வாழ்நாள் கல்வி

தானியபயிர்கள்

மக்காசோளத்தில் நுண்ணூட்ட பற்றாக்குறை

தானியபயிர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

உலகத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் தானிய பயிர் மக்காச்சோளம். மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்க முதலிடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. மக்காச்சோளம் உணவிற்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் மற்றும் பல உபயோகத்திற்க்கு பயன்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மக்காசோளம்  சாகுபடி செய்யப்படுகிறது

 

பட்டம் மற்றும் ரகம்

மக்காச்சோளம் ஆண்டுமுழுவதும் பயிரிடலாம். மானாவாரியாக ஆடிப்பட்டத்திலும் (ஜூன் - ஜூலை), புரட்டாசிப் பட்டத்திலும் (செப்டம்பர் - அக்டோபர்) பயிர் செய்யலாம். இறவையில் தைப்பட்டத்திலும் (ஜனவரி, பிப்ரவரி), சித்திரைப்பட்டத்திலும் (ஏப்ரல்-மே) மாதத்திலும் சாகுபடி செய்யலாம். வீரிய ஒட்டு ரகங்களை அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம்

 

நிலம் தயாரித்தல்

நிலத்தை நான்கு உழவு செய்ய வேண்டும். பின் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ டி.ஏ.பி.யை உழவின் போது அடியுரமாகவும் போடலாம். அல்லது பாக்டம்பாஸ் 75 கிலோ, ஜிப்சம்  200 கிலோ இட வேண்டும். மேலும் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 25 கிலோ பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 600 கிலோ மக்கிய எருவில் கலந்து அடியுரமாக இடலாம்

 

விதையளவு மற்றும் விதை நேர்த்தி

ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்க்கு 7 - 8 கிலோ  விதை தேவைப்படும். தேவையான அளவு விதைகளை 200 கிராம், அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா அதனுடன் ஆறிய அரிசி வடிகஞ்சி கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 

 

நடவு முறைகள்

ஆடி பட்டத்தில் வீரிய ஓட்டு ரக மக்காசோளம் மற்றும் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ரகமான கோ-ர்-5 மக்காச்சோளத்தை நடவு செய்யலாம்ஒரு ஏக்கருக்கு சிறிய சோளமாக இருந்தால் 6 கிலோவும் பெரிய சோளமாக இருந்தால் 7 கிலோவும் விதை தேவைப்படும். மக்காச்சோளம் நடவு செய்வதற்கு முன் விதை சோளத்தை விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

 

உயிர் உரம்

நடவு செய்த 3ம் நாள் 100 கிலோ மக்கிய தொழுஎருவுடன்  2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா  இவை இரண்டையும்  கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது இடவேண்டும்.

 

 

ஊடுபயிர்

மக்காச்சோளத்துடன் உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப்பயிறு, சோயாமொச்சை போன்ற பயிறுவகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மானாவாரி சாகுபடியில் மழை பொய்க்கும் நிலையில் வருவாயைப் பெறமுடியும் மேலும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். சாதாரண சாகுபடி சூழலில் நிலத்தின் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு நீர் பிடிப்புத்தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கும். 

 

உர நிர்வாகம்

30ம் நாள் 1 ஏக்கர்ருக்கு அமோனியம் சல்பேட் 40 கிலோ, 20 கிலோ பொட்டாஷ் வைத்து மண் அணைக்க வேண்டும்.  50ம் நாளில் 50 கிலோ அமோனியம் சல்பேட்டை செடியின் அருகில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்  

 

 

நுண்ணூட்டம் பற்றாக்குறையின் அறிகுறி

பயிர் வெளிர் மஞ்சள் நிறமாக காணப்படும். மேலும்; ஆண் பூவிலிருந்து மகரந்தம் குறைவாக வெளிப்படும் இதனால் மகரந்த சேர்கை குறைந்து கதிர்கள் சொட்டையாகவும் இருக்கும்.  

 

நுண்ணூட்ட உரம்

மக்காச்சோளம் நடவு செய்து 5-ஆவது நாள் ஓரு ஏக்கருக்கு 5 கிலோ சிறு தானிய நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து தூவி விட வேண்டும். இவ்வாறு உரநிர்வாகம் செய்வதால் மக்காச்சோளத்தில் நுண்ணூட்ட பற்றாக்குறையை தவிர்க்கலாம்

 

நுண்ணூட்ட பற்றாக்குறையை கட்டுப்படுத்த

முதல் வாரத்தில் வயலில் நுண்ணுட்ட உரம் போடாதவர்கள் 30 வது நாள் சிறுதானிய நுண்ணுட்ட உரத்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில்  கலந்து மாலை வேளையில் இலைவழியாக தெளிக்க வேண்டும்.

 

மெக்னீசியச் சத்து குறை

மக்காசோளத்தில் மெக்னீசியச் சத்து குறையால் சோள தட்டையின் மேல்பகுதியில் உள்ள இலைகளில் நரம்பிடைப்பகுதிகளில் மஞ்சள் நிற வரிகள் தோன்றி பழுப்பு நிறமா காணப்படும். இந்த பற்றாக்குறை அறிகுறி காணப்பட்டவுடன் மெக்னீசியம் சல்பேட் 5 கிராம்,  ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பூ பூக்கும் போதும், கதிர் தோன்றும் போது தெளிக்க வேண்டும்.

 

முடிவுரை

பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதன் மூலம் மக்காசோளத்தில் நுண்ணூட்ட பற்றாகுறை மட்டும் இல்லாது மற்ற சத்து பற்றாகுறைகளையும் தவிற்கலாம். மேலும் மணிச்சத்து மற்றும் துத்தநாக (ஜிங்க) சத்து பற்றாக்குறையால் மக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமல் போகும். இதனை தவிர்க்க மண்பரிசோதனை செய்து அதன்படி பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடவேண்டும்.