வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பு

காணைநோய் (கோமாரி)

கால்நடை வளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

பொதுவாக இந் நோய் நச்சுயிரால் (Virus) ஏற்படுகிறது.நச்சுயிரி “O”,  “A”, “C” மற்றும் “ஏசியா” என நான்கு வகைப்படும். மேலும் இது ஒரு தொற்று நோயாகும். சாதராரணமாக இந்நோய் காற்றின் மூலம் பரவக் கூடியதாகும். தமிழ் நாட்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

 

நோய்கான அறிகுறிகள்

  • கடுமையான காய்சல் இருக்கும் 
  • நாக்கில் கொப்புளங்கள் காணப்படும்.
  • குளம்புகளில் புண் ஏற்படும்
  • அதிகமாக எச்சில் சுரந்து வடியும்.
 

நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

நோய் கண்ட கால்நடைகளால் தண்ணீர் குடிக்கவோ, உணவு உட்கொள்ளவோ முடியாது. குளம்புகளில் புண் ஏற்பட்டுள்ளதால்  நடக்க இயலாது பாதிப்பிற்கு உள்ளான கால்நடையில் பால் மூலம் இந்நோய் கிருமிகள் பரவுவதால் கன்றுகள் பால்  குடித்தவுடன் இறந்து போகும்.

 

நோய் தென்பட்டவுடன் செய்ய வேண்டியது.

நோய் கண்ட கால்நடையை தனிமைப் படுத்த வேண்டும். அத்துடன் கொப்புளங்கள் இரண்டு மற்றும் மூன்று தினங்களில் உடைந்து பசு மிகவும் சிரமப்படும், குளம்புகளில் உள்ள புண்ணில் புழுக்கள் உண்டாகி பசுவிற்கு வலி உண்டாகும். எனவே குளம்புகளில் உள்ள புண்ணில் பூட்டாக்ஸ் மருந்தை ஊற்றினால் புழுக்கள் இறந்து வெளியேறி விடும். மேலும் கிருமிநாசினி கொண்டு கொட்டத்தை சுத்தம் செய்ய வேணடும்.

 

நோய்கு பின்னர்

பொதுவாக இந்நோய் கண்டகால் நடைகள் உயிர் இழப்பு குறைவு எனினும்  பொருளாதார இழப்பு அதிகம். பாலைக் குடிக்கும் கன்றுகள் இறந்து விடுகின்றன. மேலும் பால் வற்றிப்போகும், சினைகளைகிறது. மேலும் கருத்தரிக்காத நிலை ஏற்படும், பெருரோமங்கள் உண்டாகி கால்நடைகள் விகாரமாக காணப்படும். மேற்கண்ட அனைத்தும் நிரந்தரமானவை இதை மாற்ற இயலாது

 

தொகுப்புரை

காணைநோய்க்கு மருத்துவம் இல்லை நோய் எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன. காணைநோயை கட்டுப்படுத்த காணைதடுப்பூசி போட்டுகொள்வதே சிறந்தாகும். எனவே கால்நடை வளர்ப்போர் நோய் வரும் முன் காணை தடுப்பூசி போட்டு பொருளாதான இழப்பை தவிர்த்தல் நலம். அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாக கால்நடைகளுக்கு காணை தடுப்பூசி போடப்படுகிறது.