வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

கருத்தரிக்காத நிலை

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பொதுவாக கால்நடைகள் குறிப்பாக கறவை மாடுகள் மீண்டும் மீண்டும் கருவூட்டல் செய்வதையும் (Repeater) கிடேரிக் கன்றுகள் உரிய பருவத்தில்  சினைப் பருவத்தை அடையாத நிலையையும் கருத்தரிக்காத நிலை என்கிறோம்.

கருத்தரிக்காத நிலைக்கான காரணங்களை காண்போம். அவையாவன

  • பசுவின் பங்கு
  • பால் உரிமையாளரின் பங்கு
  • கருவூட்டுபவரின் பங்கு
 

பசுவின் பங்கு

பருவ அறிகுறிகள் நன்கு காணப்படும்,குவளை  கண்ணாடி போன்று இருக்கும் ஆனாலும் கருப்பிடிக்காது  இதற்கான காரணங்கள்  சினைப் பருவத்தில் சூலத்தில் உருவான சினை முட்டையானது (Ovum) உதிர்ந்து சூலக்குழாயின் மேல் பகுதியில் காளையின்  விந்தணுவுடன் இணைந்து கருத்தரித்தல்  நடைபெறுகிறது. சில சமயங்களில்  முட்டை உதிராத காரணத்தால் இந்த நிகழ்வு நடைபெறாது இதையே (Anovulation) என்கிறோம். இதற்கான காரணங்கள்.

  • சூலக்குழாயில் ஏற்படும் தொற்று காரணமாக உருவான சீழ் அடைப்பு காரணமாக விந்தணு மேல் நோக்கியும் கருமுட்டை கீழ் நோக்கியும் பயணிப்பதில் சிரமம் ஏற்படின் கருத்தரிக்க இயலாத நிலை ஏற்படும்.
  • கருப்பையின் உள்ளுறை புண்ணாகி சீழ் பிடித்து  இருந்தால் (காணப்பட்டால்) கருத்தரிக்க இயலாத நிலை ஏற்படும்.
  • சினைப்பையின் வாய் அகன்று காணப்பட்டாலும் கருத்தரிக்க இயலாத நிலை ஏற்படும்.
  • கருப்பையின் வாய் வளைந்து காணப்பட்டாலும் கருத்தரிக்க இயலாத நிலை ஏற்படும்.
 

பால் உரிமையாளரின் பங்கு

  • சரியான பருவ நிலையில் பசுவை கருவூட்டலுக்கு கொண்டு செல்வதில்லை.
  • நோய் தொன்று ஏற்பட்ட பொலி காளைகளுடன் இனச்சேர்கை செய்வதால்.
  • பயிற்சி பெறாத நபர்கள் வாயிலாக கருவூட்டல் செய்வதால்.
  • பிரசவகாலத்தில் முரட்டுத்தனமாக கன்றை வெளியில் எடுத்தல்.
  • நஞ்சுக் (மாசி) கொடியை வெளியில் எடுப்பதில் உண்டாகும்  பிரச்சனைகள்.
 

கருவூட்டுபவரின் பங்கு

  • தரமான விந்துகுச்சிகளை பயன்படுத்தா விடில் கருத்தரிக்காது.
  • நேர்த்தியான கருவூட்டல்
  • விந்துகுச்சியை முறையாக பராமரிக்கா விடில் கருத்தரிப்பதில் சிக்கல்
  • உறைவிந்து குச்சியை திரவ நிலைக்கு கொண்டு வருவதில் கவனமின்மை.
  • கருவூட்டல் செய்யும் நேரம்.
 

வெற்றிகரமான கருவூட்டலுக்கு சில ஆலோசனைகள்

  • சினைபருவத்தை கண்காணித்து உரிய நேரத்தில் கருவூட்டல் செய்தல்
  • தரமான விந்துக் குச்சியை பயன்படுத்தி கருவூட்டல் செய்தல்
  • கருவூட்டிய 30-45 நிமிடங்கள் ஒய்விற்கு பின் நடத்தி  அழைத்துச் செல்லுதல்
  • கருவூட்டல் செய்த பின்னரும் குவளை வெளிப்பட்டால் மீண்டும் கருவூட்டுதல்
  • கருப்பையில் தொற்று மற்றும் கருப்பை வளர்ச்சியின்மை இருப்பின் கால்நடை மருத்ததுவரின்  உதவியுடன்  முறையான  சிகிச்சை செய்து அதன் பின்  கருவூட்டல் செய்தல்.
 

தொகுப்புரை

சினை பருவ காலத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்து வெற்றிகரமாக கருவூட்டல் செய்து வருடம் ஒரு கன்று என்ற நிலை ஏற்பட்டால்தான் பால்மாடு வளர்ப்பு இலாபகரமான தொழிலாக இருக்கும், இதில் தவறுகள் ஏற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் எனவே பசுவின் உரிமையாளர் மிகுந்த கவனத்துடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.