளம் புழுக்கள் இலை உறைக்கும், தண்டிற்கும் இடையே துளைத்து குருத்தினை சேதப்படுத்தி துண்டித்து விடுகின்றன. இதனால் நாளடைவில் குருத்து அழுகி செடி மடிந்து விடுகிறது. பொதுவாக பட்டம் கடந்து பயிர் செய்வதால் இப்புழுவின் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. அதனால் பட்டத்தில் சாகுபடி செய்ய வேண்டும். ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டங்களில் மக்காச்சோளம் நடவு செய்தால் குருத்து ஈ மற்றும் குருத்து புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 

 

குருத்து புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை

குருத்து குருத்து புழு தக்குதல் வராமல் இருக்க மக்காச்சோளம் அறுவடைக்கு பின் நிலத்தை உழவேண்டும். பூச்சி மருந்தினால் விதை நேர்த்தி செய்த விதைகளை தேர்வுசெய்து நடவேண்டும். குருத்து புழு தக்குதல் தென்பட்டால் வேப்பங்கொட்டை சாறு தயார் செய்து தெளிக்கலாம் அல்லது பிவேரியா பூஞ்சானத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என கலந்து தெளிக்கவும் அல்லது மீன் கழிவு பொறியை (மண்ணென்ணெய் கலந்த தண்ணீர் தட்டு நடுவில் ஒருகட்டையில் மீன் கழிவை வைக்க வேண்டும்) தயார்செய்து வயல்களில் வைத்து குருத்து ஈயின்  தக்குதலை கட்டுப்படுத்தி குருத்து புழு தாக்குதல் வராமல் தவிற்கலாம். இரசாயண முறையில் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 

 

தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்

மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பான்  புழு மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இது மக்காச்சோள பயிரின் தண்டுப் பகுதியை குடைந்து உட்புறத்தை தாக்குவதால் நடக்குறுத்து காய்ந்து விடும். இளம் புழுக்கள், பயிரில் மறைந்து வரும் மூடிய இலைகளை உண்பதால் சன்னல் போன்ற துவாரங்கள் தோன்றும் மேலும், இலைகளின் நடுநரம்பு பகுதியில் சிவப்புநிற கோடுகள் தென்படும். தாக்கப்பட்ட பயிரின் அடித்தண்டு பகுதியில் துவாரங்கள் தெரியும் இத்தகைய சேதாரங்களால் மக்காச்சோள கதிர்களில் மணிப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. மகசூலும் வெகுவாக குறைந்து போய் விடுகிறது.

 

தண்டு துளைப்பான் புழுவின் வளர்ச்சி பருவம்

தண்டு துளைப்பானின் தாய்ப்பூச்சிகள் வைக்கோல் நிறத்தில் காணப்படும்.. இந்த தாய்ப் பூச்சிகள் மக்காச்சோளப்பயிரை தாக்கி அதன் நடுரம்புகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும். இந்த நடுவரம்புகளில் பகுதியில் தங்கி இருந்தபடி அங்கேயே 400 முட்டைகள் வரை இடும். இப்படி இடப்படும் முட்டைகளில் இருந்து 7 முதல் 10 நாட்களில புழுக்கள் பொறிந்து வெளிரும். இப்படி வரும் இளம் புழுக்கள் பயிரின் தண்டுக்குள்ளேயே 28 முதல் 40 நாட்கள் வரை வளர்கின்றன. பிறகு 10 நாட்கள் கூட்டுப்புழு பருவத்தை முடித்து அந்துப் பூச்சிகளாக வெளிவருகின்றன. இதன் நடமாடடம் இரவில் தான் இருக்கும். இந்த பூச்சியின் தாக்குதல் என்பது, மக்காச்சோளம் நட்ட 30 நாளிலிருந்து கதிர்கள் வெளிவரும் வரை காணப்படும்.

 

தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை

தண்டு துளைப்பான் தாக்குதலை ஓருங்கிணைந்த மேலாண்மை முறைகள் மூலம் கட்டுப்படுத்த தட்டைப் பயிரை ஊடுபயிராக 4 வரிசைக்கு 1 வரிசை என்ற அளவில் பயிரிடவேண்டும். கோடை உழவு செய்து புழுக்களின் முட்டைகளை அழிக்கலாம. மேலும் பூச்சி தாக்கத்திற்கு எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செயய்வும். பொருளாதார சேத நிலையை தாண்டும் போது கார்பரில் 50 சத நனையும் தூள் ஓரு ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது குயினால்பாஸ் 5 சத குருணை மருந்தை 8 கிலோ, 20 கிலோ மணலுடன் கலந்து குறுத்து இடுக்குகளில் இடவேண்டும்.

 

தண்டு துளைப்பானை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை

வயல்களில் விழக்கு பெறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். அல்லது வேப்பம் எண்ணெய்5 மில்லி 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அதனுடன் ஒட்டு திரவம் சேர்த்து தெளிக்கவும் 

 

முடிவுரை

பொதுவாக மக்காச்சோளம் சாகுபடி செய்யும்போது விவசாயிகள் தரமான கம்பெனி விதைகளை வாங்கி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும். பூச்சிகளின் தாக்கம் வராமல் இருக்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைபிடிக்க வேண்டும்.