வாழ்நாள் கல்வி

பணப்பயிர் சாகுபடி

பருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல்

பணப்பயிர் சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பருத்தி ஒரு முக்கியமான பணப்பயிராக  இருப்பதால் அவற்றை உற்பத்தி செய்வதில்  இந்தியா  முதலிடம் வகிக்கிறது இதேபோல மற்ற நாடகளிலும் பருத்தியை உற்பத்தி செய்துவருகிறார்கள். பருத்தி வறட்சியை தாங்கி வளரும் பயிர் பருத்தியை பார்கட்டி விதை நடவு செய்தால் தண்டு கூன் வண்டி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்

 

தண்டு கூன் வண்டு தாக்குதல்

தண்டு கூன் வண்டு 3 - 5 மி.மீ. அளவில் கறுப்பு நிறத்தில் இருக்கும் இக்கூன்வண்டு பருத்திச் செடியின் இளம் பருவத்தில் தண்டுப்பகுதியில் முட்டை இடுகின்றன. தண்டுப் பாகத்தின் உட்பகுதியில் புழு தின்று வளர்வதால் தரைமட்டத்திற்கு மேல் உள்ள தண்டு பாகம் வீங்க ஆரம்பிக்கிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி காய்ந்து விடுகின்றன. மேலும் வீங்கிய பகுதி வலு விழந்து காணப்படும்.  பலமான காற்று வீசும் போதும்; ஒடிந்து விடும் அவ்வாறு ஒடியாமல் இருக்க மண் அணைப்பு செய்ய வேண்டும். 

பருத்தி நடவு செய்து 30 - 40 நாட்களுக்குள் தாக்கப்பட்டால் அந்த செடிகள் இறந்துவிடும். ஒரு செடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருக்கலாம். அப்போது செடியில் அடுத்தடுத்து வீக்கம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட செடிகளின் காய்பிடிப்பு பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். மேலும் பஞ்சு மற்றும் நூலின் தரம் குறைந்துவிடும். வயலில் 15 - 20 சத தாக்குதல் இருக்கும்போது பெரும் ந ஷ்டம் ஏற்படும்.

 

தண்டு கூன்வண்டின் வாழ்க்கை சுழற்சி

தண்டு கூன் வண்டுகள் ஒரு செடிக்கு 7 முதல் 8 முட்டைகள் வரை இடுகின்றன. பத்து நாட்களில் வெளிவரும் புழுக்கள் இரண்டு மாத காலம் வரை தண்டினுள் வளரும். இறுதியில் 10 நாட்களுக்கு கூட்டுப் புழுக்களாக இருந்துவிட்டு தாய் வண்டாக வெளிவருகின்றன. பருத்தியின்   6 - 7 மாத பருவ காலத்தில் 3 தலை முறைகள் வரை உற்பத்தியாகிப் பெருகுகின்றன.

அறிகுறி
 
18 முதல் 25 நாட்களில் தோன்றிவிடும் ஆனால் 70க்கு மேற்பட்ட நாட்களில் விவசாயிகளுக்குத் தெரியும் அடித் தண்டுப் பகுதி வீங்கி பெறுத்து காணப்படும் ஆங்காங்கே செடிகள் வாடியும் ஒடிந்தும் காணப்படும் காற்று அதிகமாக அடித்தால் வயலில் உள்ள செடிகள் 60 முதல் 70 செடிகள்  வரை ஒடிந்து விடும். தண்டுக் கூன் வண்டின் தாய்ப் பூச்சி துத்திச்செடி இருந்தால் விரும்பி அதில் இருக்கும்.

 

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

  • தண்டு கூன் வண்டு  விரும்பி வசிக்கும் இடம் துத்திச் செடி ஆகையால் முதலில்  துத்திச் செடியை வயலில் இருந்து அப்புரப்படுத்தி விட வேண்டும். 
     
  • பழைய பருத்திக் கட்டைகளை வயலிலிருந்து அப்புறப் படுத்தி அழித்துவிட்டு புதிய நடவு செய்ய வேண்டும்.
     
  • தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். 
     
  • தண்டு கூன் வண்டிற்கு எதிர்ப்பு திறன் கொண்ட எம் சியு 3 போன்ற ரகப் பருத்திகளை பயிரிடலாம்.
     
  • நெருக்கமான நடவும் செடிகளுக்கு சரியான மண் அணைப்பு பராமரிப்பு முறைகளையும் 35-40 வது நாள் அடிப்பகுதியை மூடி மண் அணைக்க வேண்டும்.
     
  • நடவு செய்த  20 நாட்கள் கழித்து  ஒரு ஏக்கருக்கு  கார்போபியூரடான் 10 கிலோ  அவற்றுடன் 3 பங்கு மணலுடன் கலந்து தூறுக்கு அடியில் இட்டு, மண் அணைக்க வேண்டும். 
     
  • பருத்தி நடவு செய்த 3 வது வாரத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் குளேரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி. என்ற அளவில் கலந்து தூர் பகுதி மற்றும் தூர் பகுதியை சுற்றியுள்ள மண் பரப்பும் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.
     
  • பருத்தியில் காணப்படும் தரைக் கூண்வண்டை கட்டுப்படுத்த 20-25 கிலோ வெங்காயத்தை சணல் பையில் இட்டு ஒரு மரக்கட்டைக் கொண்டு நசுக்கி, அப்படியே அந்த சணல் பையை நீரோட்டத்தில் போட்டால் போதும் (குஜராத்).
 

தொகுப்புரை

பருத்தி சாகுபடியில் செலவை குறைத்து அதிக மகசூல் எடுத்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த முறையை கடைப்பிடித்து  தண்டு கூன்வண்டு தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாப்போம்.